Elon Musk Twitter: என்ன ஆகப்போகிறது எலான் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தம்!

அமெரிக்காவில் நம்பிக்கைக்கு எதிரான அலுவலர்களால் ட்விட்டர் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக வழக்கறிஞர் குழு ஒன்று எலான் மஸ்கிற்கு எதிராக திரும்பியுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரை கையக்கப்படுத்துவதற்கு எதிர்பு தெரிவித்து இவர்கள் பரப்புரையைத் தொடங்கியுள்ளனர். ட்விட்டர் ஒப்பந்தம் நிறைவடையும் தருவாயில் இந்த பிரச்னை புதிதாகக் கிளம்பியுள்ளது. டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கின் சுமார் 3 லட்சத்து 41 ஆயிரத்து 855 கோடி ரூபாய் ஒப்பந்தத்தை பிற கட்டுப்பாட்டாளர்களால் மதிபாய்வு செய்யப்பட வேண்டும். மேலும் படிக்க | BSNL Recharge: … Read more

Free OTT Apps: ஒரு ரூபாய் செலவில்லாமல் ஓடிடி தளங்கள்!

Free OTT Apps: இப்போதெல்லாம் மக்கள் ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் தொடர்களை பார்க்க விரும்புகின்றனர். பயனர்களின் ஆர்வத்திற்கு தீனி போடும் வகையில், பல தளங்கள் ஓடிடி சேவைகளை சந்தாதாரர்களுக்கு அளித்து வருகின்றன. OTT தளத்தில் சந்தாக்கள் மூலம் கிடைக்கும் மொத்த வருவாய் ரூ.54 பில்லியனை எட்டியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டிற்கும் ரூ.102 பில்லியனாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் ஓடிடி தளங்களைக் குறித்து பேசுகையில், “சர்வதேச பிராண்டுகளான Netflix, Amazon Prime Video ஆகியவை … Read more

WhatsApp Fraud Alert: லாட்டரி வடிவத்தில் வரும் புதிய வாட்ஸ்அப் மோசடி!

WhatsApp Fraud Alert: சமூக ஊடகங்கள் மற்றும் அரட்டை பயன்பாடுகள் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கிய அங்கமாகிவிட்டன. மேலும் பலர் இணைந்திருக்கவும், ஒருவருக்கொருவர் செய்திகளைப் பகிரவும் இதுபோன்ற செயலிகள் அல்லது தளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், வாட்ஸ்அப் தான் இதில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது என்று சொன்னால் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. கடந்த சில நாள்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் காணப்பட்ட மோசடி மீண்டும் ஒருமுறை வேறு வடிவத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. BSNL Recharge: பிஎஸ்என்எல் ரூ.22 ரீசார்ஜில் 90 நாள்கள் … Read more

90 நொடிகள் வரை ரீல்ஸ் பதிவு செய்யலாம்; ரீல்ஸ் தளத்தில் புதிய அம்சங்களை சேர்த்த இன்ஸ்டா

போட்டோ ஷேரிங் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம், ரீல்ஸில் புதிய அம்சங்களை சேர்த்துள்ளது. ரீல்ஸின் நேரத்தை 90 நொடிகள் வரை நீட்டித்துள்ளது அதில் ஒன்றாக உள்ளது. இந்தியாவில் கடந்த 2020 வாக்கில் ஷார்ட் வீடியோ தளமான ரீல்ஸ் (பிளாட்பார்மை) அறிமுகம் செய்தது இன்ஸடாகிராம். அப்போதிலிருந்தே சமூக வலைதள பயனர்கள் மத்தியில் இதற்கு ஏகபோக வரவேற்பு இருந்து வருகிறது. அசல் கன்டென்ட் கிரியேஷனுக்காக இந்த தளத்தை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்வதாக விளக்கம் கொடுக்கப்பட்டது. அப்போது முதலே பல்வேறு அம்சங்களை ரீல்ஸ் … Read more

Moto e32s Launch: Redmiக்கு போட்டியாக Moto E32s போன் – விலை உங்கள் சட்டை பையை காலி செய்யாது!

Motorola E32s Launch: லெனோவாவுக்குச் சொந்தமான மோட்டோரோலா தனது புதிய மலிவு விலை ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மோட்டோ E32s பட்ஜெட் போன் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. பல நாள்களாக போன் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த நேரத்தில், மோட்டோரோலா நிறுவனம் தற்போது போனை இந்திய சந்தைக்குக் கொண்டுவந்துள்ளது. இந்த மோட்டோ போனின் விலை 10 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக இருப்பது சிறப்பு. 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்ட டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு … Read more

BSNL Recharge: பிஎஸ்என்எல் ரூ.22 ரீசார்ஜில் 90 நாள்கள் வேலிடிட்டி… நம்பினால் நம்புங்கள்!

