வலிமை' படத்திற்கு பிரமோஷன் செய்யும் ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்துள்ள 'வலிமை' படம் அடுத்த வாரம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கான அனைத்து பிரமோஷன் பணிகளும் கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் இருபது வினாடி வீடியோ புரோமோ ஒன்று வெளியிடப்பட்டது. அதை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டிருந்தார். அவரது மகளான பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். 'வலிமை' படம் … Read more

ரெடியாகுங்க..!அதிரடி எண்ட்ரி கொடுக்கும் அஜித்…! வெளியான புது ‘வலிமை’ வீடியோ…!

வலிமை திரைப்படத்தின் சண்டை காட்சிகள் தொடர்பாக போனி கபூர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை பிப்ரவரி 24-ஆம் தேதிவெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. U/A சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கும் வலிமை திரைப்படம் 2: 58 மணி நிமிடங்கள் ஓடக்கூடிய படமாக வந்திருக்கிறது. வெளிநாடுகளில் படம் சென்சார் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வலிமை திரைப்படத்தின் சண்டைகள் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் … Read more

முதல்முறையாக சிகரெட் பிடித்த மேகா ஆகாஷ்

ஒரு பக்க கதை படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மேகா ஆகாஷ். இந்த படம் வெளிவர தாமதமாக கவுதம் மேனன் இயக்கத்தில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாக வந்தா ராஜாவா தான் வருவேன், ரஜினியின் பேட்ட படத்திலும் நடித்ததால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.. தற்போது விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர், விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். … Read more

பிறந்தநாள் அதுவுமா இப்படியா ஏமாத்துவீங்க: கடுப்பில் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்..!

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு மத்தியில் வெளியான படம் ‘டாக்டர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்தப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கொரோனா அச்சுறுத்தலை எல்லாம் மீறி இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இந்தப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டான் , அயலான் படங்கள் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். ‘இன்று நேற்று நாளை’ திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அயலான்’. இந்தப்படத்தில் அவருக்கு … Read more

பீப் பாடல் விவகாரம் : சிம்புவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

கடந்த 2015ம் ஆண்டில் நடிகர் சிம்பு பாடியதாக 'பீப் சாங்' ஒன்று இணையதளங்களில் ஒலித்தது. அந்தப் பாடல், பெண்களை அவதூறாகவும், ஆபாசமாகவும் சித்தரித்தது. இந்த பாடலை பாடிய சிம்பு, இசை அமைத்த அனிருத் ஆகியோருக்கு எதிராக பெண்கள் அமைப்புகள் போராட்டம் நடத்தின. பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தது. பெண்கள் அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு தொடர்ந்தார். அதேபோன்று சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், … Read more

தங்கர் பச்சானின் "தக்கு முக்கு திக்கு தாளம்" … தேவா குரலில் சிங்கிள் ட்ராக் வெளியீடு!

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் அவரது மகன் கதை விஜித் பச்சான் நாயகனாக நடிக்கும் “ தக்கு முக்கு திக்கு தாளம் ” படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களை கேட்டதும் வாங்கி கொண்டு பரபரப்பாக வெளியிட்டுள்ளது சோனி ஆடியோ நிறுவனம். உலகின் மிகப்பெரிய தியேட்டரில் வலிமை படத்தை பார்க்க போகும் வாரிசு நடிகை! தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின் அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம், … Read more

இந்தோனேஷிய மொழியில் ரீமேக் ஆகும் முதல் தமிழ் படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’

நடிகர் பார்த்திபனின் ’ஒத்த செருப்பு சைஸ் 7’ இந்தோனேஷியவின் ’பஹாசா’ மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. நடிகர் பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ விமர்சன ரீதியில் வரவேற்பையும் பாராட்டுக்களையும் குவித்தது. ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே ஒட்டுமொத்த திரைப்படத்திலும் தோன்றும் வகையிலான திரைக்கதையை அமைத்து நடித்தது மட்டுமல்லாமல், அந்தப் படத்தை பார்த்திபனே இயக்கியும் தயாரித்தும் இருந்தார். பார்த்திபனின் இந்த முயற்சிக்கு ’ஸ்பெஷல் ஜூரி’ தேசிய விருது, ரசூல் பூக்குட்டிக்கும் … Read more

கோப்ரா பட்ஜெட் அதிகமாக நான் காரணம் இல்லை: இயக்குனர் சொல்கிறார்

விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் கோப்ரா. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதனால் படத்தின் பட்ஜெட் பல மடங்கு உயர்ந்து விட்டது என்கிறார்கள். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது பற்றி சமூகவலைதளத்தில் குறிப்பிட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து அதில் எல்லோருக்கும் நன்றி தெரிவித்தவர் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு நன்றி தெரிவிக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பாளர் … Read more

வேற லெவல் சாதனை படைத்த அரபிக் குத்து: "ஹலமித்தி ஹபிபோ" மூடில் தளபதி ரசிகர்கள்..!

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ பீஸ்ட் ’ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய் . கடந்த காதலர் தினத்தன்று வெளியான இந்தப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. இந்நிலையில் ‘அரபிக்குத்து’ பாடல் மேலும் ஒரு புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார் . சன் பிக்சர்ஸ் … Read more

'ஆகஸ்டில் படப்பிடிப்பு: பொங்கலுக்கு ரிலீஸ்’: ’ரஜினி 169’ அப்டேட்

’ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ரஜினியின் 169 வது படமாக உருவாகும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானாலும் இன்னும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ‘ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தற்போது போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள் … Read more