பொருளாதார நெருக்கடி இதுவே காரணம்! சம்பந்தன் வெளியிட்ட தகவல்

எழுபத்து நான்கு வருடங்களாக எந்த அரசாங்கமும் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு வழங்காததன் விளைவாகவே இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் ‘தி ஹிந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த செவ்வியில் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இந்த நிலை ஒருமுறை அல்ல, படிப்படியான செயல் என்று கூறினார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இந்த நிலையிலும் அரசாங்கம் பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீள சில அரசியல் கட்சிகளின் … Read more

பிரிட்டனில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்

பிரித்தானியாவில் இருந்து இரண்டு கொள்கலன்களில் நாட்டிற்கு கடத்தப்பட்ட ஐந்து சொகுசு கார்கள், ஒருதொகை வெளிநாட்டு மதுபானம் மற்றும் ஒருதொகை மசகு எண்ணெய் ஆகியவற்றை இலங்கை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட கார்கள் உள்ளிட்ட பொருட்களின் பெறுமதி 150 மில்லியனுக்கும் அதிகமாகும் என்று இலங்கை சுங்க ஊடகப் பேச்சாளரும் பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்துள்ளார். சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது, ​​மற்றொரு கொள்கலனில் இரண்டு பென்ஸ் கார்கள், ஒரு BMW கார் மற்றும் … Read more

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக சைக்கிள் ஓட்டுதலை பிரபலப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாட்டில் எரிபொருள் நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள போக்குவரத்து பிரச்சினைகளுக்கு தீர்வாக சைக்கிள் ஓட்டுதலை பிரபலப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, நகருக்கு வெளியே உள்ள பகுதிகளில் உள்ள பாடசாலைமாணவர்களுக்கு சைக்கிள் ஓட்டுவதை பிரபலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், ரயிலில் கொழும்புக்கு பயணிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு சைக்கிள் சென்று ரயில் நிலையத்தில் பாதுகாப்பாக சைக்கிளை நிறுத்தவும் போக்குவரத்து அமைச்சகம் உத்தேசித்துள்ளது. சைக்கிள் ஓட்டுபவர்களின் பாதுகாப்பிற்காக புதிய பாதைகளை அறிமுகப்படுத்துவதற்கு … Read more

என் சகோதரரின் இதயத்தில் இலங்கை தனி இடத்தைப் பிடித்திருந்தது – ஜேசன் வார்னே பெருமிதம்

தனது சகோதரரின் இதயத்தில் இலங்கை தனி இடத்தைப் பிடித்திருந்ததாக மறைந்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னின் சகோதரர் ஜேசன் வார்னே தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக ஜேசன் வார்னே மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலங்கை வந்துள்ளனர். புதன்கிழமை (29) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டியின் போது இலங்கை சுற்றுலாத்துறை விசேட நிகழ்வொன்றை திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையேயான டெஸ்ட் … Read more

மாணவர் விசாவுக்கான விண்ணப்பங்கள்: தாமதிக்காது அனுப்பி வையுங்கள்

இங்கிலாந்தில் உயர் கல்வியைத் தொடர மாணவர் விசாவுக்கு (student visa) விண்ணப்பிக்க உள்ளவர்களுக்கு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. இந்த விசா நடைமுறைக்கு சுமார் 5 வாரங்கள் ஆகும் என்பதனால் மிக விரைவாக விண்ணப்பங்களை அனுப்பிவைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. “ஆகஸ்ட் மாதத்தில் அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் எமக்கு கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். எனவே, அனைவரும் தாமதிக்காது தமது விண்ணப்பங்களை அனுப்பி வையுங்கள்” என்று கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது ட்விட்டர் … Read more

அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள விசேட பணிப்புரை

பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தாங்கிகளை திறப்பதில் தலையிட வேண்டாம் என பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்துள்ளது. எரிபொருள் விநியோகிப்பது நிறுத்தப்பட்டதும் நிலத்தடி எரிபொருள் சேமிப்புத் தாங்கிகளைத் திறக்குமாறு வரிசையில் காத்திருக்கும் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாரே பொறுப்பேற்க வேண்டும் இந்நிலையில், நிலத்தடி எரிபொருள் சேமிப்பு தொட்டிகளை திறக்க பொலிஸார் தலையிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதும் … Read more

எரிபொருள் இல்லாமல் ரயில் இடைநின்றதாக கூறப்படும் செய்தி

பயணிகளை ஏற்றிச் சென்ற புகையிரதம் ஒன்று நேற்று (23) மதியம், எரிபொருள் இல்லாமல் இடை நின்றதாக வெளியான செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நேற்று (23) மாலை 4.30 மணியளவில் கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி புறப்பட்ட ரயில், பேரலந்த பகுதியில் எரிபொருள் இல்லாமல் இடை நின்றதாக இணையத்தளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரயில்வே பொது முகாமையாளர், … Read more

இளவாலை பனைசார் உற்பத்தியாளர்களுக்கு தொழிற்கருவிகள், துவிச்சக்கர வண்டிகள்

2022 வரவு செலவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட கிராமத்துக்கான 3 மில்லியன் ரூபாய் நிதியில் ஒரு கட்டமாக, இளவாலை சௌபாக்கியா உற்பத்தி கிராமத்தில் தொழில்புரியும் பனைசார் உற்பத்தியாளர்களுக்கான தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் இன்று (24) வழங்கப்பட்டன. யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் பிரத்தியேக செயலாளர் திரு சதாசிவம் இராமநாதனினால் இவை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

அனைத்து அதிபர் – ஆசிரியர்களுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய அறிவுறுத்தல்

நாட்டில் உள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களுக்கும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முக்கிய அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.  அதன்படி, ஆசிரியர்களுக்கான போக்குவரத்து பொறிமுறை சீராகவில்லையென்றால் திங்கள் முதல் பாசாலைக்குச் செல்ல வேண்டாம் என நாட்டில் உள்ள அனைத்து அதிபர், ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஊடகங்களுக்கு செய்திக்குறிப்பொன்றை அனுப்பியுள்ளார். அரசாங்கத்திடம் கோரிக்கை அதில் மேலும், ஆசிரியர்களின் போக்குவரத்திற்கு ஏதாவது பொறிமுறையை உருவாக்குமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம், அமைச்சிடம் … Read more

திரு.தம்மிக்க பெரேரா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம்…

பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா, முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகப்  பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இன்று (24) பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் இப்பதவிப் பிரமாணம் இடம்பெற்றது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு 24.06.2022