பாவனி – அமீர் கல்யாணமா.. தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக கிசுகிசுக்கப்படுபவர்கள் நடிகை பாவனி மற்றும் நடன இயக்குனர் அமீர். நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். இந்த சீரியலுக்கு பின் சில காலம் கழித்து மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தார். மேலும், தற்போது பாவனி – அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆட … Read more

இலங்கை விமான நிலையங்களில் நடைமுறைக்கு வரும் புதிய நடவடிக்கை – செய்திகளின் தொகுப்பு

கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட நாட்டிலுள்ள விமான நிலையங்களில் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் பிரபு பிரிவுகளுக்காக உணவு வழங்கும் நடவடிக்கைகளில் இருந்தும் விலகுவதற்குத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் சுதந்திர சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என அதன் தலைவர் ஜானக விஜேபதிரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர … Read more

மகிந்த பதவி விலகினால் சிக்கப் போகும் பெரும் புள்ளிகள்! தப்பிக்கும் பிரயத்தனத்தில் அரசியல்வாதிகள்

சமகால அரசியல் நெருக்கடியில் யார் பதவி விலகுவது என்பது தொடர்பில் ராஜபக்சர்கள் மற்றும் அவர்களின் தொண்டர்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.  நாளையதினம் பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகவுள்ளதாக, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி உள்ளன.  இந்நிலையில் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  மகிந்த பதவியில் இருந்து விலகி செல்வதை பாரிய மோசடிகளில் ஈடுபட்ட அவர்களின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் … Read more

மக்களுக்கு பயந்து தப்பியோடும் தென்னிலங்கை அரசியல்வாதிகள்

மக்களின் எதிர்ப்பு காரணமாக அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் தமது இல்லங்களை விட்டு வெளியேறி தற்காலிக குடியிருப்புகளுக்குச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக நாடாளுமன்றம் மற்றும் அமைச்சர்கள் வீடுகளை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் அவர்கள் வீடுகளை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய, வடமத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் அமைச்சர்கள் ஏற்கனவே தமது தனிப்பட்ட வீடுகள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை தற்காலிகமாக கைவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களில் ஒருவர் … Read more

இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக , பயனாளர்களை தொலைப்பேசியில் தொடர்புகொள்ளும் தமிழக அதிகாரிகள்

தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாவது டோஸ் தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தாதவர்கள் 1.48 கோடி பேர் இருப்பதாக கணக்கிடப்பட்ட்டுள்ளது. இவர்களின் பெயர் பட்டியலையைக்கொண்டு அவர்களது தொலைபேசி எண்களில் நேரடியாக தமிழ்நாடு மருத்துவத்துறை அதிகாரிகள் தொடர்பு கொண்டு தடுப்பூசி செலுத்த ஊக்குவிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், இந்த பணிக்காக சேகரிக்கப்பட்ட தகவல்கள் பொது தளத்தில் அனைவருக்கும் கிடைக்கும் படி வெளியானது. இதில் தடுப்பூசி செலுத்தாத நபர்களின் பெயர், முழு முகவரி, செல்போன் எண், முதல் தடுப்பூசி எந்த மையத்தில் எப்போது செலுத்திக் கொண்டனர் … Read more

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் தகவலில் உண்மையில்லை

எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்குப்புறம்பானது என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்குப்புறம்பானது என்றும் அமைச்சர் தனது டுவிட்டர்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். லங்கா இந்தியன் ஒயில் நிறுவனமோ அல்லது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமோ எரிபொருள் விலையை அதிகரிக்கவில்லை என்றும் அதில் தெரிவித்துள்ளார். பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உண்மைக்குப்புறம்பான தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் … Read more

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால சட்டம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

ஜனாதிபதி பிறப்பித்துள்ள அவசரகால உத்தரவு 14 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என பேராசிரியர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். அவசரகால உத்தரவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து 10 நாட்களுக்குள் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளமையினால் இரண்டு வாரங்களில் தானாகவே இரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி கடந்த 6ஆம் திகதி அவசரகாலச் சட்டத்தை பிறப்பித்தார். எவ்வாறாயினும் சபாநாயகரின் கூற்றுப்படி எதிர்வரும் 17ஆம் திகதியே மீண்டும் நாடாளுமன்றம் கூடும். இந்த அவசர கால சட்ட அறிக்கையில் அவசரகால … Read more

அந்தமான் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும்

வங்கக் கடலில் அந்தமான் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறதுஇது வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும். மேலும் இது இன்று (08) காலை புயலாக … Read more

இலங்கை தொடர்பில் அமெரிக்காவின் நகர்வுகள் – சீனாவை ஒடுக்க இந்தியாவுடன் கூட்டு

இலங்கைக்கு அமெரிக்கா பொருளாதார உதவிகளை வழங்கும் என்றும் அதற்கு ஈடாக அமெரிக்க – இந்திய பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பில் இலங்கையின் உடன்பாட்டைக் கோரக்கூடும் என ஜப்பானிய இணையத்தளமான Nikkei செய்தி வெளியிட்டுள்ளது. சீனாவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கையின் ஒப்புதலைப் பெறுவதற்கு பொருளாதார நெருக்கடி சிறந்த சந்தர்ப்பம் என்று அந்த தளத்தின் ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார். அந்த செய்தியில் தொடர்ந்தும் கூறப்பட்டுள்ளதாவது, “சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியின் மத்தியில் தற்போது உள்ளது. மார்ச் மாதத்தில் … Read more