நாட்டின் நெருக்கடி கடுமையாக உள்ளது – பிரதமர் அறிவிப்பு

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் பாரிய உணவு நெருக்கடி ஏற்படும் எனவும், இதன் தாக்கம் 2024ம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், எதிர்காலத்தில் இந்த நாட்டில் பலர் இரண்டு வேளை உணவை ஈடுசெய்ய வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2024ம் ஆண்டு வரை இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி … Read more

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்ய கொவிட் நிதியிலிருந்து 1.8 பில்லியன்…                          

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார். கொவிட் தடுப்புக்காக நன்கொடையாளர்களிடமிருந்து இந்த நிதி பெற்றுக்கொள்ளப்பட்டது. கொவிட் தொற்று தற்போது கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக இந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். மருத்துவமனைகளுக்குத் தேவையான 234 வகையான மருந்துகள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. உலக சந்தையில் மருந்துகளின் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலைமையைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டு மருந்துத் … Read more

யாழ் மாவட்டத்தில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் மண்ணெண்ணெய்

யாழ் மாவட்டத்தில் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கண்காணிப்பு பொறிமுறை ஊடாக மண்ணெண்ணெய் விநியோகிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட விவசாய குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (03) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வங்கிகள் விவசாயிகளுக்கு கடனுதவிகளை வழங்குதல், பயிர்செய்கைகளுக்கான கால அட்டவணைகளை மாற்றுதல், உணவுப்பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டத்தில் உணவு வீண்விரயத்தை குறைத்து வீட்டுத்தோட்ட உற்பத்திகளை அதிகரித்தல், விதைகளின் தேவைப்பாடு, விதை நெல் தேவைப்பாடு மற்றும் … Read more

லாஃப் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் நுகர்வோருக்கு மகிழ்ச்சியான செய்தி

சமையல் எரிவாயுவை பல மாதங்களாக சந்தைக்கு விநியோகிப்பதை நிறுத்தி இருந்த லாஃப் எரிவாயு நிறுவனம் இறக்குமதி செய்துள்ள எரிவாயுவை ஏற்றிய கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடைய உள்ளது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. 3000 மெற்றி தொன் இந்த கப்பலில் சுமார் 3 ஆயிரம் மெற்றி தொன் எரிவாயு கொண்டு வரப்படுகிறது. கப்பல் வந்தடைந்த பின்னர் அடுத்த சில தினங்களில் மீண்டும் சந்தைக்கு எரிவாயு விநியோகிக்கப்படவுள்ளது. இலங்கையில் சமையல் எரிவாயுவை பயன்படுத்துவோரில் கணிசமான தொகையினர் லாஃப் … Read more

“மரக்கறி விதைபொருள் வழங்கும் செயற்றிட்டம்”

விவசாய திணைக்களத்துடன் இணைந்து மனித வள வேலைவாய்ப்பு திணைக்களம் நடாத்தும் “மரக்கறி விதைபொருள் வழங்கும் செயற்றிட்டம்” மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (03) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது. இந் நிகழ்ச்சித்திட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர், விவசாயப் பணிப்பாளர் மற்றும் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், துறைசார் திணைக்களத் தலைவர்கள், விவசாயிகள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

அமெரிக்க டொலரொன்றின் இன்றைய பெறுமதி

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 365 ரூபா 28 சதமாக பதிவாகியுள்ளது.  அதன்படி, டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி  355 ரூபா 31 சதமாக பதிவாகியுள்ளது.  யூரோவொன்றின் பெறுமதி  மத்திய வங்கியின் நாணய மாற்று விகிதங்களின்படி, யூரோ ஒன்றின் விற்பனைப் பெறுமதி 393 ரூபா 95  சதமாகவும், யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 383 ரூபா 09 சதமாகவும் பதிவாகியுள்ளது.   பவுண்ட் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் … Read more

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மத ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் மட்டக்களப்பு மாவட்ட மத ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் விசேட கலந்துரையாடலொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (02) மாலை இடம்பெற்றுள்ளது. கலந்துரையாடலின்போது தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப்பாதுகாப்பு, அத்தியாவசிய சேவைகள் உட்பட பலதரப்பட்ட பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது. தற்போதைய இடரான நெருக்கடியான சூழலிலே மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகளை எவ்வாறு முகம்கொடுத்து மக்களுக்கு சுமூகமான சூழலை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான எட்டு விடயங்கள் அடங்கி ஆலோசனைகளை குறித்த … Read more

சீரற்ற காலநிலை: மீண்டும் “டெங்கு”

சீரற்ற காலநிலை காரணமாக எதிர்வரும் காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், 2022 ஆம் ஆண்டில் 24,523 சந்தேகத்திற்கிடமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்கவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய விமான பயணிகளின் நிலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த Aeroflot விமானத்தின் பயணிகள் நாளை மற்றும் நாளை மறுதினம் விமானங்கள் மூலம் மொஸ்கோவிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். Aeroflot நிறுவனத்தின் இலங்கை அலுவலகம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் மொஸ்கோ நோக்கி புறப்படவிருந்த விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட அனுமதிக்கப்படாமல் நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளது. விமான பயணிகளின் நிலை விமான குத்தகை நிறுவனத்துடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, விமானத்தில் இருந்த … Read more