ரீமேக் படங்கள், வெப் தொடர்கள்… நல்வாய்ப்பு என்கிறார் ரம்யா நம்பீசன்!

கோவை கணுவாய் பகுதியில் ஜாய் பாரடைஸ் எனும் புதிய வீட்டு மனைகளுக்கான விற்பனை துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரபல நடிகையும்,பின்னனி பாடகியுமான ரம்யா நம்பீசன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “திரைப்பட பின்னணி பாடகி வாணி ஜெயராம் நம்மை விட்டு பிரிந்தது மீளாத்துயரம் என வேதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தாம் தற்போது ஓடிடி தள வெப் தொடர்களில் நடித்து வருவதாகவும், வெப் தொடர்கள் தற்போது வரவேற்பை பெற்று வருவதாகவும், வளர்ந்து வரும் … Read more

உச்சக்கட்ட மகிழ்ச்சியில் வரலட்சுமி சரத்குமார்

தமிழில் சிம்பு நடித்த போடா போடி என்ற படத்தில் அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன் பிறகு தாரை தப்பட்டை, சர்க்கார், சண்டக்கோழி- 2 உள்பட பல படங்களில் நடித்தார். சமீபகாலமாக தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோயர்கள் வந்ததை அடுத்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றுள்ளார். அதை வெளிப்படுத்தும் விதமாக தான் அதிரடி நடனமாடும் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதோடு ‛என் மீது பொழிந்த … Read more

Dhanush: நான் அந்த சமயத்தில் மனஉளைச்சலில் இருந்தேன்..மேடையில் வெளிப்படையாக பேசிய தனுஷ்..!

தனுஷ் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே வாழக்கூடிய நடிகரான தனுஷ் இரண்டு தேசிய விருதுக்கு சொந்தக்காரராக இருக்கின்றார். மேலும் தமிழில் மட்டுமல்லாது பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று பிரபலமான நடிகராக வலம் வருகின்றார். தற்போது வாத்தி படத்தின் மூலம் நேரடி தெலுங்கு படத்திலும் அறிமுகமாகவுள்ளார் தனுஷ். இந்நிலையில் கடந்தாண்டு திரையுலகை பொறுத்தவரை தனுஷிற்கு வெற்றிகரமான ஆண்டாகவே அமைந்தது எனலாம். தொடர் தோல்விகளினால் தவித்து வந்த தனுஷ் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் … Read more

Rajini: மோதலில் இறங்கிய ரஜினி – கமல்..காரணம் அஜித்தா? இது என்ன புது கதையா இருக்கு..!

தற்போது கண்டிப்பாக ஒரு வெற்றி அவசியம் என்ற கட்டாயத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி தள்ளப்பட்டுள்ளார். ஏனென்றால் அவரின் சமீபத்திய திரைப்படங்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. குறிப்பாக அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று படுதோல்வி அடைந்தது. இதன் காரணமாக ரஜினியின் மீதும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. எனவே அந்த விமர்சனங்களுக்கு எல்லாம் ஜெயிலர் படத்தின் வெற்றியின் மூலம் பதிலடி கொடுக்க ரஜினி காத்துக்கொண்டிருக்கிறார். AK62: AK62 பஞ்சாயத்து…வசமாக சிக்கிக்கொண்ட அஜித்..கொஞ்சம் கஷ்டம் … Read more

பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு இறுதி மரியாதை..!!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார். அவருக்கு வயது (78). படுக்கை அறையில், கீழே விழுந்து நெற்றியில் அடிபட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. வாணி ஜெயரம் கடந்த 1971 ம் ஆண்டு இந்தியில் வெளிவந்த “குட்டி”படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் 1974 ஆம் ஆண்டு வெளியான ‘தீர்க்கசுமங்கலி’ படத்தில் இடம்பெற்ற ‘மல்லிகை என் மன்னன் மயங்கும்’பாடம் மூலம் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி என 18 மொழிகளில் 10,000 … Read more

Vani jayaram: வாணி ஜெயராம் இறப்பு..போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டால் வெளியான உண்மை..!

புகழ்பெற்ற பாடகியான வாணி ஜெயராம் நேற்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார் வாணி ஜெயராம். இதையடுத்து 78 வயதான வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வாணி ஜெயராம் ரத்த காயங்களுடன் அவரது வீட்டில் பிணமாக கிடந்தார். இதையடுத்து போலீசார் இவரின் இறப்பு இயற்கைக்கு மாறானது என கருதி விசாரித்து வருவதாக தெரிவித்தனர். … Read more

‘ஆர்ஆர்ஆர்’ நாயகனுடன் கைக்கோர்க்கும் இயக்குநர் வெற்றிமாறன்? – தனுஷும் இருக்கிறாரா?

இயக்குநர் வெற்றிமாறன், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் உடன் கைக்கோர்க்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘விசாரணை’, ‘வடசென்னை’, ‘அசுரன்’ உள்ளிட்ட படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் வெற்றிமாறன். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய ‘துணைவன்’ என்கிற சிறுகதையை மையமாகக் கொண்டு, தற்போது ‘விடுதலை’ என்றப் படத்தை இயக்குநர் வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இரண்டுப் பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் … Read more

தமிழ் சினிமா உலகத்துக்கு நற்சான்று அளிக்கும் பிகில் பட நாயகி!

கோவை மருதமலை சாலையில் உள்ள பி.என் புதூரில் தனியார் நகைக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் ‘பிகில்’ பட பிரபல நடிகை அமிர்தா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “தற்போது ‘ஹனுமன்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். தமிழ் படத்தில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருகிறேன். தமிழ் சினிமாவில் நடிகைகளிடம் வேறுபாடு பார்ப்பதில்லை. திறமை … Read more

மீண்டும் தொடங்கும் குஷி படப்பிடிப்பு! சமந்தா வருவாரா?

தெலுங்கின் முன்னணி நட்சத்திர இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா – சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘குஷி’ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருப்பதாக படக் குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருக்கிறார்கள். முன்னணி இயக்குநர் சிவ நிர்வானா இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் ‘குஷி’. இதில் விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சமந்தா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் இந்த திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து, இயக்குநர் … Read more

Malavika Mohanan: அய்யய்யோ, சீயானின் தங்கலான் ஹீரோயினுக்கு என்னாச்சு?: ரசிகர்கள் கவலை

மாளவிகா மோகனனிடம் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பார்த்த ரசிகர்களுக்கு பயம் வந்துவிட்டது. மாளவிகாசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படம் மூலம் கோலிவுட் வந்தவர் மாளவிகா மோகனன். அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்தார். தனுஷின் மாறன் படத்திலும் நடித்தார். தற்போது சீயான் விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இது தவிர்த்து மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் தலா ஒரு படத்தில் நடித்து வருகிறார். புகைப்படங்கள்மாளவிகா மோகனனின் பெயரை சொன்னாலே அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் … Read more