கொளுத்தும் வெயில்: கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் 2வது வாரத்தில் பள்ளிகளை திறக்க கல்வித்துறை முடிவு?

சென்னை: தமிழ்நாட்டில், 4ம் வகுப்பு முதல் 9ம் வரையிலான வகுப்புகளுக்கு  இன்றுடன் தேர்வுகள் முடியும் நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். தற்போதைய கடும் வெயில், அனல்காற்று மற்றும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை போன்றவற்றை ஆய்வு செய்து, நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட உள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு, மீண்டும்  ஜூன் 2வது வாரத்தில்  அதாவது ஜூன் 12ந்தேதி பள்ளிகளை திறக்க முடிவு செய்துள்ளதாக கல்வித்துறை வட்டார தகவல்கள் … Read more

RR v MI: `எனக்கு அது பிடிக்காது' -தோல்வி பற்றி ஹர்திக் கூறுவதென்ன?

ஜெய்ப்பூரில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழாவது போட்டியை வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்று தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஐந்து முறை சாம்பியன் ஆன மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் ஐந்தாவது தோல்வியைத் தழுவியிருக்கிறது. MI vs … Read more

இராஜஸ்தானில் பிரதமர் மோடிபேசியது விஷமத்தனம்! செல்வபெருந்தகை விமர்சனம்

சென்னை: ராஜஸ்தானில் பிரதமர் மோடி  தேர்தல் பரப்புரையின்போது, சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்திற்கு எதிராக விஷமத்தனமான கருத்துகளைக் கூறியிருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை குற்றம் சாட்டி உள்ளார். மக்களவை தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு  கடந்த 19ம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களில்  முடிவடைந்த  நிலையில், வரும் 26ம் தேதி 13 மாநிலங்களில் இரண்டாம் கட்ட தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த சூழலில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி   தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். … Read more

ஒரு நொடி தான்..நடுவானில் சிதறிய ஹெலிகாப்டர்கள்! உறைந்து போன மக்கள்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்!

பெரக்: மலேசியாவில் கடற்படை தினத்தை ஒட்டி சாகச நிகழ்ச்சிக்காக ஒத்திகையில் ஈடுபட்டிருந்தபோது இரு கடற்படை ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் உண்டு மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவத்தின் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது மலேசியாவின் பெரக் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் மலேசியா கடற்படை தினமானது கொண்டாடப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ராணுவ Source Link

ஆந்திரா: மிளகாய் பொடி தூவி மணமகளை கடத்த முயன்ற பெற்றோர்; வரவேற்பு மேடையில் அதிர்ச்சி – நடந்தது என்ன?

மகளுக்குத் திருமணம் என்றாலே பொதுவாகப் பெற்றோர்கள் திருமணத்தில் உற்சாகமாக இருப்பார்கள். ஆனால் ஆந்திராவில் திருமண மேடையிலிருந்து மகளை மணமகள் குடும்பத்தார் கடத்த முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் கடையம் பகுதியைச் சேர்ந்த சினேகாவும், பட்டின வெங்கடானந்தும் கல்லூரியில் ஒன்றாகப் படிந்து வந்திருக்கின்றனர். மணமகளை இழுத்துச் செல்லும் உறவினர்கள் இதில் இருவருக்கும் காதல் ஏற்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து, மணமகன் வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். அதைத் தொடர்ந்து, இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்வு கடந்த … Read more

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்!

முதல்வர் ஸ்டாலின் #மேகேதாட் (மேகதாது அணை) குறித்து ஏன் திருவாய் திறக்காமல் உள்ளார்⁉️ இந்தியா கூட்டணி வேடிக்கை காட்சிகள்… அடி தடிகள் நடக்கிறது. நெட்டிசன் அரசியல் ஆர்வலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு ——————————————————- கர்நாடகாவில் மேகேதாட்அணையைக் கட்டியே தீருவோம் என்று கர்நாடக முதல்வர், துணை முதல்வர் சூளுரைக்கிறார்கள். கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் மோடி மேகேதாட்அணையைக் கட்டுவதற்கான அனுமதியை இன்னும் எங்களுக்கு தரவில்லை. அவர் சமீப காலமாக தமிழ்நாட்டு பக்கமே சென்று கொண்டிருக்கிறார். தமிழ்நாட்டிற்கு சாதகமாகவே இயங்குகிறார். … Read more

கேரளா: “பாஜக சதியில் கம்யூனிஸ்ட் கூட்டணி விழாமல் இருந்திருக்கலாம்..!" – நடிகர் பிரகாஷ் ராஜ்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் லூலு ரீடர்ஸ் ஃபெஸ்ட் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருவனந்தபுரம் சிட்டிங் எம்.பி-யும் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளருமான சசி தரூர், நடிகர் பிரகாஷ் ராஜ் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டு பேசினர். பின்னர் திருவனந்தபுரம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களை சந்தித்த பிரகாஷ் ராஜ் கூறுகையில், “பிரதமர் நரேந்திர மோடி ராஜாவாக இருக்கிறார். தன்னை எதிர்த்து யாராவது குரல் எழுப்பினால் ராஜாவுக்கு பிடிக்காது. அந்த ராஜாவிடம் கேள்விகளை எழுப்புகிறவர் சசி தரூர் ஆவார். நான் காங்கிரஸ் … Read more

சூரத் தொகுதியில் சூதாட்டம் : பாஜகவைக் குற்றம் சாட்டும் காங்கிரஸ்

டெல்லி பாஜக வேட்பாளர் சூரத் தொகுதியில் போட்டியின்றி வென்றது குறித்து காங்கிரஸ் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளது. நேற்று காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொதுச் செயலாளர் பொறுப்பு வகிக்கும் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், “மோடியின் அநியாயக் காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலதிபர்கள் எதிர்கொண்டுள்ள வருத்தம் மற்றும் கோபம் ஆகியவை பா.ஜ.க.வை அச்சுறுத்தி உள்ளது. அதனால், சூரத் மக்களவைத் தொகுதியில் அக்கட்சியினர் சூதாட்டத்தில் ஈடுபட முயன்றுள்ளனர் … Read more

80-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்.. நள்ளிரவில் குலுங்கிய தைவான்.. பீதியில் உறைந்த மக்கள்

தைபே: தைவானில் அடுத்தடுத்து 80 க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. அதிகபட்சமாக ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் பீதியில் உறைந்தனர். கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடு தைவான். புவியின் 2 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் தைவான் அமைந்துள்ளதால் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் Source Link