ராஜபக்ச ரெஜிமென்ட் தொடர்பில் இன்று அம்பலமாகவுள்ள மோசடிகள்! பரபரப்பாக காத்திருக்கும் இலங்கை மக்கள்

இலங்கையில் பாரிய மோசடியில் ஈடுபட்டவர்களின் ரகசிய கோப்புக்கள் இன்று அம்பலப்படுத்தப்படவுள்ளதாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். பலம் வாய்ந்த அரசியல்வாதி முதல் பிரதேச சபை உறுப்பினர் வரையிலான பாரிய மோசடிகள் மற்றும் ஊழல்கள் அடங்கிய பாரியளவிலான “கோப்புகளை” இன்று நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரசியல் பீட உறுப்பினர், முன்னாள் கோப் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி, மத்திய குழு உறுப்பினரும், ஊழல் எதிர்ப்புக் குரல் அமைப்பின் … Read more

இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருள் வழங்க ரஷ்யா விருப்பம் – மேற்குலக நாடுகள் கடும் எதிர்ப்பு

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் றொஸ்னெல்ப்ட் உட்பட ஐந்து அரச எண்ணெய் நிறுவனங்கள் இலங்கைக்கு குறைந்த விலையில் எரிபொருளை வழங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த எண்ணெய் நிறுவனங்கள் மொஸ்கோவில் இருந்து எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயைப் … Read more

மதுபானம் மற்றும் பீர் விலை அதிகரிப்பு

மதுபான போத்தல் ஒன்றின் விலை 80 ரூபாவினாலும், பீர் போத்தல் ஒன்றின் (ஒரு கேன்) விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு குறித்து மதுபான நிறுவனம் கலால் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது. போக்குவரத்து, மூலப்பொருட்கள் உள்ளிட்ட செலவுகள் அதிகரித்து வருவதால், மதுபானம் மற்றும் பீர் நிறுவனங்கள் விலையை உயர்த்தியுள்ளன. அரசாங்கத்தால் கடந்த வரவு செலவுத் திட்டத்தில் அரக்கு மற்றும் பீர் மீதான வரி அதிகரிக்கப்பட்டதன் பின்னர் இதுவரையில் எவ்வித வரி அதிகரிப்பும் மேற்கொள்ளப்படவில்லை என கலால் … Read more

11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் – அனைத்து துறைகளும் முடக்கப்படும் என எச்சரிக்கை

எதிர்வரும் 6ம் திகதி நடைபெறவுள்ள ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கம் வீட்டுக்குச் செல்லாவிட்டால் எதிர்வரும் 11ம் திகதி முதல் நாடு முழுவதும் தொடர் ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் வசந்த சமரசிங்க விடுத்துள்ள விசேட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் 6ம் திகதி அரசாங்கத்திற்கு ஒத்திகை வழங்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னரும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் பதவி விலகாவிட்டால் நாடு பூராகவும் சகல துறைகளிலும் தொடர்ச்சியான ஹர்த்தால் முன்னெடுக்கப்படும் எனவும் சமரசிங்க தெரிவித்தார். … Read more

ஒல்லாந்து பெண்ணை விகாரைக்கு அழைத்து பிக்கு செய்த மோசமான செயல்

பதுளை துன்ஹிந்த அருவி பிரதேசத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒல்லாந்து நாட்டு பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இந்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளார். 52 வயதான ஒல்லாந்து நாட்டு பெண் நேற்று துன்ஹிந்த அருவியை பார்வையிட சென்ற போது, இந்த பௌத்த பிக்கு, பெண்ணுக்கு பிரித் நூல் ஒன்றை கையில் கட்டியுள்ளதுடன் விகாரைக்கு வந்து பார்வையிட்டு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதன் பின்னர் பௌத்த பிக்கு … Read more

மக்களின் கடும் எதிர்ப்பு – காலி முகத்திடலில் பின்வாங்கிய கலகத்தடுப்பு பொலிஸார்

இன்று காலி முகத்திடலில் குவிக்கப்பட்ட கலகத்தடுப்பு பொலிஸார், போராட்டக்காரர்களின் எதிர்ப்பை அடுத்து மீளப் பெறப்பட்டனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான போராட்டம் தொடரும் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் அதிகளவான கலகத்தடுப்பு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். இருப்பினும், அந்த இடத்தில் திரண்டிருந்த போராட்டக்காரர்கள் சிலர் காவல்துறையினரை எதிர்கொண்டனர். இறுதியில் பொலிஸார அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில் மேடையொன்றை அமைக்கத் தொடங்கியதை அடுத்து, கலகத் தடுப்புப் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர். மூத்த காவல்துறை அதிகாரிகள் போராட்டக்காரர்கள் … Read more

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம்

இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கத்தின் போராட்டம் கைவிடப்பட்டது. இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம்; தமது வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது. பௌசர் வாடகைக் கட்டணத்தை 30 சதவீதத்தினால் அதிகரிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சரின் உறுதிமொழி கிடைத்ததை அடுத்து வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கை முடிவடைந்துள்ள நிலையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என சங்கத்தின் … Read more

மகிந்த பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் – பசில் வெளியிட்ட தகவல்

மகாநாயக்க தேரர்களின் கோரிக்கையை கருத்திற் கொண்டு பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக தீர்மானம் எடுக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பின் போது பசில் ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வாறானதொன்று நடந்தால், புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கான வேட்புமனுக்களை கட்சித் தலைமைக் குழுவொன்று கோரினால், மகிந்த ராஜபக்சவைத் தவிர வேறு யாரையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்னிறுத்தாது என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். … Read more