இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் வீடு திறந்துவைப்பு!!

இலங்கை இராணுவத்தினரால் மட்டக்களப்பு காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்ட வீடு செவ்வாய்க்கிழமை (02) நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டு பயனாளியிடம் கையளிக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தின் 11 ம் சிங்க ரெஜிமன்ட் படை அணியின் கட்டளை யிடும் அதிகாரி மேஜர் டி .எம் .என். பத்ம சிறீ அவர்களின் மேற்பார்வையில் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இராணுவ வீரர்களின் பங்களிப்பில் 243 வது காலாட் படை அணியின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே .எம். எஸ். குமாரசிங்க அவர்களின் அழைப்பின் பேரில் 24 … Read more

குடும்ப வன்முறைகளைத் தீர்பதற்கான புதிய சட்டம் கொண்டுவரப்படும் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். அதேநேரம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார். … Read more

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளின் முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திற்கு ஒருபோதும் வழங்கப்படவில்லை

அதிவேக நெடுஞ்சாலை செயற்பாடுகளின் முகாமைத்துவம் ஒருபோதும் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்படவில்லை என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (02) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும்போhதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். நெடுஞ்சாலை நடவடிக்கைகள் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனமான ளுயாயலெய ஐnஎநளவஅநவெ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதாகவும், அந்த நிறுவனம் 100மூ அரசாங்கத்திற்கு சொந்தமானதுடன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் திறைசேரிக்கே அதன் முழு … Read more

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு மீளாய்வு செய்யப்படவுள்ளது

அரசாங்க நிதிக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் சுயாதீன ஊதியக் குழுவொன்றை நியமித்துள்ளார். அரசாங்க நிதிக் குழுவிற்கும் இலங்கை மத்திய வங்கிக்கும் இடையில் இடம்பெற்ற அனைத்து கடிதத் தொடர்புகளின் அடிப்படையில், இலங்கை மத்திய வங்கியின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பு இல்லாத வகையில் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. … Read more

நெருக்கடியைத் தீர்க்க மிகப் பொருத்தமான தலைவர் ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதியாகியுள்ளது

அவரது தலைமை எதிர்காலத்திலும் தேவை. 24 இலட்சம் பேருக்கு அஸ்வெசம வழங்கிய பின்னர் முழுமையாக மீளாய்வு செய்யப்படும் – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துவதாகவும், எனவே எதிர்காலத்தில் அவரது தலைமை நாட்டுக்குத் தேவை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். இதுவரையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை வைத்து நாட்டை … Read more

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்கள் இலவசம்

பாடசாலை மாணவிகளுக்கான சுகாதாரத் துவாய்களை இலவசமாக வழங்குவதற்காக, கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் சகல பாடசாலைகளிலும் சுமார் 4மில்லியன் மாணவ மாணவிகளின் கல்வி பயிலுவதுடன், அதில் 1.2 மில்லியன் மாணவிகள் கல்வி கற்கின்றனர். அம்மாணவிகளில் அதிக கஷ்டப் பாடசாலைகள், கஷ்டப் பிரதேச பாடசாலைகள், தோட்டப்பாடசாலைகள் மற்றும் வறுமைக் கோட்டில் வாழும் மாணவ மாணவிகளுடனான நகரப் பாடசாலைகளில் எட்டு இலட்சம் வரையான மாணவிகள் காணப்படுகின்றனர். அவர்களுக்கு 2024 ஏப்ரல் மாதத்திலிருந்து … Read more

தோட்டப் பகுதி மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குவதற்காக அமைச்சரவை அனுமதி

தோட்ட மக்களுக்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக 2024வரவு செலவுத் திட்ட யோசனைக்கு ஊடாக தோட்டப் பகுதி மக்களுக்கு காணி உரிமைகளை வழங்குதல் குறித்த யோசனை நிதிப் பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைக்கான அமைச்சராக ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்டது. இவ்யோசனையை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அந்தஸ்தற்ற இராஜாங்க பெருந்தோட்டக் கைத்தொழில் மறுசீரமைப்பு அமைச்சின் ஒத்துழைப்புடன் நீர் வளங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் பெருந்தோட்ட வலயம் என்பவற்றுக்கான புதிய கிராமிய அபிவிருத்தி … Read more

மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வருடங்கள் பழமை வாய்ந்த நடராஜானந்தபுரம் சித்தி விநாயகர் விளையாட்டு கழகத்தின் உதை பந்தாட்ட சுற்று போட்டி!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட நடராஜானந்தபுரம் சித்தி விநாயகர் விளையாட்டு கழகத்தின் 15வது ஆண்டு நிறைவும் உயிரிழந்த உறவுகளின் ஞாபகார்த்தமாகவும் நடைபெற்ற மாபெரும் உதை பந்தாட்ட சுற்று போட்டி இறுதி நாள் நிகழ்வு 29 ஆம், 30 ஆம் திகதிகளில் சித்திவிநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து 37 கழகங்கள் பங்கு பற்றிய இவ் உதைப் பந்தாட்ட சுற்றுப் போட்டி கழகத்தின் தலைவர் பா.யோகேஸ்வரன் தலைமையில் ஏற்பாடு … Read more

பெட்ரோலியத்தின் விலையை இரண்டு காரணிகள் தீர்மானிக்கின்றன

உலக சந்தையில்;; நாணய மாற்று வீதம் மற்றும் பெட்ரோலியத்தின்; விலை ஆகிய இரண்டு முக்கிய காரணிகளால் பெட்ரோலியத்தின் விலை தீர்மானிக்கப்படுவதாக வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் பெற்றோலியத்தின் விலை மாற்றம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த காலங்களில் விலைச்சூத்திரம் இன்றி மேற்கொள்ளப்பட்டது போன்று … Read more

மத்திய மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்ற நுவரெலிய மாவட்ட பருவகால வசந்த விழா

எழில் கொஞ்சும் நுவரெலியாவின் பருவகால வசந்த விழாவின் ஆரம்ப நிகழ்வு நுவரெலிய நகரத்தின் மத்திய விமர்சையாக நேற்று (01) இடம்பெற்றது. மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தலைமையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றது. பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு மற்றும் குதிரையேற்றப் பிரிவின் குதிரைச் சவாரியுடன் ஆரம்பமான வசந்த விழாவில் நடனம், நாட்டியம், பாண்டு வாத்தியம் உட்பட பல விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்நிகழ்வில் நகர சபை மற்றும் பிரதேச செயலக அதிகாரிகள், ஹோட்டல் உரிமையாளர்கள், … Read more