பங்களாதேஷ் தொடருக்கான இலங்கை அணி

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 18 வீரர்களை உள்ளடக்கிய இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கிரிக்கெட் நிறுவனம் திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணி எதிர்வரும் 8 ஆம் திகதி பங்களாதேஷிற்கு செல்லவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கமைய முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னர் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியொன்றில் இரு அணிகளும் விளையாடவுள்ளன. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அடுத்த மாதம் 15 ஆம் திகதியும், … Read more

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளை முதல் நீக்கப்படும் சேவைகள்

நாட்டிலுள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நாளை முதல் சில சேவைகளை விலக்கிக் கொள்வதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இன்றைய தினம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். அதற்கமைய அனைத்து விமான நிலையங்களிலும் விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான சேவையில் இருந்து விலகவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஒரு தீர்வு எட்டப்படும் வரை விசேட பிரமுகர் முனைய நுழைவாயில்களுக்கான … Read more

இன்றும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மே 05ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மே 05ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான … Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்த பாராளுமன்றத்தில் விவாதம்

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான பிரதிநிதிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் குறித்து அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்களின் கீழ் நிதி அமைச்சரினால் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட கூற்றுத் தொடர்பான விவாதம் பி.ப 5.30 மணி வரை நடைபெற்றது. பாராளுமன்றம் நேற்று  மு.ப 10.00 மணிக்குக் கூடியதுடன், அரசியலமைப்பின் 121(1)ஆம் உறுப்புரையின் பிரகாரம் “கைத்தொழில் பிணக்குகள் (விசேட ஏற்பாடுகள்)” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்கு  சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் தொடர்பான  உயர் நீதிமன்றத்தின்  தீர்ப்பை … Read more

நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

விக்ரம் தமிழ் திரையுலகில் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருப்பவர் விக்ரம். இவருடைய நடிப்பில் சமீபத்தில் நேரடியாக ஓடிடி-யில் வெளிவந்த திரைப்படம் மஹான். இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. ஆனால், படத்தில் நடித்திருந்த நடிகர்களின் நடிப்பு வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் கோப்ரா திரைப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. சொத்து மதிப்பு இந்நிலையில் நடிகர் விக்ரமின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 150 … Read more

2020 ஆண்டில் ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக இலங்கை காணப்பட்டது – நிதியமைச்சர்

அரச வருமானத்திற்கு அமைவாக ஆகக்ககூடுதலான தொகையை வட்டியாக செலுத்திய நாடாக 2020 ஆண்டில் இலங்கை காணப்பட்டதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். 2019ஆம் ஆண்டுகளுக்கு அமைவாக கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் கடனுக்காக செலுத்திய வட்டித்தொகை என்ன என்று எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு நிதி அமைச்சர் பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். 2019ஆம் ஆண்டு, அதிக வருமானம் பெறும் நபர்களை இலக்காகக் கொண்டு அல்லாமல், அனைத்து வரி செலுத்தும் மக்களையும் … Read more

பிரதி சபாநாயகராக ரஞ்ஜித் சியம்பலபிட்டிய மீண்டும் தெரிவு

பிரதி சபாநாயகராக, முன்னாள் பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டி மீண்டும் இன்று (5) தெரிவானார். பிரதி சபாநாயகர் ரஞ்ஜித் சியம்பலபிட்டிக்கு 148 வாக்குகளும் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்காருக்கு 65  வாக்குகள் அளிக்கப்பட்டன. கடந்த 2020 ஆகஸ்ட் 20 – தொடக்கம் நேற்று முன்தினம் வரை பிரதி சபாநாயகராக செயல்பட்டு வந்த ரஞ்ஜித் சியம்பலபிட்டிய,  தனது பதவியை இராஜிமா செய்ததையடுத்து பாராளுமன்றத்தில் பிரதி சபாநாயகர் பதவி வெற்றிடமானது. இதனால் இன்றைய தினம்  ,ஆளுந்தரப்பில் இருந்து முன்னாள் பிரதி சபாநாயகர் … Read more

அச்சு அசல் நடிகை திரிஷாவை போவே இருக்கும் பெண்.. செம வைரலாகும் புகைப்படம்

நடிகை திரிஷா தமிழ் திரையுலகில் கடந்த 20 ஆண்டுகளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவருக்கு இன்று பிறந்தநாள் என்பதினால் திரையுலகை சேர்ந்த பலரும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். திரிஷாவை போவே இருக்கும் பெண் இந்நிலையில், நடிகை திரிஷாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் பெண் ஒருவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, என்னை அறிந்தால் படத்தில் திரிஷா போட்ட கெட்டப்பை அப்படியே நம் … Read more

சிறைச்சாலை முகாமைத்துவ,சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி

சிறைச்சாலை முகாமைத்துவ மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக அமைச்சர் அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த விசேட வர்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளது. இந்த இராஜாங்க அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக அமைச்சர் அலி சப்ரி, நிதி மற்றும் நீதித்துறை அமைச்சராகவும் செயல்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.documents.gov.lk/files/egz/2022/5/2278-13_T.pdf