பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டம் – அரசாங்கம் தீர்மானம்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக தேசிய பாதுகாப்பு தொடர்பான புதிய சட்டமூலமொன்றை தயாரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நீதியமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதுதெடர்பாக அமைச்சர் மேலும் தெnரிவிக்கையில், குறித்த சட்டமூலம் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் … Read more

அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைக்கும் சுற்று நிருபத்தை நாளை வரை மாத்திரம் நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்று நிருபம் கடந்த ஜுன் மாதம் 17ஆம் திகதி அரச நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டது. வழமைக்கு திரும்பும் அரச சேவை அதற்கமைய, நாளை மறுநாள் முதல் அனைத்து ஊழியர்களும் வரவழைக்கப்பட்டு அரச நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் … Read more

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபிக்கின் சேவைக்கு பாராட்டு

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார மீளாய்வு கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது. நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது ,கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக இடம்மாற்றம் பெற்று செல்லும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபிக் ஆற்றிய சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.புதிய மாகாணப் பளிப்பாளராக பதவியேற்கவுள்ள வைத்தியகலாநிதி கோஸ்டா  வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் தலைமையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதான மண்டபத்தில்  இந்த மீளாய்வு … Read more

கோட்டாபய அமெரிக்கா திரும்பினால் கைது செய்யப்படலாம் – புலம்பெயர் தமிழர் தாக்கல் செய்த வழக்கு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவிற்கு திரும்ப முடியாதவாறு வழக்குகளை தாக்கல் செய்தவர் தாம் என புலம்பெயர் தமிழ் உறுப்பினர் ரோய் சமந்தனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கோட்டாபய ராஜபக்ச அமெரிக்கா திரும்பினால் தான் தாக்கல் செய்த வழக்கு மூலம் கைது செய்யப்பட்டலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் உறவினர்கள் பலர் வெளிநாடுகளில் இருக்கின்றனர். அவர்கள் எவ்வாறு … Read more

இலங்கைத் தூதுவர் அமெரிக்க காங்கிரஸுக்கு நா‌ட்டி‌ன் மீதான அக்கறைக்கு நன்றி தெரிவிப்பு

அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் மகிந்த சமரசிங்க, இலங்கை மற்றும் இலங்கை மக்களின் நலனில் அக்கறை கொண்ட அமெரிக்க காங்கிரஸின் பத்து உறுப்பினர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க காங்கிரஸின் உறுப்பினர் டினா டைட்டஸுக்கு அனுப்பிய கடிதத்தில், குறிப்பாக, USAID ஏஜென்சிகள் மூலமாக கொவிட்-19 தடுப்பூசிகள் நன்கொடை, உணவுப் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்க அமெரிக்கா எடுத்து வரும் பல முயற்சிகளுக்கு இலங்கை நன்றி தெரிவித்துக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அத்தியாவசிய மருந்துகள், பிற பொருள் உதவி … Read more

ரணிலுக்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம்! பசிலின் அறிவிப்பு

அனைத்துக் கட்சி அரசாங்கம் யதார்த்தமானதாக இல்லாவிட்டால் புதிய அமைச்சரவையை கூடிய விரைவில் நியமிக்க வேண்டும் என முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இராஜாங்க அமைச்சர்கள் நியமனத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கோரிக்கை விடுத்துள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதிக்கு கால அவகாசம் கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சர்களாக இருந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். … Read more

இலங்கையில் மாற்றி எழுதப்படப் போகும் அரசியல் வரலாறு! தமிழர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு

இலங்கையில் நாளுக்கு நாள் புதுப் புது மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நகர்வுகள், சர்வதேசம் திரும்பிப் பார்க்கும் வகையிலான அரசியல் மாற்றங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில் இன்று எமது தளத்தில் அதிகளவான செய்திகளை நாங்கள் பிரசுரித்திருந்தோம். அவற்றுள் நீங்கள் தவறவிட்ட முக்கிய செய்திகளை விசேட தொகுப்பாக உங்களுக்கு தருகின்றோம். நீங்கள் தவறவிட்ட செய்திகளை கட்டாயம் படிக்கவும். 1 இலங்கையில் எதிர்வரும் 2027ஆம் ஆண்டுக்குள் தமிழர் ஒருவர் பிரதமராகலாம் அல்லது ஜனாதிபதி ஆகலாம் … Read more

சந்தேக நபர்களை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

பொல்துவ சந்தியில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை நடவடிக்கையில் ஈடுபட்ட பலரை அடையாளம் காண பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். ஜூலை 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பில் மேல் மாகாண (தெற்கு) குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 23 சந்தேகநபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது கட்டுப்பாடற்ற முறையில் நடந்துகொண்டமை தொடர்பாக வீடியோ காட்சி படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர். மேலும் சந்தேக நபர்கள் பற்றிய தகவல்களை … Read more