காலநிலையில் இன்று ஏற்படவுள்ள மாற்றம்! பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது. பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுததல்  மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த … Read more

தமிழக அரசிடம் கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் தலையிடாததற்கு தமிழக கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 109 மீன்பிடி படகுகள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டைத் தாண்டியது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டின் பேரில் கடற்றொழிலாளர்களுடன் இலங்கை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டதாக இந்திய கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்போது கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதுடன், அவர்களின் படகுகள், மீன்பிடி வலைகள் மற்றும் அவர்களின் மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடற்றொழிலாளர்கள் விடுத்துள்ள … Read more

2022/2023 பெரும் போகத்தில் அரசாங்க அரிசி கொள்வனவு மற்றும் அரிசி கையிருப்பு அகற்றல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் யாழ்ப்பாணத்தில்

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டத்திற்கு ஏற்ப, குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது – சாகல ரத்நாயக்க. நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வேலைத்திட்டத்துடன் குறைந்த வருமானம் பெறும் மக்களின் முன்னேற்றம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதற்காக சமூக பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் வேலணை பிரதேச செயலக … Read more

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான 11 வயது பிக்கு! விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்

11 வயதுடைய பிக்கு ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயாகல கொகரதெனிய விகாரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பிக்குவின் தாயார் செய்த முறைப்பாட்டின் பிரகாரம், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.   விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் தப்பியோட்டம்  பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள விகாராதிபதி உட்பட மூன்று பிக்குகள் விகாரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு முதல் குறித்த பிக்கு, விகாராதிபதி மற்றும் இரண்டு தேரர்களால் அவர்களது … Read more

கிழக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 22 பேர் கடற்படையினரால் கைது

முல்லைத்தீவு நாயாறு கடற்பரப்பிலும் கிண்ணியா பாலத்தை சூழவுள்ள பகுதியிலும் மின் விளக்குகள் மற்றும் சட்டவிரோத சுழியோடி நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற நபர்களை அடையாளம் காண விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை இலங்கை கடற்படையினர் 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டனர். குறித்த நடவடிக்கையின் போது இருபத்தி இரண்டு (22) சந்தேகநபர்கள் மற்றும் எட்டு (08) டிங்கி படகுகள், பல சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு … Read more

மக்களே அவதானம்! நாட்டின் 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனம்

நாட்டின் 15 மாவட்டங்களுக்குட்பட்ட 55 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்கள் இவ்வாறு டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன. டெங்கு அபாய வலயங்கள் அத்துடன், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், குருணாகலை, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களும் டெங்கு அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மேல் மாகாணத்தின் அனைத்து … Read more

கடற்படையின் திறன்களை மேம்படுத்துவதற்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறை வெற்றிகரமாக நிறைவு பெற்றது

இலங்கை கடற்படையின் திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவகத்தின் (Institute for Security Governance – ISG) வளங்களைக் கொண்டு கடற்படைத் தலைமையகத்தில் 2023 ஏப்ரல் 25 ஆம் திகதி முதல் மூன்று (03) நாட்களாக நடைபெற்ற பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக 2023 ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி நிறைவு பெற்றது. இதன்படி, கடற்படையில் மனித வள முகாமைத்துவத்தை அதிகரிப்பதற்கும், கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த கடல்சார் புலனாய்வுத் திறன்களை மேம்படுத்துவதற்கும், அது தொடர்பான … Read more

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

கடந்த மார்ச் மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை தொடர்ந்தும் வலுவடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.  இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையின் வருவாய் மேம்பாடு வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணவனுப்பல்கள் மற்றும் சுற்றுலாத்துறையின் வருவாய்கள் என்பன கடந்த மார்ச் மாதத்தில், குறிப்பிடத்தக்க மேம்பாட்டினைப் பதிவு செய்திருந்தன. சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் மத்திய வங்கியினால் அனுமதிக்கப்பட்ட கொள்கைத் தளர்வினால் ஏற்பட்ட மேம்பாடுகளினால் கடந்த மார்ச் மாதத்தில், செலாவணி வீதம் குறிப்பிடத்தக்களவு உயர்வடைந்ததுள்ளதாக இலங்கை … Read more

ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினரும் மன்னார் பொலிஸாரும் இணைந்து 2023 ஏப்ரல் 27 ஆம் திகதி மாலை சிலாவத்துறை பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 893 கிராம் ஹஷிஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் (01) கைது செய்யப்பட்டார். போதைப்பொருள் உட்பட சட்டவிரோத கடத்தலை எதிர்த்து கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. அதன்படி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இலங்கை கடற்படை கப்பல் தேரபுத்த நிருவனத்தின் கடற்படையினர் மன்னார் பொலிஸாருடன் … Read more

இலங்கையில் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தோலில் பயன்படுத்தப்படும் அனைத்து முகப்பூச்சு க்ரீம்கள் மற்றும் பொடி லோஷன்களில் அதிகபட்ச வரம்பைத் தாண்டி கன உலோகங்கள் இருப்பதும் அவை உடலுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன. கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, ​​எந்தவொரு பொறுப்பான தகவலும் மற்றும் தேவையான சட்டப் பணிகளும் குறிப்பிடப்படாமல், சந்தைகளில் பொடி லோஷன் பொதிகளில் (பேக்கேஜிங்கில்) முறைகேடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சட்ட நடவடிக்கை இது தொடர்பாக செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் … Read more