ஜனாதிபதியின்அறிவுத்தலின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான வேலைத் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில்  மேற்கொள்ளுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த பிரேரணை தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்  நேற்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற விசேட  … Read more

தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் பெய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன

அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும்- பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். எதிர்க்கட்சியினரிடம் கோஷங்கள் இல்லாததால், அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய வஜிர அபேவர்தன, … Read more

மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 மார்ச் 28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024மார்ச் 27ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, தென், மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்..

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2024 மார்ச் 27 ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு … Read more

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது

கொடபொல இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை இரண்டு மாடிக் கட்டிட திறப்பு விழாவில் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு. வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். எத்தனை கல்விச் சீர்திருத்தங்களைச் தயார் செய்தாலும், அதற்கேற்ப மனித வளங்களை முகாமைத்துவம் செய்யாவிட்டால், கல்விச் சீர்திருத்தங்கள் பலனளிக்காது எனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார். மாத்தறை கொடபொல இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை … Read more

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது மனித உரிமை மீறல் அல்ல

அன்று வன்முறைக்கு வித்திட்டவர்களிடமிருந்து பாராளுமன்றம் உள்ளிட்ட அரச சொத்துக்களைப் பாதுகாப்பது மனித உரிமை மீறல் எனச் சிலர் சுட்டிக்காட்ட முயன்றனர். பல்கலைக்கழகக் கட்டமைப்பில் பல மாற்றங்கள் மேற்கொள்ள நடவடிக்கை; அவை வெற்றி பெற அனைவரின் ஆதரவும் அவசியம். பல்கலைக்கழகங்களில் கலந்துரையாடல் மற்றும் கருத்தாடலுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும்- பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி வலியுறுத்தல். போராட்டம் என்ற போர்வையில் வன்முறையை விதைத்தவர்களிடம் இருந்து பாராளுமன்றம், பிரதமர் அலுவலகம், ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அரச சொத்துக்களை காப்பாற்றி நாட்டில் … Read more

டிஜிட்டல் பொருளாதார பரிவர்த்தனைக்கான சட்டம், இந்தவருட நடுப்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு

டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான முகவர் நிலையம் மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான மையத்தை (AI ) உருவாக்குவதற்கான சட்டங்கள் இவ்வருட நடுப்பகுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். துரித டிஜிட்டல் பரிவர்த்தனையின் ஊடாக எமது நாட்டின் பொருளாதாரத்தை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் வளர்ந்து வரும் பொருளாதாரமாக மாற்ற முடியும் எனவும் ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று (26) முற்பகல் ஆரம்பமான டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மாநாட்டில் பிரதான உரையாற்றிய போதே … Read more

உத்தேச தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது

கே. ஸ்ரீபவன் குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சுக்கு. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை அமைப்பதற்கான, முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான குழுவின் அவதானிப்புகள் அடங்கிய அறிக்கை அமைச்சிடம் நேற்று (26) கையளிக்கப்பட்டதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்தார். அது தொடர்பான அறிக்கையை ஆராய்ந்த பின்னர் தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை இவ்வருடத்தில் நிறுவ முடியும் எனவும் இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக … Read more

கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலை “எம். எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” ஜனாதிபதியால் திறந்து வைப்பு

இலங்கை மக்களுக்கு உயர்தர சுகாதார சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக கொழும்பு வடக்கு ராகம போதனா வைத்தியசாலையில் நிறுவப்பட்ட “எம். எச். ஓமார் விசேட கல்லீரல் நோய் சிகிச்சை நிலையம்” நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த ஜனாதிபதியை, வைத்தியசாலையில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட கல்லீரல் சத்திரசிகிச்சையின் மூலம் குணமடைந்த சிறுமியொருவர் வரவேற்றது விசேட அம்சமாகும். இலங்கையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் நாள்பட்ட … Read more

செயற்றிட்டங்களின் வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பயனாளிகளும் அக்கறை செலுத்த வேண்டும் – கடற்றொழில் அமைச்சர்

முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்கள் ஒவ்வொன்றினம் முழுமையான வெற்றிக்கு அதிகாரிகள் மட்டுமல்லாது பெற்றுக்கொள்ளும் பயனாளிகளும் அதிக கரிசனையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா  வலியுறுத்தியுள்ளார். அவ்வாறான ஒரு நிலை உருவாக்கப்படும் போதுதான் வழங்கப்படும் திட்டங்கள் அல்லது அபிவிருத்திகள் ஒவ்வொன்றும் எதிர்பார்க்கும் முழுமையான இலக்கை அடையும் என்றும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (27-03-2024) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற போதே இதனைத் தெரிவித்தார். அண்மையில் … Read more