"என் மகளிடம் நான் இந்தப் படத்தைப் பார்க்கச் சொல்வேன்" – மிஷ்கின் நெகிழ்ச்சி!

கடைசி விவசாயி படம் பார்த்த பிறகு மிஷ்கின் வெளியிட்டுள்ள காணொலியில் ‘நூற்றாண்டில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படம் இது’ எனப் பாராட்டியுள்ளார். கடைசி விவசாயி படம் இயக்குனர் மணிகண்டனால் எடுக்கப்பட்டு பிப் 11 திரையரங்குகளில் வெளியானது. விஜய்சேதுபதி இந்தப் படத்தைத் தயாரித்ததோடு அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். “இன்டெர்வெல் பார்த்துட்டு விழுந்து விழுந்து அழுதுருக்கணும். இரண்டு கண்ணீர் துளியோடு அமர்ந்திருந்தேன். இந்த இரவு முழுதும் என் வாழ்நாளை காட்டிய படமாக இதை நான் பார்க்கிறேன். என் தாயும் தந்தையரும் … Read more

”‘புஷ்பா’ என் இசை பயணத்தில் மறக்க முடியாத படம்” – தேவிஸ்ரீ பிரசாத்

’புஷ்பா’ படத்தின் ’ஸ்ரீவள்ளி’ பாடல் வைரல் ஹிட் அடித்துள்ளதால் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. அல்லு அர்ஜுனுடன் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான ‘புஷ்பா’ உலகம் முழுக்க 300 கோடி ரூபாய்க்கு … Read more

இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்

பிரபல ஹிந்தி திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹிரி உடல் நலக்குறைவால் இன்று (பிப்.,16) மும்பையில் காலமானார். அவருக்கு வயது 69. உடல்நல பிரச்னையால் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பப்பி லஹிரி, கடந்த திங்கள் அன்று வீடு திரும்பினார். மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவர்கள் வீட்டில் வந்து பார்த்தனர். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் இன்றி அவரது உயிர் பிரிந்தது. பல்வேறு உடல் உபாதைகளால் பப்பி அவதிப்பட்டு வந்தார். 1973ம் … Read more

அடிச்சாம் பாருடா அப்பாய்ன்மெண்ட் ஆடரு…! பான் இந்திய ஹீரோவுக்கு ஜோடியாகும் மாளவிகா…!

நடிகை மாளவிகா மோகனுக்கு ஜாக்பாட் அடித்து இருக்கு என்றே சொல்லலாம். பான் இந்திய ஹீரோவுடன் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல இந்தி, படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். நடிகை மாளவிகா மோகன் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் … Read more

“பூவே உனக்காக படம் ஒரு வருஷம் ஓடும்னு நினைச்சேன். ஆனா…" – நினைவுகள் பகிரும் இயக்குநர் விக்ரமன்

விஜய்யின் திரைப்பயணத்தில் முக்கியமான படங்களில் ஒன்று `பூவே உனக்காக’. இந்தப் படத்துக்கு முன் அவர் ‘ரசிகன்’, ‘தேவா’, ‘ராஜாவின் பார்வையிலேயே’ சந்திரலேகா’ என ‘சி’ சென்டர் படங்களைக் கொடுத்து வந்தார். அவரை ஃபேமிலி ஆடியன்ஸிடம் கொண்டு சேர்த்ததில் இந்தப் படத்துக்கு முக்கிய பங்கிருக்கிறமு. அதைப் போல இயக்குநர் விக்ரமன் கரியரிலும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘புதிய மன்னர்கள்’, ‘நான் பேச நினைப்பதெல்லாம்’ இரண்டுமே பெரிய வெற்றிபெற்றவில்லை. ஆனால், இந்தப் படம் 270 … Read more

‘வலிமை’ சண்டைக் காட்சியில் மாஸ் காட்டும் அஜித் – படக்குழு வெளியிட்ட புதிய ப்ரோமோ

நடிகர் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய ப்ரோமோவை தயாரிப்பாளர் போனி கபூர், தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘நேர்கொண்ட பார்வை’க்குப் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில், நடிகர் அஜித் 2-வது முறையாக இணைந்துள்ள படம் ‘வலிமை’. அஜித் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருக்கும் இந்தப் படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருந்தநிலையில், கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது கொரேனா ஊரடங்கு தளர்த்தப்பட்டு அடுத்தடுத்து படங்கள் வெளியாகும் தேதிகள் அறிவிக்கப்பட்டு வரும்நிலையில், ‘வலிமை’ படமும் … Read more

விஜய்சேதுபதியின் 46வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு

பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் விஜய்சேதுபதி ஜோடியாக மாடல் அழகி அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்து வந்தது. இதன் இறுதி கட்ட படப்பிடிப்புகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து முடிந்திருக்கிறது. படத்தின் டைட்டில், பர்ஸ்லுக், பாடல்கள், டீசர் என அடுத்தடுத்து வெளிவர இருக்கிறது.

இன்று வெளியாகிறது ஹே சினாமிகா ட்ரெய்லர்…!உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…!

பிருந்தா மாஸ்டர் இயக்கத்தில், மதன் கார்க்கி எழுத்தில் உருவாகியுள்ள காதல் கலந்த நகைச்சுவை படம் ஹே சினாமிகா.இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான் , காஜல் அகர்வால், அதிதி ராவ் , ஷியாம் பிரசாத் போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ் மற்றும் குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்து உள்ளார். 2015 ஆம் ஆண்டில்ல் வெளியான ஓ காதல் கண்மணி படத்திலுள்ள ஒரு பாடலின் வரி தான் … Read more

'பாடும் வானம்பாடி' – பப்பி லஹரியை மறக்க முடியுமா?

ஹிந்தித் திரையுலகின் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவரான பப்பி லஹரி மும்பையில் தனது 69வது வயதில் காலமானார். அவரது மறைவு ஹிந்தித் திரையுலகினரை ஆழ்ந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த வாரம் தான் பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்து இந்தியத் திரையுலகத்தையே சோகத்தில் மூழ்க வைத்தார். அதற்குள் மற்றொரு சோகமாக பப்பி லஹரி மறைவு நிகழ்ந்துள்ளது. ஹிந்தியில் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்த பப்பி லஹரி பெங்காலி, தெலுங்கு, தமிழ், கன்னடம், குஜராத்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் … Read more

சிம்பு இப்படி செய்வாருன்னு எதிர்பாக்கல..! நடிகரின் கருத்தால் குழப்பத்தில் ரசிகர்கள்..!

திரைக்கு முன் நடிக்க தெரிந்த சிம்புவிற்கு திரைக்கு பின் நடிக்கத்தெரியாது என்பதே பல ரசிகர்களின் கருத்து. தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர் சிம்பு. அதன் காரணமாக பல பிரச்சனைகளிலும் சிக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது சிம்புவை பற்றி நடிகர் ஒருவர் கூறியிருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. தற்போது டிவியில் ஒளிபரப்பாகும் பல ரியாலிட்டி ஷோக்கள் TRP ரேட்டிங்கை குறிவைத்தே பல விளம்பரங்களை செய்துவருகின்றன. பொதுவாக டிவி நிகழ்ச்சியில் யாராவது உணர்ச்சிவசப்பட்டு அழுதாலோ, … Read more