'ஆகஸ்டில் படப்பிடிப்பு: பொங்கலுக்கு ரிலீஸ்’: ’ரஜினி 169’ அப்டேட்

’ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளது.

‘அண்ணாத்த’ படத்திற்குப்பிறகு ரஜினியின் அடுத்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். ரஜினியின் 169 வது படமாக உருவாகும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியானாலும் இன்னும் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.

image

இந்த நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் ‘ரஜினி 169’ படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. தற்போது போஸ்ட் புரொடொக்‌ஷன் பணிகள் போய்க்கொண்டிருக்கிறது. வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலையொட்டி ‘ரஜினி 169’ படத்தினை திரைக்குக் கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ‘பீஸ்ட்’ வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.