பிரதமர் பதவிக்கு ரணிலின் நியமனத்தை ஏற்க முடியாது: கர்தினால் (Photos)

பிரதமர் பதவிக்கு ரணிலின் நியமனத்தை ஏற்க முடியாது ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவிக்கு நியமித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். புதிய அமைச்சரவையின் பிரதமராக ரணில் விக்ரமசிங்கவை நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்ததாக கூறப்படும் முடிவு குறித்து பேராயர் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் அதிருப்தி தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்பு விழாவை இரத்துச் செய்ய வேண்டும் “ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் ஒரு பிரதிநிதி மட்டுமே மற்றும் அவர் நாடாளுமன்றத்தில் … Read more

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல பலஸ்தீன அரசாங்கம் தீர்மானம்.

பெண் ஊடகவியலாளரின் கொலை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல இருப்பதாக பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்முத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார். இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஷிரின் அபு அக்லா பெண் ஊடகவியலாளரின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட போது அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார். பலஸ்தீன மேற்குக் கரை பிரதேசத்தில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட அத்து மீறலை அறிக்கையிடுவதற்காக சென்றிருந்த வேளையில் இவர் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகி கொல்லப்பட்டுள்ளார். ஆனால், இந்தத் தாக்குதலை பலஸ்தீன ஆயுததாரிகள் … Read more

திரு.ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க பிரதமரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்…

பிரதமரின் செயலாளராக திரு.ஈ.எம்.எஸ்.பி.ஏக்கநாயக்க அவர்கள், இன்று (12) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் அவர்களிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். திரு. ஏக்கநாயக்க அவர்கள், இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர ஓய்வுபெற்ற அதிகாரி ஆவார். 2015 – 2019 காலப்பகுதியில் மூன்று தடவைகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்களின் செயலாளராக கடமையாற்றிய அவர், நான்காவது தடவையாகவும் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். திரு. ஈ.எம்.எஸ்.பி. ஏக்கநாயக்க அவர்கள், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனது … Read more

பிரதமர் ரணில் நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழி

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையை உடனடியாக தீர்க்க புதிய பிரதமர் ரணில் விகிரமசிங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார்.  பிரதமராக பதவியேற்றதில் இருந்து, எரிபொருள் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதே அவரது முதன்மையான பணியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா மற்றும் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். அதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளும் விரைவில் இடம்பெறவுள்ளன.  நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார … Read more

இலங்கையில் மீ்ண்டும் 16 மணித்தியாலங்கள் ஊரடங்கு நடைமுறை

இலங்கையில் மீண்டும் 16 மணித்தியாலங்களுக்கு ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  நாடு முழுவதும், இன்று பிற்பகல் 2 மணி முதல்  பொலிஸ்  ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் போடப்பட்ட ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணி வரை நடைமுறையில்  இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் வழங்கப்பட்ட எழுத்துமூல அனுமதியின்றி, பொதுச்சாலை, தொடருந்து பாதை, பொதுப்பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் யாரும் தங்குவதற்கு அனுமதி இல்லையென ஜனாதிபதி … Read more

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இல்லை – மத்திய வங்கி ஆளுநர்

அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இல்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், ரூபாய் தொடர்பாக பிரச்சினை இல்லை என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் செலவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் பணவீக்கம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கறைபடிந்த நாள்! கலவர பூமியான இலங்கை (Video)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது கடந்த 9ஆம் திகதி ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து நாடெங்கும் பரவிய வன்முறைகள் காரணமாக 9 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 250 பேர் காயமடைந்து சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 232 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். உயிரிழந்த 9 … Read more

நீண் தூரப் போக்குவரத்து சேவைகள் இடம்பெற மாட்டாது

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட ஏழு மணித்தியாலங்களில் மாகாணங்களுக்குள் டிப்போ மட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இந்தக் காலப்பகுதியில் நீண்ட தூரப் போக்குவரத்து பஸ் சேவைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்துள்ளார். ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை போக்குவரத்து சபையின் ஊழியர்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர். இதனால் அவர்கள் இன்று சேவைக்கு சமூகமளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, மாகாணங்களுக்குள், … Read more

விரைவாக செயற்படாவிடின் நாடு முழுமையாக செயலிழந்துவிடும் – முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர்

அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமிக்கப்படாமையால் நாடு முழுவதும் செயலிழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதற்கு ,பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்க வேண்டும். பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கத் தேவையானவர்கள் தொடர்பில், பாரளுமன்ற உறுப்பினர்கள் விரைவாக கலந்துரையாடி  தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.   அத்துடன், எந்தவொரு கட்சியும் பிரதமர் பதவிக்காக ஒருவரின் பெயரை  குறிப்பிடாத பட்சத்தில், பிரதமர் பதவிக்கு ஒருவரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற … Read more