எரிபொருள் நெருக்கடியை தீர்க்க நிதி

எரிபொருள் விநியோகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சம்மதம் தெரிவித்துள்ளார். கையிருப்பில் உள்ள நிதியில் எரிபொருளை உடனடியாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிற்கு எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகத்தை மீள ஆரம்பிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி … Read more

ஹிருணிகாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்(Video)

குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவு தலைவி ஹிருணிகா பிரேமச்சந்திரவை பொலிஸார் செல்லவிடாது தடுத்து நிறுத்தியுள்ளனர். ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான தரிந்து உடுவரகெதரவை குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பாணையை கண்டித்து இன்று கொழும்பு கோட்டையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஹிருணிகா சென்றிருந்தார். குற்றவியல் விசாரணை திணைக்களம் அமைந்துள்ள இடத்தில் இருந்து பல மீற்றர் தூரத்தில் பொலிஸார் வீதித்தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், கோட்டை பகுதியில் சிறிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. … Read more

அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு 250 பேர் கொரியாவுக்கு ….

கொரியா மனித வள அபிவிருத்தி நிறுவனத்தின் இலங்கையின் வதிவிடப் பணிப்பாளர் லீ மற்றும் கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஆகியோருக்கிடையிலான விசேட சந்திப்பொன்று கடந்த 27ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள கைத்தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் இடம்பெற்றது. தற்போது கொரிய மொழிப் பரீட்சையில் சித்தியடைந்து கொரியவில் வேலைவாய்ப்பை எதிர்பார்த்திருக்கும் இலங்கைத் தொழிலாளர்களை விரைவாக கொரியாவுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த வாரம் முதல் வாரத்திற்கு 250 … Read more

இந்தியாவில் சற்று குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு 

இந்தியாவில் நேற்றுடன் ஒப்பிடும்போது இன்றைய கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விபரத்தை இந்திய சுகாதாரத்துறை அமைச்சு இன்று  காலை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11 ஆயிரத்து 793 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய பாதிப்பான 17 ஆயிரத்து 73-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 இலட்சத்து 18 ஆயிரத்து … Read more

முற்றாக முடக்கப்பட்டது இலங்கை! இறுதி முயற்சியில் தொக்கி நிற்கும் இலங்கையர்களின் வாழ்க்கை

மிகக் கடுமையான ஒரு பொருளாதார நெருக்கடியை இலங்கை தற்போது எதிர்நோக்கியுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய அழிவை இலங்கை சந்தித்திருக்கின்றது என்று சொன்னால் மிகையாகாது. பொருளாதார நெருக்கடியின் கோரத்தை சாதாரண நிலையில் இருக்கும் மக்கள் முதற்கொண்டு, வசதிப்படைத்தவர்கள் வரை உணர்ந்துள்ளனர் என்பதே நிதர்சனமான உண்மை. அதிகரிக்கும் சுமை அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, பொருட்கள் பற்றாக்குறை, எரிவாயு விலை அதிகரிப்பு, எரிவாயு வரிசை, பற்றாக்குறை, எரிபொருள் இன்மை, எரிபொருள் விலை அதிகரிப்பு, எரிபொருள் பற்றாக்குறை, சேவைக் … Read more

யாழில் பங்கீட்டு அட்டை பொறிமுறையை செயல்படுத்துவதற்கு உயர் மட்ட குழு

எரிபொருள் வழங்குவதற்கான பங்கீட்டு அட்டை பொறிமுறையை செயல்படுத்துவதற்கு யாழ் மாவட்டத்தில் உயர் மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். இக் குழு ஊடாக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு பிரதேச செயலகங்கள் ஊடாக பங்கீட்டு அட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட எரிபொருள் விநியோகம் மற்றும் அரசாங்கம் தற்போது அறிவித்துள்ள முப்படையினர் ஊடாக அமுல்படுத்த உத்தேசித்துள்ள விநியோக நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடலில் இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். நேற்று … Read more

எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் என சந்கேத்தின் பேரில் சிறைச்சாலைகளில் இருந்துவருவோரின் விடுதலை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக நீதி அமைச்சர் தெரிவிப்பு

எல்.ரீ.ரீ.ஈ உறுப்பினர்கள் என சந்கேத்தின் பேரில் சிறைச்சாலைகளில் இருந்துவருவோரின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். குற்றமிழைத்தவர்களாக காணப்படுவோரே எஞ்சியுள்ளனர். இதுதொடர்பாக நாம் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றோம். இராஜந்திர ரீதியில் தீர்மானத்தை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளளோம. எவ்வாறான தீர்மானம் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறமடியாது என்றும் அவர் கூறினார். தனது சமீபத்திய வடக்கிற்கான விஜயத்தின் போது இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ கூறினார். அரசாங்க தகவல் … Read more

லங்கா ஐஓசி நிறுவனத்தின் முக்கிய அறிவித்தல்! உடன் நடைமுறைக்கு வரும் மாற்றம்

லங்கா ஐ. ஓ சி. நிறுவனம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில்  பெட்ரோல் விற்பனைக்கு  கட்டுப்பாடு விதித்துள்ளது. இதன்படி,  வாகனங்களுக்கான எரிபொருள் வழங்கல் மீண்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, உந்துருளி, முச்சக்கரவண்டி, மகிழுந்து மற்றும் சிற்றூர்திகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட தொகைக்கு மாத்திரமே எரிபொருள் வழங்கப்படுமென லங்கா ஐஓசி அறிவித்துள்ளது. எரிபொருள் வழங்கப்படும் விபரங்கள் அதற்கமைய, உந்துருளிகளுக்கு அதிகபட்சமாக 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிகளுக்கு அதிகபட்சமாக 2,500 ரூபாவுக்கும் எரிபொருள் வழங்கப்படவுள்ளது.  கார், ஜீப் மற்றும் சிற்றூர்திகளுக்கு அதிகபட்சம் … Read more

தீவிரமடையும் நெருக்கடி நிலை! இலங்கை மக்களின் உயிருக்கும் ஆபத்து

நாட்டில் சுகாதார வசதிகள் சீர்குலைந்துள்ளதால் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது கிடைக்கும் மருந்துகள் போதுமானதாக இல்லை எனவும், இருப்புக்கள் குறைந்து வருவதாகவும் சங்கம் வலியுறுத்துகிறது. பொதுமக்களுக்கான கோரிக்கை நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே, மக்கள் தமக்குக் கிடைக்கும் மருந்துகளை வீணாக்காமல் உரிய அளவுகளில் மாத்திரம் பயன்படுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். … Read more

தொடரும் நெருக்கடி நிலை! கட்டாரை நாடியிருக்கும் இலங்கை

இலங்கைக்கு எரிபொருள் பெற்றுக் கொள்வது தொர்பில் புதிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் கஞ்சன விஜேகேர விடுத்துள்ளார்.  தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில இது குறித்து அவர் பதிவொன்றை இட்டுள்ளார்.  அமைச்சரின் பதிவு  Met with HE Saad Sherida Al-Kaabi, the Minister of State for Energy Affairs and the President and CEO of Qatar Energy to discuss the supply of Petrolieum Products, LPG and LNG to … Read more