Mano Bala: நடிகர் மனோ பாலாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை… இப்போது எப்படி இருக்கிறார்?

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமைனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் மனோ பாலாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மனோ பாலாதமிழ் சினிமாவில் உதவி இயக்குநராக அடியெடுத்து வைத்தவர் மனோ பாலா. பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்த மனோ பாலா பின்னர் ஆகாய கங்கை படத்தின் மூலம் இயக்குநரானார். தொடர்ந்து பல படங்களை இயக்கியுள்ளார் மனோ பாலா. மேலும் பல படங்களை தயாரித்தும் உள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் மட்டுமின்றி நடிகராகவும் தடம் பதித்துள்ளார். ​ … Read more

முழுநீள ஆக்‌ஷனில் இறங்கிய ஷாருக்கான்! சாதித்தாரா, சோதித்தாரா? – `பதான்’ திரைப்பார்வை

இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரும் சதித்திட்டத்தை தீட்டியிருக்கும் கும்பலின் கண்ணில் மண்ணைத் தூவினாரா பதான் என்பதே ஷாருக்கான் நடித்திருக்கும் ‘பதான்’ படத்தின் ஒன்லைன். ‘ராக்கெட்ரி’ (இந்தி வெர்ஷன்), ‘பிரமாஸ்திரா’ போன்ற படங்களில் தலைக் காட்டியிருந்தாலும் , கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் இடைவெளி என்பதால், ஷாருக்கானிற்கு இது நிச்சயம் மிகப்பெரிய கம்பேக் படமாக இருக்கும் என பேசப்பட்டது. அதேபோல், சமீப காலங்களில் அதிகரித்து வரும் பாய்காட் கலாசாரம். எல்லா பாலிவுட் படங்களையும் தொடர்ந்து பாய்காட் சொல்லி வந்த இந்தி ரசிகர்களை … Read more

சைந்தவ் : வெங்கடேஷ் நடிக்கும் முதல் பான் இந்தியா படம்

தெலுங்கின் முன்னணி நடிகர் வெங்கடேஷ் நடிக்கும் முதல் பான் இந்தியா படத்திற்கு சைந்தவ் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஹிட் : பர்ஸ்ட் கேஸ் மற்றும் ஹிட் : செகண்ட் கேஸ் படங்களை இயக்கிய சைலேஷ் இயக்குகிறார். எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் இந்த திரைப்படத்தை நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் வெங்கட் போயனப்பள்ளி தயாரிக்கிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த விவரங்கள் … Read more

Vijay: அது என்னோட தப்பா இருக்கலாம்: விஜய் குறித்து அப்பா எஸ்.ஏ.சி. சொன்ன விஷயம்.!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்பவர் விஜய். பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வரும் இவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவரும் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்தவர். பல முன்னணி நடிகர்களின் நடிப்பில் பல வெற்றிப்படங்களை இயக்கியவர். விஜய் அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இடையே சமீப காலமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசிக்கொள்வதில்லை என கூறப்படுகிறது. எஸ்.ஏ. சி தற்போது ‘நான் கடவுள் இல்லை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். … Read more

`அயலி’ முதல் `பதான்’ வரை… இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு(Theatre) Pathaan (ஹிந்தி) – ஜனவரி 25 பிகினிங் (தமிழ்) – ஜனவரி 26 மாளிகபுரம் (தமிழ்) – ஜனவரி 26 Hunt (தெலுங்கு) – ஜனவரி 26 Sindhooram (தெலுங்கு) – … Read more

Kamal Haasan: போடு வெடிய.. ஆண்டவரின் அடுத்த பட ரிலீஸ்: வெளியான அதிரடி அறிவிப்பு.!

கடந்த வருடம் மே மாதம் வெளியான ‘விக்ரம்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தற்போது ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார் கமல் . நீண்ட காலமாக ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் விழுந்து 3 தொழிலாளர்கள் பலியான சம்பவம் மற்றும் கொரோனா, லாக்டவுன் போன்ற காரணங்களால் இந்தப்படத்தின் வேலைகள் தொடங்கப் படாமலே இருந்தது. இந்நிலையில் இந்தப்படம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் … Read more

Thalapathy 67: 'தளபதி 67' அப்டேட் கொடுத்த லோகேஷ்: அப்செட்டான விஜயண்ணா ரசிகர்கள்.!

விஜய்யின் ‘வாரிசு’ படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடி வருகிறது. நீண்ட இடைவேளைக்கு பின் பேமிலி செண்டிமென்ட் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளார் விஜய். ‘வாரிசு’ படத்தினை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள அடுத்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இந்தப்படம் குறித்த அறிவிப்பிற்காக நீண்ட காலமாக காத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். தமிழ், தெலுங்கு மொழியில் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ள ‘வாரிசு’ படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் தில் ராஜு … Read more

AK62: தள்ளிப்போகும் AK62 படப்பிடிப்பு..இதுதான் காரணமா ?

அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு துணிவு திரைப்படம் வெளியானது. வினோத்தின் கூட்டணியில் அஜித் நடித்த மூன்றாவது திரைப்படமான துணிவு ரசிகர்களின் அமோகமான வரவேற்பை பெற்றது. சமூகம் சார்ந்த கருத்தோடு கூடிய ஆக்ஷன் திரில்லர் படமாக வெளியான இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெற்றது. மேலும் கடைசியாக இவர்களின் கூட்டணியில் வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் துணிவு படத்தின் வெற்றி அதனை ஈடு செய்துள்ளது. இதையடுத்து அஜித் இயக்குனர் விக்னேஷ் … Read more

Rashmika Mandanna: அவரோட டூர் போனதில் என்ன தப்பு? நடிகை ராஷ்மிகா மந்தனா ஆவேசம்!

விஜய் தேவரகொண்டாவுடன் தான் மாலத்தீவுக்கு சென்றதில் என்ன தவறு என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கிரிக் பார்ட்டிகர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட படத்தின் திரைத்துறைக்கு அறிமுகமானார். அடுத்தடுத்து கன்னட படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு சினிமாவில் சலோ படத்தின் மூலம் என்ட்ரியானார். தொடர்ந்து சரீலேனு நீக்கெவரு, தேவதாஸ், பீஷ்மா, புஷ்பா, சீதா ராமம் உள்ளிட்ட … Read more

பாக்ஸ் ஆஃபீஸில் கொடி கட்டி பறக்கும் பதான்..! வாரிசு – துணிவு கலெக்ஷன் பாதிப்பு

விஜய் மற்றும் அஜித் குமார் நடித்த படங்கள் ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. இரண்டு படங்களுமே ஏறக்குறைய சரிசமமான வசூலை வாரிக் குவித்துள்ளன. குறிப்பாக தென்னிந்திய சினிமா மார்க்கெட்டில் இப்போதைய கலெக்ஷனில் வாரிசு மற்றும் துணிவு படங்கள் மட்டுமே டாப் கலெக்ஷனில் இருக்கின்றன. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் முறையே பாலகிருஷ்ணாவின் வீர சிம்ம ரெட்டி மற்றும் சிரஞ்சீவியின் வால்டேர் வீரய்யா படங்கள் இருக்கின்றன.  இப்போது, இந்த படங்களின் பாக்ஸ் … Read more