மிசோரத்தில் வசிக்கும் மெய்தி இன மக்களை.. விமானம் மூலமாக அழைத்து வர மணிப்பூர் திட்டம்? என்னாச்சு

India oi-Mani Singh S இம்பால்: மிசோரம் மாநிலத்தில் வசித்து வரும் மெய்தி இன மக்களை தங்கள் சொந்த மாநிலத்திற்கு விமானம் மூலமாக அழைத்து வர மணிப்பூர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. எதற்காக மணிப்பூர் அரசு இத்தகைய முடிவை எடுத்துள்ளது என்ற விவரத்தை பார்க்கலாம். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மணிப்பூர். இங்கு பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பிரேன்சிங் பதவி வகித்து வருகிறார். மலைகளும் வனப்பகுதிகளும் நிறைந்த மணிப்பூரில் பெரும்பான்மையினரான ‘மெய்தி’ இன மக்கள் உள்ளனர். இவர்கள் … Read more

Actors birthday: Fans holding banners get electrocuted | நடிகர் பிறந்த நாள்: பேனர் வைத்த ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி

விஜயவாடா: நடிகர் சூர்யா பிறந்த நாளுக்காக ஆந்திர மாநிலம் நாசராவ்பேட்டையில் ரசிகர்கள் பேனர் கட்டினர். அப்போது, இரும்பு கம்பி அருகில் இருந்த மின்சார வயரில் உரசியது. இதில், கல்லூரியில் படிக்கும் வெங்கடேஷ், சாய் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விஜயவாடா: நடிகர் சூர்யா பிறந்த நாளுக்காக ஆந்திர மாநிலம் நாசராவ்பேட்டையில் ரசிகர்கள் பேனர் கட்டினர். அப்போது, இரும்பு கம்பி அருகில் இருந்த மின்சார வயரில் உரசியது. இதில், கல்லூரியில் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் … Read more

2.5 டன் தக்காளி; சினிமா பாணியில் டெம்போவுடன் ஹை-ஜாக் செய்த `வேலூர்' தம்பதி! – பெங்களூரு `பகீர்'

இந்தியா முழுவதும் காய்கறிகளின் விலை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக தக்காளியின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹரியூரைச் சேர்ந்த விவசாயி மல்லேஷ், தனது நிலத்தில் விளைந்த 2 டன் தக்காளியை ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, கோலார் தக்காளி மார்க்கெட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது, சரக்கு வாகனத்தை திடீரென வழிமறித்து கார் ஒன்று நின்றது. தக்காளி அதிலிருந்து மூன்று பேர் இறங்கி, சரக்கு வாகனம் தங்களின் காரை … Read more

உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 69.17 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனா பாதிப்பால் 6.90 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், பாதிப்பிலிருந்து உலகில் 66.42 கோடி பேர் குணமடைந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்ஸ்டா ரீலில் முதல் மனைவியை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவன்.. பிளேடால் ‘அந்த’ உறுப்பை வெட்டிய 2வது மனைவி

India oi-Mani Singh S ஐதராபாத்: இன்ஸ்டாகிராமில் முதல் மனைவி போட்டிருந்த வீடியோவை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவனின் பிறப்பு உறுப்பை இரண்டாவது மனைவி பிளேடால் வெட்டிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. இன்ஸ்டா ரீல்சில் முதல் மனைவியின் வீடியோவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததால் கணவன் மீது கோபம் அடைந்த இரண்டாவது மனைவி, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி வீசிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. வினோதம் கலந்த இந்த அதிர்ச்சி சம்பவம் பற்றிய விவரம் … Read more

Freedom Fighters Wife Burnt Alive In Manipur | மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிருடன் எரிக்கப்பட்ட கொடூரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இம்பால்: மணிப்பூரில் பழங்குடியினத்தை சேர்ந்த பெண்கள், நிர்வாணப்படுத்தி இழுத்து வரப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், சுதந்திர போராட்ட வீரரின் மனைவி ஒருவர் வீட்டிற்குள் வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் முதல் மெய்டி சமூகத்தினருக்கும், குகூ சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த மே 4 ம் தேதி கூகி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்டி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள், … Read more

"இந்தியாவுக்காக வெல்ல விரும்பினால் இது போன்ற சம்பவங்கள்…"- ஹர்மன்ப்ரீத் சர்ச்சை குறித்து மந்தனா

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பங்களாதேஷ் நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து ICC Women’s Championship தொடர் சார்பாக மூன்று ஒருநாள் போட்டிகள் விளையாடப்பட்டன. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்திருந்தன. இதனால் 3வது ஒருநாள் போட்டி முக்கியமான இறுதிப் … Read more

ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் ஆவின் பொருட்கள் தட்டுபாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பாலின் தரம் சிறப்பாக உள்ளதால் சென்னையில் மட்டும் 50 ஆயிரம் லிட்டர் விற்பனை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்.

கொடூரத்தின் உச்சம்.! மீண்டும் அதே மத்திய பிரதேசத்தில்.. தலித் நபர் முகத்தில் மலத்தை பூசிய அவலம்

India oi-Mani Singh S போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புதான் பழங்குடியின நபர் மீது சிறு நீர் கழித்த அவலம் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது தலித் நபர் மீது மலத்தை பூசிய நெஞ்சை பதற வைக்கும் கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு சிக்கல்களை இன்றளவும் எதிர்கொண்டு வருகின்றனர். சாதிய ஏற்றத்தாழ்வுகள் இன்னும் கூட பல இடங்களில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. பல இடங்களில் தாழ்த்தப்பட்ட … Read more

Maharashtra Man Wins ₹ 5 Crore While Gambling Online | ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.5 கோடி வென்று ரூ.58 கோடி இழந்த தொழிலதிபர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாக்பூர்: மஹாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், தொழிலதிபர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 5 கோடி வென்று ரூ.58 கோடி இழந்த நிகழ்வு அரங்கேறி உள்ளது. அந்த தொழிலதிபரின் பெயரை வெளியிடவில்லை. இது தொடர்பாக போலீசார் கூறியதாவது: பாதிக்கப்பட்ட தொழிலதிபரை, ஆனந்த் என்ற சன்டு நவ்ரத்தன் ஜெயின் என்ற இடைத்தரகர் அணுகி, அதிக வருமானம் கிடைக்கும் எனக்கூறி, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட அழைத்துள்ளார். முதலில் தொழிலதிபர் ஆர்வம் காட்டவில்லை. இருப்பினும் விடாத … Read more