அரபிக்குத்து – மாலத் தீவிலிருந்து பூஜாவின் அட்டகாச ஆட்டம்

தென்னிந்திய அளவில் 24 மணி நேரத்தில் அதிகப் பார்வைகளை யு டியூபில் பெற்ற பாடலாக 'பீஸ்ட்' படத்திலிருந்து இடம் பெற்ற 'அரபிக்குத்து' பாடல் புதிய சாதனையைப் படைத்தது. தற்போது 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ள இப்பாடல் 2.5 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. இப்பாடலில் விஜய்யின் நடனத்தை ரசிக்கும் ரசிகர்கள் அவருக்குப் போட்டியாக ஆடும் நாயகி பூஜா ஹெக்டேவின் நடனத்தையும் ரசிக்கிறார்கள். ஏற்கெனவே தெலுங்கு சினிமாவில் சிறப்பாக நடனமாடும் அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடித்த 'அலா வைகுந்தபுரம்லோ' படத்தில் … Read more

எப்போ வேணாலும் கலண்டு விழுந்துடும் போளையே…! ராய் லட்சுமி கொடுத்த ஹாட் போஸ்…!

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து இவர், ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருப்பினும் அம்மணியால் முன்னணி நாயகியாக வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் ஒருசில படங்களில் நடித்து தனது மவுசை … Read more

தெறிக்கவிடும் தேவா: கவனம் ஈர்க்கும் தங்கர் பச்சானின் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ பாடல்

இயக்குநர் தங்கர் பச்சானின் ’டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தின் டைட்டில் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ’களவாடிய பொழுதுகள்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் தங்கர் பச்சான் தன் மகன் விஜித் பச்சானை ஹீரோவாக அறிமுகமாக்கி ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். பிஎஸ்என் எண்டெர்டைன்மெண்ட்ஸ் தயாரிக்க தரண்குமார் இசையமைத்துள்ளார். பிரபு – தயாளன் ஒளிப்பதிவு செய்ய தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் டைட்டில் … Read more

தமிழில் வெளிவருகிறது அன்ச்சார்டட்

ஹாலிவுட்டில் தயாராகி உள்ள புதிய படம். அன்ச்சார்டட். இதில் டாம் ஹாலண்ட், மார்க் வெல்பர்க், சோபியா அலி, டிட்டி கேப்ரில்லே, அன்டோனியா பாண்டர்ஸ் நடித்துள்ளனர். சோம்பி லேண்ட், கேங்ஸ்டர் குவார்ட், வெனம், பிக் டிரிப் உள்பட பல படங்களை இயக்கிய ரூபென் பிளிச்சர் இயக்கி உள்ளார். மென்னான்ஸ் கோல்ட், இண்டியானா ஜோன்ஸ் மாதிரியான புதையலை தேடிச் செல்லும் பேண்டசி அட்வென்ஜர் கதை. கடந்த 7ம் தேதி ஸ்பெயினில் மட்டும் வெளியிடப்பட்ட இந்த படம் வருகிற 18ம் தேதி … Read more

தனுஷ் பண்றதெல்லாம் பார்த்த ஒரு முடிவோடுதான் இருக்காரு போலயே..!

நடிகர் தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். என்னதான் சொந்த வாழ்க்கையில் பல கஷ்டங்களை தற்சமயம் அவர் அனுபவித்து வந்தாலும், தன் திரைவாழ்க்கையில் கவனம் செலுத்த அவர் தவறவில்லை. வாத்தி, திருச்சிற்றம்பலம், நானே வருவேன் ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள மாறன் திரைப்படம் விரைவில் OTT யில் வெளியாகவுள்ளது. தொடர்ந்து தனுஷின் படங்கள் OTT யில் வெளியாவது அவரது ரசிகர்களை சற்று சலிப்படைய செய்துள்ளது என்றுதான் … Read more

”ஐயாம் எ ஹவுஸ் ஹஸ்பண்ட்”: கவனம் ஈர்க்கும் துல்கர் சல்மானின் ’ஹே சினாமிகா’ ட்ரெய்லர்

துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. துல்கர் சல்மான், காஜல் அகர்வால், அதிதி ராவ் நடிப்பில் பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹே சினாமிகா’ வரும் மார்ச் 3 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது. ரிலையன்ஸ் நிறுவனம் முதன்முறையாக தமிழில் தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மதன் கார்க்கி பாடல்களை எழுதியுள்ளார். ஏற்கனவே, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் பாடல்களும் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ’ஹாய் வெல்கம் இசை … Read more

நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் இணைந்த வீஜே பவித்ரா

விஜய் டிவியின் 'நாம் இருவர் நமக்க இருவர்' தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஆர்ஜே செந்தில், மோனிஷா, வெங்கட், காயத்ரி யுவராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுவரை 400 எபிசோடுகளை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த தொடர், தற்போது சூப்பரான திரைக்கதை வடிவமைப்பால் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், கதையை மேலும் சுவாரசியமாக்கும் பொருட்டு சில கதாபாத்திரங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் இரண்டாவது ஹீரோயினாக வீஜே பவித்ரா நடித்து … Read more

சிம்புவின் பலநாள் பிரச்சனை முடிவிற்கு வந்தது..!இனிமே சிலம்பாட்டம் தான் போலயே..!

நடிகர் சிம்பு மாநாடு படத்தின் வெற்றியினால் புது உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். பல ஆண்டுகளாக ஒரு மெகாஹிட் வெற்றிக்காக ஏங்கிக்கொண்டிருந்த சிம்புவிற்கு மாநாடு படம் சரியான நேரத்தில் கைகொடுத்துள்ளது. அதைத்தொடர்ந்து தற்போது பல படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மிகப்பெரிய பிரச்சனை ஒன்றில் சிக்கியிருந்தார். 2015 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு பெண்களைப்பற்றி ஆபாசமாக பாடியதாக கூறி இணையத்தில் பீப் சாங் ஒன்று வெளியானது. அப்பாடல் பெண்களை … Read more

”சுசீந்திரன் முதல் மோகன்லால் வரை!” – இந்த வீக் எண்ட் என்ன படம் பார்க்கலாம்?

இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ள ’வீரபாண்டியபுரம்’, மோகன்லாலின் ‘அராட்டு’ உள்ளிட்டப் படங்களும் நடிகர் விமலின் ‘விலங்கு’ வெப் சீரிஸும் இந்த வாரம் வெளியாகின்றன. மோகன்லாலின் ’அராட்டு’! ’மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்திற்குப் பிறகு தியேட்டரில் வெளியாகும் மோகன்லால் படம் ‘அராட்டு’. ‘த்ரிஷ்யம்’ சூப்பர் ஹிட்டுக்குப்பிறகு மோகன்லாலுக்கு மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னட மாநிலங்களிலும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். ‘லூசிஃபர்’, ‘த்ரிஷ்யம் 2’, சமீபத்தில் வெளியான ‘ப்ரோ டேடி’ படங்களே அதற்கு சாட்சி. இப்படங்களுக்காக மோகன்லாலைக் கொண்டாடித் தீர்த்தனர். ’அராட்டு’ … Read more

தெலுங்கு சீரியலில் என்ட்ரியாகும் வைஷூ சுந்தர்

டிக் டாக் வீடியோ மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வைஷூ சுந்தர். நடிகை ஆக வேண்டும் என்ற கனவோடு, மீடியாவுக்குள் நுழைந்த வைஷூ சுந்தரை சின்னத்திரை இன்முகத்துடன் வரவேற்றது. தமிழ் சின்னத்திரை உலகில் பலராலும் அறியப்படும் வைஷூ சுந்தர், தற்போது தெலுங்கு சீரியலில் நடிக்க உள்ளார். வைஷூ சுந்தர் தெலுங்கில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் 'குங்கமப்பூ' என்ற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதன் புரோமோவையும் ஷேர் செய்துள்ளார். இந்த தொடர் ஸ்டார் தெலுங்கு சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது. முன்னதாக … Read more