குறைந்த விலை ஹீரோ வீடா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக விபரம்

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன வீடா எலக்ட்ரிக் பிராண்டில் ஏற்கனவே விற்பனையில் உள்ள V1 இ-ஸ்கூட்டரை விட மிக குறைந்த விலையில் ஒரு மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் ஹீரோ நிறுவனம் இந்திய அரசின் PLI (Production Linked Incentive) திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், ரூ.1 லட்சம் விலைக்கு குறைவாக வெளியிட உள்ள இ-ஸ்கூட்டர் 80 முதல் 100 கிமீ ரேஞ்ச் வெளிப்படுத்தலாம். மேலும் … Read more

மூன்றாவது குழந்தையை பெற்ற பாஜக கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்; மாவட்ட ஆட்சியர் உத்தரவு – காரணம் என்ன?

குஜராத் மாநிலம் அமரேலி மாவட்டதின் இரண்டு பா.ஜ.க கவுன்சிலர்கள் மூன்றாவது குழந்தைக்கு பெற்றோர் ஆனதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்ககள். இந்த தகுதி நீக்கம் குறித்து பேசிய அமரேலி மாவட்ட ஆட்சியர் அஜய் தாகிய, “அமரேலியின் தாம்நகர் நகர்பலிகா கவுன்சிலர்களான கிமா காசோடியா, மேக்னா போகா இருவரும் கவுன்சிலர் தேர்தலுக்கான வேட்பு மனுவில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் தற்போது அவர்கள் மூன்றாவது குழந்தைக்கு பெற்றோராகியிருப்பதாக தகவல் கிடைத்தது. அஜய் தாகிய குஜராத் மாநிலத்தின் முனிசிபல் சட்டப் … Read more

தமிழ்நாட்டில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மேலும் 2 நீதிமன்றங்களுக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை  கும்பகோணம் நீதிமன்றம் மட்டுமே விசாரித்து வந்த நிலையில், தற்போது மேலும் இரண்டு  நீதிமன்றங்களுக்கு அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம்  உத்தரவிட்டு உள்ளது. ஆன்மிக மாநிலமான தமிழ்நாட்டில் உள்ள பழங்கால கோயில்களில் உள்ள பழமையான சிலைகள் திருடப்பட்டு வருவது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.   இதை தடுக்க தமிழ்நாடு அரசு சிலை தடுப்பு பிரிவை அமைத்து, திருட்டப்பட்ட சிலைகளை மீட்டு வருகிறது. இதிலும் பல முறைகேடுகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. தமிழகத்தில் இருந்து ஏறத்தாழ … Read more

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 'ராம் ராம்' என்று சொல்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் – பிரதமர் மோடி

சண்டிகார், அரியானா மாநிலம் மகேந்திரகாரில் பிரதமர் மோடி நேற்று இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “‘இந்தியா’ கூட்டணி, வகுப்புவாதம், சாதியவாதம், வாரிசு அரசியல் நிறைந்ததாக இருக்கிறது. அரியானாவில் ஒவ்வொருவரும் ‘ராம் ராம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்று சொல்பவர்களை கைது செய்து விடும். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை. ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரஸ் இளவரசரின் … Read more

யானை வழித்தடம் விவகாரத்தில் தமிழக அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? – ஓர் விரிவான அலசல்

யானை – மனித மோதல்களைத் தடுப்பதற்காகவும், ஆக்கிரமிப்புகளால் குறுகிவரும் யானை வழித்தடங்களை அதிகரிப்பதற்காகவும் தமிழ்நாடு அரசு சார்பில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு, தமிழகம் முழுக்க 42 யானை வழித்தடங்களை கண்டறிந்து அதற்கான திட்ட வரைவு அறிக்கையை சமர்ப்பித்திருக்கிறது. யானை வழித்தடங்களாக குறிப்பிடப்பட்டிருக்கும் இந்த இடங்களில் மக்களின் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், தேயிலைத் தோட்டங்கள், தனியார் விடுதிகள் எனப் பலவும் அமைந்திருப்பதல் இதற்கு பொதுமக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது. யானை மனித செயல்பாடுகளால் யானைகள் உயிரிழப்பதும், யானை … Read more

இன்று மாலை முதல் குற்றாலம் பிரதான அருவிகளில் குளிக்க அனுமதி

குற்றாலம் இன்று மாலை முதல் குற்றாலம் பிரதான அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. கடந்த 17 ஆம் தேதி குற்றால அருவிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெல்லையைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தார். எனவே இதைத் தொடர்ந்து பிரதான அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது. நேற்று அந்தத் தடை 7-வது நாளாக நீடித்தது. மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், மாவட்ட காவல் … Read more

நட்சத்திரப் பலன்கள்: மே 24 முதல் 30 வரை #VikatanPhotoCards

அசுவினி பரணி கிருத்திகை ரோகிணி மிருகசீரிடம் திருவாதிரை புனர்பூசம் பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம் அஸ்தம் சித்திரை சுவாதி விசாகம் அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம் திருவோணம் அவிட்டம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி Source link

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூர்கள் அமைக்க அனுமதி

சென்னை தேசிய மருத்துவ ஆணையம் தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவது குறித்து தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.  சென்ற வருடம் இது குறித்து மத்திய சுகாதார அமைச்சர் மனுசுக் மாண்டவியாவை தமிழக சுகாதார அமைச்சர் மா சுப்ரமணியன் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். அப்போது அவர், ”தமிழகத்தில் ம பெரம்பலூா், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், காஞ்சிபுரம் ஆகிய … Read more

தமிழகத்தின் 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கரூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் , சிவகங்கை … Read more

பேரன் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு தாத்தா எச் டி தேவே கவுடா எச்சரிக்கை

பெங்களூரு முன்னாள் பிரதமர் எச் டி தேவே கவுடா தனது பேரன் பிரிஜ்வல் ரேவண்ணாவை சட்டபூர்வ நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரன் பிரிஜ்வல் ரேவண்ணா மீது ச்மீபத்தில் பாலியல் புகார் எழுந்தது.  இதையொட்டி அவர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.  தற்போது ம ஜ த சார்பில் தேர்தலில் போட்டியிடும் பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த பாஜக தலைவர்களுக்கு இந்த புகார் மிகவும் சங்கட்த்தை … Read more