அவுஸ்திரேலியாவின் சிட்னியிலும் அடைமழை

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அடைமழை பெய்து வருவதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிட்னியிலுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்களின் குடியிருப்புகளிலிருந்து வெளியேறியுள்ளனர். வெள்ளப்பெருக்கினால் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் சில தினங்களில் மழையுடன் கூடிய காலநிலை மேலும் தீவிரமடையலாமென அவுஸ்திரேலிய வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அனர்த்த நிலை மேலும் உக்கிரமடையுமிடத்து மக்கள் குடியிருப்புகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்குத் தயாராக இருக்க வேண்டுமென்றும் அதிகாரிகள் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

நாளை என்ன நடக்கும்..! அச்சத்தில் இலங்கை மக்கள்

Courtesy: வி.தேவராஜ் சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட இலங்கை இப்போது லெபனான் பாணியில் பயணிக்கின்றது. மக்களின் பொறுமைக்கும் சகிப்புத்தன்மைக்கும் எல்லை உண்டு. இலங்கையின் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கான தீர்வுக்கு தடைக் கல் ராஜபக்சர்கள் இலங்கையின் 22 மில்லியன் மக்கள் மீது திணிக்கப்பட்ட பொருளாதார நெருக்கடி தற்போது மனிதாபிமான நெருக்கடியாக மாறிவிட்டது. சிங்கப்பூராக இருக்க ஆசைப்பட்ட ஒரு நாடு இப்போது லெபனான் பாணியில் வீழ்ச்சியை எதிர்நோக்கி உள்ளது. நாளை என்ன நடக்கும் என்பது குறித்த அச்சத்தில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். … Read more

வெளிநாட்டு பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் கைது

திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேலூர் பகுதியில் வெளிநாட்டு பெண்கள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை நேற்று(02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நிலாவெளி- வேலூர் பகுதியில் உள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 28 வயது மற்றும் 31 வயதுடைய பெண்கள் இருவர் கடற்கரையோரமாக சென்றுள்ளனர். சம்பவம் இதன்போது உள்வீதியூடாக வந்த இளைஞர் இரு யுவதிகளையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே … Read more

பிரதமர் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என தகவல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரைவில் நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என அரசாங்கத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிக்காத ரணில் சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிக்க ரணில் விக்ரமசிங்க தவறியுள்ளதன் காரணமாக அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்க உள்ளதாக கூறப்படுகிறது. மீண்டும் அலி சப்றி இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்த முன்னாள் நிதியமைச்சர் அலி சப்றி மீண்டும் நிதியமைச்சராக … Read more

இலங்கை வந்த சுற்றுலா பயணிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பொலிஸ்

தென்னிலங்கையில் சுற்றுலா பயணிகளுக்கு நடந்த சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருவதால் இலங்கையின் சுற்றுத்துறைக்கு பெரும் சவால் நிலை ஏற்பட்டுள்ளது. காலி சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்ற சுற்றுலா பயணிகள் குழுவொன்றுக்கு பொலிஸார் எரிபொருள் வழங்க மறுத்தமை தொடர்பில் இலங்கை சுற்றுலா சபை, பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு நேர்ந்த கதி அத்தியாவசிய சேவைகளுக்கு எரிபொருள் வழங்குவதற்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிலையத்திற்கு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சிறு … Read more

இலங்கையிலிருந்து வெளிநாடு செல்ல கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான அறிவித்தல்! செய்திகளின் தொகுப்பு

நாட்டில் இருந்து வெளிநாடு செல்வதற்காக தற்போது கடவுச்சீட்டுக்களைப் பெற்றுக் கொள்ள காத்திருப்பவர்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினரால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, குடிவரவு திணைக்களத்தின் ஒரு நாள் சேவையின் கீழ் 2022 ஜூலை 04 திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி பிராந்திய அலுவலகங்களில் விமான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் முதல் கட்டமாக, ஒரு நாள் பிராந்திய அலுவலகங்களுக்கு ஒரு நாள் சேவைக்காக திகதி மற்றும் … Read more

எரிபொருளை ஏற்றிய 4 கப்பல்கள் இம்மாதம் இலங்கை வரவிருப்பதாக எரிசக்தி அமைச்சர் தெரிவிப்பு

டீசலை ஏற்றிய மூன்று கப்பல்கள் உட்பட நான்கு எரிபொருள் கப்பல்கள் ,இம்மாதம் இலங்கைக்கு வரவிருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.. அரசாங்க தகவல் திணைக்களத்தில இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ,இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,டீசலை ஏற்றிய  கப்பல் இம்மாதம் 8 அல்லது 9ஆம் திகதியில் நாட்டுக்கு வரவுள்ளது இரண்டாவது கப்பல் ஜூலை 11ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கு இடையிலும் மூன்றாவது கப்பல் ஜூலை 15க்கும் 17 ஆம் திகதிக்குமிடையிலும் … Read more

அலைகள் மேலெழும்ப கூடிய சாத்தியம்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 ஜூலை 03ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேற்கு பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளில் அடுத்த சில நாட்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை: புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு … Read more

2023 வரை கருணை காட்டும் கேது – இந்த 3 ராசிக்கு மட்டும் தொட்டதெல்லாம் பொன்னாகும்

கேது ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. எனினும் இந்த கேது ராசி மாற்றத்தில் 3 ராசிக்காரர்களுக்கு 2023 வரை சிறப்பான பலன்கள் கிடைக்க  போகின்றது. அந்த அதிர்ஷ்டசாலி யார் யார் என்று பார்ப்போம். சிம்மம் கேது சிம்ம ராசிக்காரர்களுக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்கள் இலக்குகளை நீங்கள் நினைத்தப்படி அடைவீர்கள். சில நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடூவீர்கள்.  கன்னி கன்னி ராசிக்காரர்களுக்கு 2023 வரையிலான காலம் மங்களகரமானதாக இருக்கும். இதன் … Read more

நாளை முதல் ஒருவாரத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடு முழுவதுமுள்ள அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (04) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் இன்று (03) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.