மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா

மோகன்ராஜாவுடன் 3வது முறையாக இணைந்த நயன்தாரா 2/18/2022 5:18:05 PM மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன்’மற்றும் வேலைக்காரன் படங்களில் நடித்த நயன்தாரா தற்போது அவர் இயக்கும் தெலுங்கு படமான காட்பாதர் படத்திலும் நடித்துள்ளார். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ’லூசிபர்’ படத்தின் தெலுங்கு ரீமேக் இது. தற்போது இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. மோகன்லால் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடிக்கிறார். மஞ்சுவாரியர் நடித்த கேரக்டரில் நயன்தாரா நடிக்கிறார். சில மாதங்களாக அவர் இந்த படத்தின் படப்பிடிப்பில் … Read more

”நம்மள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது”- கவனம் ஈர்க்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர்

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ டீசர் வெளியாகியுள்ளது. ‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது, டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் … Read more

புதிய சமையல் நிகழ்ச்சி குக்கிங் கில்லாடிஸ்: 20ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது

விஜய் டி.வியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு அதே மாதிரியான ஜாலியான சமையல் நிகழ்ச்சியை மற்ற சேனல்களும் ஒளிபரப்ப தொடங்கி விட்டது. முன்னணி சேனல் ஒன்று பெரிய சினிமா நடிகரை வைத்து சர்வேதச கான்செப்டில் நடத்திய சமையல் நிகழ்ச்சி பெரிய தோல்வியை தழுவியது. விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை தொடங்கி விட்டது. இந்த நிலையில் தற்போது கலைஞர் தொலைக்காட்சி குக்கிங் கில்லாடிஸ் என்ற நிகழ்ச்சியை தொடங்கி உள்ளது. இந்த … Read more

ஒரே பாட்டில் ஓவர் நைட்டில் பேமஸ்: ஜோனிதா காந்திக்கு அடித்த ஜாக்பாட்..!

கடந்த காதலர் தினத்தன்று வெளியான விஜய்யின் ‘அரபிக்குத்து’ பாடல் குறித்த பேச்சுக்கள் தான் இணையம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. இந்த ஒரே பாட்டின் மூலம் இளசுகளின் மனசில் நியூ கிரேஸ் ஆக இடம்பிடித்துள்ளார் ஜோனிதா காந்தி . இந்நிலையில் இவர் குறித்த முக்கியமான தகவல் ஒன்று இணையம் முழுவதும் பரவி வருகிறது. கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘ பீஸ்ட் ‘ படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ … Read more

கோலிவுட் ஸ்பைடர்: பாலா படத்தில் சூர்யாவின் புது கெட்டப்; கைகோக்கும் வெங்கட்பிரபு – சிவகார்த்திகேயன்!

இளையராஜாவும் கங்கை அமரனும் சந்தித்தது வைரலாக, அடுத்து அவர்கள் குடும்பங்களிலும் சந்தோஷம் பெருகியிருக்கிறது. இந்தப் பெரிய சந்திப்பிற்குப் பிறகு இரண்டு குடும்பமும் சேர்ந்து ஒரு கூடலுக்கு ஏற்பாடு செய்யலாமா என்று கேட்க சகோதரர்கள் இருவருமே ஓகே சொல்லிவிட்டார்கள். இந்த மாதக் கடைசியில் எல்லோரும் ஒரே இடத்தில் குழுமி சந்தித்துப் பேசி, இத்தனை நாள் இடைவெளியைக் குறைக்கத் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். கிழக்கு கடற்கரைச் சாலையில்தான் அந்தச் சந்திப்பு நடக்க இருக்கிறது. அதனால் இந்த மாதத்தின் கடைசி மூன்று … Read more

கடைசி விவசாயியை கொண்டாட வேண்டும்: மிஷ்கின்

கடைசி விவசாயியை கொண்டாட வேண்டும்: மிஷ்கின் 2/18/2022 5:28:32 PM காக்கமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கிய மணிகண்டன். தற்போது கடைசி விவசாயி படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் சமீபத்தில் தியேட்டரில் வெளிவந்தது. படத்தை பற்றி பேசி வீடியோ வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் மிஷ்கின். அதில் கடைசி விவசாயி படத்தை நாம் கொண்டாட வேண்டும் என்று  என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: கடந்த 100 ஆண்டுகளில் எடுக்கப்பட்ட மிகச் சிறந்த படமென்று கடைசி … Read more

