வடக்கில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டங்களை வழங்க முயற்சி- கடற்றொழில் அமைச்சர் 

வடக்கு மாகாணத்தில் வீடற்ற மக்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் வகையில் சுமார் 50,000 வீடுகளை அமைப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.  யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று (28.03.2024) நடைபெற்ற  ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  சூரிய கலன்களின் மூலம் மின் உற்பத்தியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் குறித்த வீடுகள் அமைக்கப்படவுள்ளன.  இதனடிப்படையில் பயனாளர்களுக்கு சுமார் 45 இலட்சம் பெறுமதியான 750 சதுர அடி … Read more

கிழக்கு மாகாணத்தில் 80 இலட்சம் ரூபாய் செலவில் சத்துமா உற்பத்தி நிலையம் திறப்பு …

கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயத்தியமலை பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா நேற்று (27) இடம்பெற்றது. நியூசிலாந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதி உதவியின் கீழ் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆயத்தியமலையில் 80 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்ட சத்துமா உற்பத்தி நிலைய திறப்பு விழா நிகழ்வு அரசாங்கத்தினால் கிழக்கு மாகாணத்தில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு … Read more

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரிப்பு – தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

தனிநபர் ஒருவரின் மாதாந்த செலவு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஒருவருக்கு தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான குறைந்தபட்ச மாதாந்தச் செலவு சராசரியாக 17,014 ரூபாயாக அதிகரித்துள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் இதன் மதிப்பு 16,524 ஆக பதிவானது. ஒரு நபரின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மாவட்ட மட்டத்தில் மாதாந்தச் செலவு கணக்கிடப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்தில் வாழும் மக்களே அதிக செலவினங்களைச் … Read more

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற நான்கு நாடுகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் பூட்டானுக்கு எதிராக இலங்கை கால்பந்தாட்ட அணி அபார வெற்றியீட்டியதோடு வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார். அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியில் (SAFF) வெற்றிபெறுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட அணியை ஊக்குவித்த ஜனாதிபதி, கால்பந்தாட்டத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை … Read more

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயன்முறைக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக சீனா உறுதியளிப்பு

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளுக்கு சீனா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்றும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு உதவும் என்றும் சீன பிரதமர் லீ கியாங் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் உறுதியளித்தார். 2024.03.26 அன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உயர்மட்ட இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, பொருளாதார பின்னடைவின் பின்னர் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை சீனப் பிரதமர் பாராட்டினார். சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை பலப்படுத்த நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் தொடர்ச்சியாக உழைத்துள்ளீர்கள் என பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு அவர் நன்றி … Read more

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள், சீன பௌத்த சங்கத்தின் தலைவர், வணக்கத்திற்குரிய யெங் ஜூ (Yan Jue) சங்கராஜ தேரோவை சந்தித்தார்.

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்தன (27), சீன பௌத்த சங்கத்தின் தலைவர் சங்கைக்குரிய யாங் ஜூ (Yan Jue) சங்கராஜ நாயக்க தேரரை சீன சர்வதேச ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடினார். இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அசோக பிரியந்த, பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களுக்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பு…

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அவர்களுக்கும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (2024.03.27) பெய்ஜிங்கில் உள்ள கிரேட் ஹோலில் இடம்பெற்றது. சர்வதேச விவகாரங்களில் ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடாமல் நட்புறவு, அமைதி, மற்றும் பரஸ்பர மரியாதை ஆகிய கொள்கைகளின் கீழ் தொடர்ந்து செயற்பட இரு நாடுகளுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டது. இருதரப்பு உறவுகள், நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர வினைத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, அந்தக் கொள்கையின்படி … Read more

உணவகங்களில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும் திருப்தி மற்றும் அதிருப்தியை தெரியப்படுத்த புதிய வட்ஸ் அப் இலக்கம் அறிமுகம்

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை பிரிவுக்குட்பட்ட உணவகங்கள் மற்றும் பேக்கரி போன்றவற்றில் உணவை கையாளும் போது நுகர்வோருக்கு ஏற்படும் திருப்தி மற்றும் அதிருப்தியை தெரியப்படுத்தும் புதிய வட்ஸ் அப் இலக்கம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் உணவகங்களின் உணவின் தரம், உணவு கையாலுகையில் திருப்தியா, அதிருப்தியா போன்ற விடையங்களை 0705711151 என்ற வட்ஸ் ஸப் இலக்கத்தின் ஊடாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் குறுஞ் … Read more

ஜனாதிபதியின்அறிவுத்தலின் பிரகாரம் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான வேலைத் திட்டம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலையீட்டில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான வேலைத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான நடவடிக்கைகளை துரிதகதியில்  மேற்கொள்ளுமாறும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த பிரேரணை தொடர்பில் தோட்டத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில்  நேற்று அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நடைபெற்ற விசேட  … Read more

தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் பெய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன

அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும்- பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தச் சட்டமூலங்களால் எதிர்வரும் தேர்தல்கள் பிற்போடப்படும் என எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாகவும் அரசியலமைப்பின்படி உரிய நேரத்தில் தேர்தல் நடைபெறும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார். எதிர்க்கட்சியினரிடம் கோஷங்கள் இல்லாததால், அரசாங்கம் தேர்தலை பிற்போடுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாக சுட்டிக்காட்டிய வஜிர அபேவர்தன, … Read more