BSNL Recharge: டெலிகாம் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்க பல்வேறு திட்டங்களை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் வரம்பற்ற அழைப்பு, இலவச டேட்டா, ஓடிடி அணுகல் போன்ற பலன்களை வழங்குகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடபோன்-ஐடியா ஆகிய நிறுவனங்கள் தொடர்ந்து போட்டியில் இருக்கின்றன. ஆனால், மலிவான திட்டத்திற்கு வரும்போது, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா பெயர்கள் மேலே வராது. ஏனென்றால், அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலைத் திட்டங்களை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனம் பல … Read more

Xiaomi Redmi: இந்த சியோமி, ரெட்மி போன்களுக்கு இனி அப்டேட் கிடைக்காது!

Xiaomi Redmi: நீங்கள் சியோமி அல்லது அதன் எதேனும் இணை பிராண்ட் ஸ்மார்ட்போன்களான மி, ரெட்மி போன்ற போன்களைப் பயன்படுத்துபவராக இருந்தால், இது உங்களுக்கு அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கலாம். ஏனெனில், சியோமி தனது கைவிடப்பட்ட அப்டேட் பட்டியலில் புதிய ஸ்மார்ட்போன்களை சேர்த்துள்ளது. இதன் காரணமாக, பட்டியலில் உள்ள ஸ்மார்ட்போன்களுக்கு இனி எந்த விதமான அப்டேட்டும் கிடைக்காது. நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இதில் Redmi K20, Redmi Note 7 Series, MI Pad ஆண்ட்ராய்டு … Read more

6G வருகையுடன் ஸ்மார்ட்போன் காலம் முடிவுக்கு வருமா?

மனிதர்கள் மொபைலைக் கண்டுபிடிக்க பல வருடங்கள் ஆனது. ஆனால் மொபைலில் இருந்து ஸ்மார்ட்போன் வரையிலான பயணம் மிகக் குறுகிய காலத்தில் முடிந்துவிட்டது. இந்த நிலையில் 5ஜி நெட்வெர்க்கைத் தொடர்ந்து 2030 ஆம் ஆண்டிற்குள் 6ஜி சேவை அமலில் இருக்கும் என நோக்கியா தலைமை செயல் அலுவலர் Pekka Lundmark கணித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக தொழில்நுட்பம் வேகமாக மாறிவருகிறது. இந்த கேஜெட்டுகளில் சில காலப்போக்கில் பின்தங்கிவிட்டன. அதன்படி, ஸ்மார்ட்போன்களின் பயன்பாடும் நின்றுவிடலாம். இந்த சகாப்தமும் முடிவுக்கு வரலாம் … Read more

21000mAh Battery Phone: நம்புற மாதிரி இல்லையே… 94 நாள்கள் தாங்கும் பேட்டரியா!

21000mah Battery Phone: சீன நிறுவனமான Oukitel, 21,000mAh பேட்டரியுடன் வரும் சக்திவாய்ந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த போனின் பேட்டரி ஒருமுறை சார்ஜ் செய்தால் 94 நாள்கள் வரை நீடிக்கும் என்பது தான் இப்போது டெக் டவுனின் ஹாட் டாக்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் வெறுப்பு பதிவுகள் அதிகரிப்பு

கலிஃபோர்னியா: சமூக வலைதளங்களில் வெறுப்பு பதிவுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் பேஸ்புக்கில் 53,000 வெறுப்பு பதிவுகள் கண்டறியப்பட்டதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் 38% அதிகம். மார்ச்சில் பேஸ்புக்கில் 38,600 வெறுப்புப் பதிவுகள் கண்டறியப்பட்டன. அதேபோல் இன்ஸ்டாகிராமில் வன்முறைப் பதிவுகளின் எண்ணிக்கை 86% அதிகரித்துள்ளது. மார்ச் மாதம் இன்ஸ்டாகிராமில் 41,300 வன்முறை பதிவுகள் கண்டறியப்பட்ட நிலையில் ஏப்ரலில் அது 77,000 ஆக உயர்ந்துள்ளது என்று மெட்டா தெரிவித்துள்ளது. இவற்றில் … Read more