தீபாவளிக்கு ’அஜித் 61’ : 2023 பொங்கலுக்கு ‘அஜித் 62’ ரிலீஸ் – அடுத்தடுத்த அப்டேட்

கொரோனா சூழலால் ‘வலிமை’ படப்பிடிப்புத் தாமதமானதால் அஜித்தின் அடுத்தடுத்தப் படங்களை உடனுக்குடன் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ வெற்றிக்குப்பிறகு இரண்டரை ஆண்டுகள் கழித்து ‘வலிமை’ வெளியாகிறது. இரண்டரை ஆண்டு காத்திருப்பு என்பதால் அஜித் ரசிகர்கள் கொதித்தெழுந்த விஷயங்கள் தமிழகமே அறிந்தவை. அதனால், ’அஜித் 61’, ‘அஜித் 62’ படக்குழுவினர் வரும் தீபாவளிக்கும், 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கும் அடுத்தடுத்தப் படங்களை வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் … Read more

1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்த நாகார்ஜுனா

'கிரீன் இந்தியா சேலஞ்ச்' நிகழ்வு மூலம் தெலுங்குத் திரையுலகத்தின் சினிமா நடிகர்கள், நடிகைகள், பிரபலங்கள் மரக்கன்றுகளை நடுவதை கடந்த சில வருடங்களாகச் செய்து வருகின்றனர். தெலங்கானா மாநில ராஜ்ய சபா எம்.பி.யான சந்தோஷ்குமார் இதை முன்னின்று செய்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுக்க உறுதி அளித்திருந்தார் நாகார்ஜுனா. அதன்படி வனத்துறைக்குச் சொந்தமான செங்கிசெல்லா காட்டுப் பகுதியில் 1000 ஏக்கர் நிலத்தைத் தத்தெடுத்துள்ளார். அங்கு அவரது அப்பா மறைந்த நடிகர் நாகேஸ்வர ராவ் … Read more

அரபிக் குத்து பாடலுக்கு ஆட்டம் போட்ட பிரபல தொகுப்பாளினி… புகழ்ந்து தள்ளும் தளபதியன்ஸ்!

சன் மியூஸிக் சேனலில் தொகுப்பாளராக இருந்தவர் அஞ்சனா. பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த அஞ்சனா, 2016ஆம் ஆண்டு நடிகர் கயல் சந்திரனை காதலித்து திருமணம் செய்தார். இப்படி சோம்பல் முறிச்சா எப்படி… பூனம் பஜ்வாவின் போட்டோவை பார்த்து ஜொள்ளும் ஃபேன்ஸ்! இவர்களுக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு தொகுப்பாளர் பணிக்கு பிரேக் விட்ட அஞ்சனா பின்னர் 2019ஆம் ஆண்டு மீண்டும் புதுயுகம் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியை தொடங்கினார். பழம் பெரும் நடிகையுடன் லஞ்ச் … Read more

நானே வருவேன் பட அப்டேட்; செல்வராகவனும் நடிக்கிறாரா?

தன் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்’ படத்தின் ஷுட்டிங் ஊட்டியில் மும்முரமாக நடந்து வருகிறது. ‘மயக்கம் என்ன’ படத்திற்குப் பிறகு இப்போதுதான் அண்ணனின் இயக்கத்தில் நடிக்கிறார் தனுஷ். செல்வராகவனும் இப்போது ‘சாணிக் காயிதம்’, ‘பீஸ்ட்’ ஆகிய படங்களில் நடிகராகவும் களம் இறங்கிவிட்டார். செல்வராகவன் இயக்குநராக ஹிட் கொடுக்கும் கட்டாயத்தில் உள்ளார். இதற்கு முன்பு அவர் இயக்கிய ‘இரண்டாம் உலகம்’, ‘என்.ஜி.கே.’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என எதுவும் வசூலை குவிக்கவில்லை என்பதால் செல்வா- தனுஷ் … Read more