2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் புதிய பொருளாதார முறைமை-ஜனாதிபதி

2050 ஆம் ஆண்டை எதிர்கொள்ளும் வகையில் வலுவான புதிய பொருளாதார முறைமையை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் முதன்மையானதும் மிகவும் எதிர்பார்ப்புடையதுமான வருடாந்த பொருளாதார நிகழ்வான, 2022ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாடு நேற்று கொழும்பு ஷெங்ரில்லா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். பழமையான பொருளாதாரத்தின் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடியாது இது நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு … Read more

இலங்கைக்கு கிடைக்க வேண்டிய 5300 கோடி டொலர்கள்! பெரிய வர்த்தகர்கள் குறித்து பகிரங்கப்படுத்தப்பட்டுள்ள தகவல்

நாட்டின் மொத்த கடனையும் அடைக்கக்கூடிய அளவிலான 53 பில்லியன் (5300 கோடி) டொலர்களை, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய வர்த்தகர்கள் நாட்டிற்கு செலுத்தாது ஏமாற்றியுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், நாட்டின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் பெரிய வர்த்தகர்கள் கடந்த 12 வருடங்களாக நாட்டிற்கு வழங்க வேண்டிய 53 பில்லியன் டொலர்களை செலுத்தாது ஏமாற்றி … Read more

இலங்கை வந்துள்ள ஆசிய நிர்வாகி அஞ்சலி கௌர்

 யுஎஸ்எய்ட் (USAID)நிறுவனத்தின் ஆசியாவுக்கான பணியகத்தின் பிரதி உதவி நிர்வாகி அஞ்சலி கௌர் இலங்கை வந்துள்ளார். இவர் நேற்று (05.12.2022) வந்தடைந்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பில் மதிப்பீடு கௌர், இலங்கையின் நெருக்கடி தொடர்பில் மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார். அத்துடன், பொருளாதார நெருக்கடிக்கு எவ்வாறு ஒத்துழைக்க முடியும் என்பதை அறிய அரசாங்க அதிகாரிகள், கல்வியாளர்கள் மற்றும் ஆய்வாளர்களை சந்திக்கிறார். கடந்த வாரம் யுஎஸ்எய்ட்டின் நிர்வாகி சமந்தா பவர், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்து, நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கான … Read more

எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு தீர்மானம்  

எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்குப் பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானம்  • 8ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு பி.ப 5.00 மணிக்கு  • புதிய வருடத்தில் முதலாவது பாராளுமன்ற அமர்வு ஜனவரி 17ஆம் திகதி  எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பதிலாக 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் (05) நடைபெற்ற பாராளுமன்ற … Read more

உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு

இம்முறை பெரும் போகத்திற்குத் தேவையான மொத்த உரத்தொகையும் (MOP – Muriate of Potash) கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது. பசளையை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இதற்கு முன்னர் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து பசளையை தரையிறக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது. அமெரிக்கா, இலங்கைக்கு ஒன்பதாயிரத்து 300 மெற்றிக் தொன் பசளையை வழங்கியுள்ளது. சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் … Read more

ஜா-எல பிரதேசங்களில் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும்

அத்தியவசியத் திருத்தப் பணிகள் காரணமாக ஜா-எல உள்ளிட்ட பல பிரதேசங்களில் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரையான 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும். ஏக்கல, தடுகம, துடுல்ல, தெலதுர, கொட்டுகொட, அலவத்துப்பிட்டிய, தம்பத்துரே ஆகிய பிரதேசங்களிலும், உடுகம்பொல, மினுவங்கொட, ரத்தொழுகம ஆகிய பிரதேசங்களின் சில இடங்களிலும் நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

லங்கா பிரீமியர்லீக் கிரிக்கட் போட்டி

லங்கா பிரீமியர்லீக் கிரிக்கட் போட்டி ஹம்பாந்தோட்டை சூரியவௌ மகிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் இன்று (06) ஆரம்பமாகவுள்ளது. அணிகளின் தலைவர்கள் பற்றிய விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது. இதற்கமைவாக யாழ்ப்பாணம் அணிக்கு திசர பெரேராவும், காலி அணிக்கு குசல் மெண்டிசும் தலைமை தாங்குகி;ன்றனர். கொழும்பு அணிக்கு அஞ்சலோ மெத்தியுஸ் தலைமை தாங்குகிறார்.தசுன் ஷானக்க தம்புள்ளை அணிக்கும், வனிது ஹசரங்க கண்டி அணிக்கும் தலைமை தாங்குகின்றனர்.

இலங்கையில் இம்மாத இறுதியில் வேலையை இழக்கும் 5000 பேர்! பலருக்கு காத்திருக்கும் நெருக்கடி

மின்சார கட்டணம் மேலும் அதிகரிக்கப்பட்டு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகள் மூடப்பட்டு முதலீட்டாளர்கள் நாட்டை விட்டு நகரும் அபாயம் உள்ளதாக சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர் தேசிய நிலையத்தின் அழைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் ஆடைத்துறையில் உள்ள மூன்று தொழிற்சாலைகள் இம்மாதம் தொழிற்சாலைகளை மூடிவிட்டு இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் அந்த மூன்று தொழிற்சாலைகளில் பணிபுரியும் சுமார் 5000 தொழிலாளர்கள் வேலையை இழப்பர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பலர் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் … Read more

குரேஷ்யா அணி வெற்றி

உலகக் கிண்ண உதைபந்தாட்ட சுற்றுத்தொடரின் நொக் அவுட் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்ட குரேஷ்யா அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தமையினால் பெனால்டி உதை மூலம் வெற்றி உறுதி செய்யப்பட்டது. அதற்கிணங்க 3 இற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றி பெற்றுள்ளது. இன்று அதிகாலை நடந்த மற்றுமொரு போட்டியில் தென் கொரிய அணியை எதிர்கொண்ட பிறேசில் அணி நான்கிற்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி … Read more

“அரசாங்க உத்தியோகத்தர்கள் 60 வயது பூத்தியடையும் போது கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வுபெறுதல் வேண்டும்.'' 

“அனைத்து சிவில் அரசாங்க உத்தியோகத்தர்களும் ,அறுபது வயது பூத்தியடையும் போது கட்டாயம் சேவையிலிருந்து ஓய்வுபெறுதல் வேண்டும்.”  இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நேற்று (05) பிரதமர் தினேஷ் குணவர்தனவினால்  வெளியிடப்பட்டுள்ளது:  வர்த்தமானி அறிவிப்பு: http://documents.gov.lk/files/egz/2022/12/2309-04_T.pdf