தென்னிலங்கை அரசியல்வாதிகளுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ள மகா நாயக்கர்கள்

எதிர்காலத்தில் எந்தவொரு அரசியல்வாதிகளும் தம்மைச் சந்திக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது என மல்வத்து பீடம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான தகவலை மல்வத்து பீடத்தின் மாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார். மாநாயக்க தேரரின் சம்மதத்துடன் நாட்டை நெருக்கடியிலிருந்து காப்பாற்ற இடைக்கால அரசாங்கம் அமைப்பது உள்ளிட்ட ஆறு யோசனைகள் அடங்கிய கடிதம் ஒன்றை மகா நாயக்கர்கள் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் கட்சித் தலைவர்களுக்கு அனுப்பியிருந்தனர். குறித்த கடிதத்திற்கு இதுவரையில் எவரும் சாதகமான பதிலை … Read more

ஓய்வுபெறும் இந்திய இராணுவ பதவி நிலை பிரதானிக்கு இராணுவ தளபதி வாழ்த்து

இலங்கை இராணுவத்திற்கு இராணுவப் பயிற்சி வழங்குதல், உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நன்கொடைகளை வழங்குதல், கொள்கை ரீதியான மேம்பாடுகள், இராணுவத்தின் நிபுணத்துவ பரிமாற்ற திட்டங்கள், பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் ஒன்றிணைந்த இராணுவ பயிற்சிகள், ஆகியவற்றுக்காகவும் பாரம்பரிய நட்புறவுகளுக்கு அப்பால் சென்று தனிப்பட்ட நல்லெண்ணத்தின் அடிப்படையில் கொவிட் – 19 தொற்றுநோய் பரவல் காலத்தில் இலங்கைக்கான மருத்துவ உதவிகள் என்பவற்றை இரு நாட்டு இராணுவங்களும் தானும் என்றும் மறவோம் என் குறிப்பிடப்பட்ட, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் … Read more

லங்கா சதொசவில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

சதொச நிறுவனத்திலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார். கொள்முதல் முறையில் உள்ள சில காரணிகளே இதற்குக் காரணம் என்று அமைச்சர் கூறினார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்.  இந்த நிலையில்,  அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும்  அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சதொச நிலையத்தில் சற்று குறைவான விலையில் பொருட்கள் கொள்வனவு  செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது. Source link

மருந்துகள் , மருத்துவப் பொருட்கள் கையளிப்பு

2022 ஏப்ரல் 29ஆம் திகதி, உயர் ஸ்தானிகர் கௌரவ கோபால் பாக்லே அவர்களால் ஒரு தொகுதி மருந்துகள் மற்றும் ஏனைய மருத்துவப் பொருட்கள் சுகாதார அமைச்சர் கௌரவ சன்ன ஜயசுமன அவர்களிடம் கொழும்பில் கையளிக்கப்பட்டது. இந்திய மக்களின் அன்பளிப்பான இம்மருந்துப் பொருட்கள் துரிதமாக அனுப்பப்படுவதனை உறுதி செய்வதற்காக இந்திய கடற்படைக் கப்பலான கரியால் சேவையில் அமர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். 2.   பேராதனை போதனா வைத்தியசாலையால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இம்மருத்துவப் பொருட்கள் விநியோகிக்கப்படுகின்றன. 2022 மார்ச் … Read more

இலங்கை மின்சார சபையின் புதிய அறிவிப்பு

புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.  தற்போதைய சூழ்நிலைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.    இதேவேளை, இன்றும் நாளை மறுதினம் மாத்திரம் மின்துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ரமழான் தினமான நாளைய தினம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படமாட்டாது என பொதுபயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  Source link

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டித் தொடரிர் நேற்று நடைபெற்ற போட்டியில் 13 ஓட்டங்ள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. ஐபிஎல் தொடரில் நேற்று (01) நடைபெற்ற 46வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணியின் துவக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், கான்வே ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை … Read more

இந்திய அரசாங்கத்தின் மனிதாபிமான உதவித்திட்டம்

அபிவிருத்தி ஒத்துழைப்பு பங்குடைமை ஊடாக மக்களை மையமாகக் கொண்டு,  இந்திய அரசால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு மேலும் வலுவூட்டும் அதேநேரம், இலங்கையிலுள்ள பல்வேறு தரப்பினருக்கும் தேவையான உதவிகளை வழங்குதல் மற்றும் பல்வேறு மனிதாபிமான உதவித்திட்டங்களால் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்தல் ஆகிய நடவடிக்கைகளிலும் இந்தியா நேரடியாக ஈடுபடுகின்றது. 2.   2022 ஏப்ரல் 27ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனையில் விதவைகள் மற்றும் ஏனைய பல்வேறு குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு நிவாரணப் பொதிகள், இரண்டாம் நிலை செயலாளர் … Read more

சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய பதவி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன கட்சியின் மாத்தறை தேர்தல் தொகுதியின் பிரதான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால் அவர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். தென் மாகாண முன்னாள் ஆளுநர் ஹேமல் குணசேகர முன்னிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.  Source link

நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார்

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவருமானால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என அரசாங்க முதற்கோலாசான் , அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிளவு காரணமாக அந்த யோசனையின் ஊடாக அவர்களின் எதிர்ப்பார்ப்பை அடைய முடியாதென ரணதுங்க தெரிவித்துள்ளார். குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நாளை மறுதினம் சபாநாயகருக்கு கையளிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நேற்றைய மேதின ஊர்வலத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.. இதேவேளை, மக்கள் பிரதிநிதிகளாக, மக்களின் வாக்குகளில் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதிகள், மக்களின் மேம்பாட்டிற்காக … Read more

இந்தியாவில் மேலும் 3 ஆயிரத்து 157 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 26 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த சில தினங்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் நேற்றும், இன்றும் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்நிலையில், இன்று (02) புதிதாக 3,157 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,82,345 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். … Read more