திருமண கனவில் இருந்த யுவதி – எதிர்பாராத வகையில் பறிக்கப்பட்ட உயிர்

கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற வேளையில் எதிர்பாராத விதமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தேவையின் நிமித்தம் வீதி ஓரத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளிற்கு அருகில் நின்ற யுவதி உயிரிழந்துள்ளார். ​​ அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த யுவதி … Read more

பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு!கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

இலங்கையில் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்கள் தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் நிலவும், தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களுக்கு கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்ய உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. சில பகுதிகளுக்கு அனுமதி இல்லை இதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மற்றும் மேல்மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக கல்விமானிப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் 2023 … Read more

சித்திரை புத்தாண்டில் ராஜ யோகத்தில் மிதக்க போகும் 8 ராசிக்காரர்கள்! பல நன்மைகளுடன் வெளியான ராசிப்பலன்

சித்திரை மாதம் என்பது தமிழ் மாதங்களில் முதல் மாதம் என்பதால் அம்மாதப் பிறப்பை தமிழர்கள் புத்தாண்டு தினமாக கொண்டாடுகின்றார்கள். சூரியன் மேஷ இராசிக்குள் நுழையும் ஆரம்பம் சித்திரை மாதத்தில் நிகழ்கிறது. எனவே எதிர்வரும் 14ஆம் திகதி பிறக்கவிருக்கும் சோபகிருது சித்திரை புத்தாண்டில் மேஷ ராசிக்காரர்களுக்கு குருவினது ஸ்தாப பலம் என்பது மிகவும் நன்மை தரும் வகையில் அமைந்துள்ளது. மேலும் நோய், கடன், வழக்கு பிரச்சினைகள் என்பன காணமல் போகும் நிலை காணப்படுகின்றது. குரு – ராகு சஞ்சாரம் … Read more

வடக்கு, கிழக்கை முடக்குவோம்! அமைச்சர்கள் வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் – பகிரங்க எச்சரிக்கை

புத்த சாசனம், மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஒரு இனவாதி என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கடுமையாக சாடியுள்ளார். அத்துடன் வடக்கு, கிழக்கில் எங்கு மலைகளைக் கண்டாலும் புத்தரை அமரவைப்பது தான் வேலை என சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தொல்லியல் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளை நிறுத்தாவிட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தை முடக்குவோம், இனவாத அமைச்சர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்க வர முடியாத நிலையை ஏற்படுத்துவோம் எனவும் … Read more

நாட்டை வாங்குமளவு பலம் படைத்த புலம்பெயர் இலங்கையர்கள்: வெளிநாட்டு பணம் அனுப்புவதில் ஏன் நெருக்கடி..!

புலம்பெயர் இலங்கையர்களாலும் இலங்கையின் பொருளாதாரத்தில் கனிசமான அளவு செல்வாக்கை செலுத்த முடியும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார். ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி அல்லது இலங்கையின் பெறுமதி என்று பார்ப்போமாக இருந்தால் இப்போது 70 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்டதான ஒரு பொருளாதாரமாக இருப்பதாக இருக்கிறது. சில புலம்பெயர் இலங்கையர்களின் நிதி … Read more

ஆபத்தான நிலையில் நாடு உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் எச்சரிக்கை

எதிர்காலத்தில் மிகவும் கடினமான பயணம் உள்ளது. எனவே அடுத்த நான்கு வருடங்களில் நிலையான முன்னேற்றப் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தின் முன்னேற்றம் குறித்து ஊடகங்களுக்கு நேற்று ஊடகங்கள் முன்னிலையில் மத்திய வங்கியின் ஆளுநர் கருத்து வெளியிட்டார். எங்களிடம் கடன் மறுசீரமைப்பு சவால் உள்ளது. அடுத்து, சர்வதேச நாணய நிதியத்துடன் நாம் ஒப்புக்கொண்ட ஒப்பந்தத்தில் பல முக்கிய சீர்திருத்தங்கள் உள்ளன. இதுபோன்ற பல விடயங்களை இப்போது … Read more

எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்படுகிறது

புத்தாண்டு பண்டிகை காலத்தில், ஏற்கனவே நடைமுறையில் இருந்த எரிபொருள் கோட்டாவை (04) நள்ளிரவு முதல் அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் பணிப்புரைக்கமைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக திட்டமிட்டபடி, பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கும் எரிபொருள் தேவைக்கு ஏற்ப, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தேவையான கைருப்புகளை முன்கூட்டியே பெற்றுக் கொண்டுள்ளது. அதன்படி ஒரு வாரத்திற்கு கீழ்கண்டவாறு பரிந்துரைக்கப்பட்ட கோட்டா விநியோகிக்கப்படவுள்ளது.    

புதிய ஒம்புட்ஸ்மனாக கே.பி.கே.ஹிரிம்புரேகம ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம்

நிர்வாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளராக (ஒம்புட்ஸ்மன்) நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி கே.பி.கே.ஹிரிம்புரேகம (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 156(2) மற்றும் 1981 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க நிர்வாக விவகாரங்களுக்கான பாராளுமன்ற ஆணையாளர் சட்டத்தின் பிரிவு 3(1) ஆகியவற்றின் படி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. பதவிப் … Read more

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமனம்

கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் சுனில் ஆரியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். 1985 ஆம் ஆண்டு 07 இலக்கச் சட்டத்தின் திருத்தம் செய்யப்பட்ட 1978 ஆம் ஆண்டு 16 ஆம் இலக்க பல்கலைக்கழகச் சட்டத்தின் 32 வது உறுப்புரைக்கமைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த ஐந்தாண்டு பதவிக்கால நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைவான நியமனக்கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துடன் இணையவுள்ள சஜித் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்! பகிரங்கமாக அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், அரசாங்கத்துடன் இணையப்போவதாக இன்று நாடாளுமன்றில் தெரிவித்த, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லச்மன் கிரியெல்லவிடம் சவால் ஒன்றையும் விடுத்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின்; நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசாங்கத்துடன் இணைந்தால், லச்மன் கிரியெல்ல, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகவேண்டும் என்றும் அளுத்கமகே சவால் விடுத்துள்ளார். போலி செய்தி ஐக்கிய மக்கள் சக்தியில் கிரியெல்ல மற்றும் சஜித் பிரேமதாச போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே இருப்பார்கள், … Read more