sss

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு, விவசாய அமைப்பினால் 8 மாவட்டங்களில் உள்ள குறைந்த வருமானங்களைக் கொண்ட விவசாயக் குடும்பங்களுக்காக வழங்கப்படும் 9,000 மெற்றிக் தொன் யூரியோவுடனான கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. பெரும்போக நெல் உற்பத்திக்கு தேவையான உரம் அதாவது, விசேட வகையான உரம்…. அல்லது பண்டி உரம் 41876 மெட்ரிக் டொன் உடனான கப்பல் இன்றிறவு கொழும்புத் துறைமுகத்தை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த உரத்தை நாளை மாலை இறக்குவதற்கான பணிகள் … Read more

2022 EIU தரப்படுத்தலில் ,உலகின் மலிவான வாழ்க்கை செலவு நகரங்களில் கொழும்பு

பொருளாதார நிபுணர் ஆய்வு பிரிவினால்  Economist Intelligence Unit (EIU) நடத்தப்படும் உலகளாவிய நகரங்களுக்கிடையிலான  வாழ்க்கைச் செலவுக் குறியீட்டில் உலகின் மிகக் குறைந்த வாழ்;க்கைச் செலவைக்கொண்ட நகரங்களில் கொழும்பு இடம் பெற்றுள்ளது. சமீபத்திய உலகளாவிய வாழ்க்கைச் செலவுக் குறியீட்டின்படி, உலகின் மலிவான நகரங்களின் முதல் பத்து இடங்களில் கொழும்பு மா நகரம் இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் 161 வது தரவரிசையுடன் கொழும்பு இந்தியாவின் பெங்களூர் ,சென்னை மற்றும் அஹமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு ஆகிய நகரங்களுடன் இணைந்ததாக … Read more

மஹிந்தவின் மகன் தொடர்பில் சர்ச்சையை ஏற்படுத்திய ஹிருணிக்கா

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் இல்லையென சர்ச்சைக்குரிய தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். மஹிந்த மீது நாமல் அன்பு இல்லாத வகையில் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளமை குறித்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களுக்கு மத்தியில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன் போது நாடாளுமன்றத்தில் நாமலை கண்ட உறுப்பினர்கள், ஹிருணிக்கா ஏன் அப்படி கூறுகின்றார். உங்களை மஹிந்தவின் மகன் அல்ல தந்தை மீது அன்பில்லை என்கிறாரே ஏன் என நாமலிடம் வினவியுள்ளனர். ஆம் அவர் அவ்வாறு … Read more

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிப்பு

வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நவம்பர் 30 ஆம் திகதியிலிருந்து மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி ,ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்றைய (01) தினம் நிதி ,ராஜாங்க அமைச்சர் இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் ,குறிப்பிட்ட காலப்பகுதிக்கு தண்டப்பணம் அறவிடப்பட மாட்டாது என்றும் கூறினார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், வருமான வரி கணக்கு விபரங்களை தாக்கல் செய்வதற்காக பலரும் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக கணினி செயற்பாடுகளில் … Read more

மீனவர்களின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடுத்த வருடம் முதல் மின்சாரத்தில் இயங்கும்….

மீனவர்களின் எரிபொருள் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அடுத்த வருடம் முதல் மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் படகுகள் அறிமுகப்படுத்தப்படும் –கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு மீனவர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கக் கூடிய மோட்டார் படகுகளை அடுத்த வருடம் முதல் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அண்மையில் (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் அண்மையில் (29) நடைபெற்ற கடற்றொழில் அலுவல்கள் பற்றிய … Read more

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராக பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது…

பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிராகப் பாராளுமன்றம் செம்மஞ்சள் நிறமாக மாறியது… ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உள்ளிட்ட பொதுமக்கள் பிரதிநிதிகள் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிரான உலகளாவிய செயல்முனைவுடன் (GBV) பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியுத்துடன் இணைந்தனர். இதன் அடையாளமாக பாலின அடிப்படையிலான வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஒன்றிணைவோம்” என்ற வாசகம் தாங்கிய கைப்பட்டி அணிவிக்கப்பட்டது பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான (GBV) உலகளாவிய செயல்முனைவுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைமையில் பாராளுமன்றத்தில் நேற்று … Read more

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு நாளில்  அதிகமான பாடசாலை மாணவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை  

பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கு அதிக எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்கள் நேற்று (01) வருகை தந்ததாகப் படைக்கலச் சேவிதர் நரேந்திர பெர்னாந்து தெரிவித்தார். இதன்படி, நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 32 பாடசாலைகளைச் சேர்ந்த 5,000இற்கும் அதிகமான மாணவர்களுக்கு பாராளுமன்றத்தைப் பார்வையிட வருகை தந்திருந்தனர். உலகப் பாராளுமன்றங்களுடன் ஒப்பிடுகையில், ஒரே நாளில் இவ்வளவு பேர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்தமை சாதனையாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார். கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பொது … Read more

மார்ச்சில் இலங்கைக்கு காத்திருக்கும் மிகப்பெரிய நெருக்கடி! பாரதூரமான நிலை குறித்து எச்சரிக்கை

உரிய திட்டமிடல்கள் முன்னெடுக்கப்படாவிட்டால் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நாடு பாரியதொரு மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.  உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, நீர் மற்றும் அனல்மின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் மின் உற்பத்தியில் பாரிய தாக்கத்தினை செலுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.  தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  கடந்த ஜனவரி 21ஆம் திகதி ஊடகவியலாளர் … Read more