`தங்க நகைகளை அடகுவைத்து முதலீடு செய்தால் அதிக லாபம்'- 30 பேரிடம் 490 சவரன் நகை மோசடி செய்த கும்பல்!

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் அருகேயுள்ள  நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் மதன்குமார். அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவரின் மனைவி கிரேனா, சுந்தரலிங்கம் என்பவரின் மனைவி ஜெயலெட்சுமி, பாக்கியராஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து தங்களிடம் தங்க நகைகளை கொடுத்தால், அதை தனியார் நிதி நிறுவனத்தில் அடகுவைத்து அந்தப் பணத்தை பங்குச்சந்தை, நிதி நிறுவனம் போன்றவற்றில் முதலீடு செய்து லாபம் ஈட்டித் தருவதாக மதன்குமாரிடம் கூறியிருக்கின்றனர். ஜெயலெட்சுமி, கிரேனா, பாக்கியராஜ் அத்துடன், 10 சவரன் தங்க நகை கொடுத்தால் 10 … Read more

பெங்களூரு எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு

பெங்களூரு வரும் 17, 18 தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ள எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்க முடிவு செய்துள்ளார். வரும் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் பா.ஜ.க. ஆட்சியை பிடிக்க கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசித்து வருகின்றனர். அதையொட்டி பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனைக் கூட்டம் கடந்த ஜூன் 23- ஆம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் … Read more

திடீரென சூழ்ந்த வெள்ளம்.. உள்துறை அமைச்சர் வீட்டுக்கே இந்த நிலையா? ஹரியானாவை புரட்டிப்போட்ட மழை

India oi-Nantha Kumar R அம்பாலா: ஹரியானாவில் தற்போது கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் அங்குள்ள ஏராளமான மக்களின் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உள்துறை அமைச்சரின் வீடு வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் யமுனை … Read more

Case challenging repeal of Article 370: First hearing on Aug. 2 | 370வது பிரிவு ரத்தை எதிர்க்கும் வழக்கு: ஆக., 2 முதல் விசாரணை

புதுடில்லி, ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்து, மத்திய அரசு, 2019 ஆக., 5ல் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஜம்மு – காஷ்மீர் மாநிலம், ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இவை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூர்ய … Read more

எம்ஜி ZS EV எலக்ட்ரிக் காரின் ADAS சிறப்புகள்

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ZS EV எலக்ட்ரிக் காரில் Level 2 ADAS பாதுகாப்பு சார்ந்த அம்சங்களை கொண்டதாக விற்பனைக்கு ₹ 27.89 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 17 விதமான பிரத்தியேகமான இரண்டாம் கட்ட ADAS உடன் கூடிய புதிய, டாப் இசட்எஸ் எக்ஸ்குளூசிவ் புரோ வேரியண்ட் ஆனது எக்ஸ்குளூசிவ் வேரியண்ட்டை விட ரூ. 50,000 வரை கூடுதலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. MG ZS EV 50.3kWh பேட்டரி பேக்குடன் வந்துள்ளது. … Read more

“செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்தும், விசாரிக்காதது ஏன்?" – ED-யிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி

அமைச்சர் செந்தில் பாலாஜி அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தார். அப்போது வேலை வாங்கித்தருவது தொடர்பாக லஞ்சம் பெற்றதாகப் புகார் எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து, அமலாக்கத்துறை அவர்மீது நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு வழக்கு, மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு இரண்டாவது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா … Read more

ஊழல் புரியும் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தமிழக அரசுக்கு ஊழல் புரியும் அரசு அதிகாரிகள் சொத்துக்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. குற்றப்பிரிவு காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்டம் சிவந்தங்கலைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் ஸ்ரீபெரும்புதூரில் ரூ.11.50 கோடி மதிப்புள்ள 2 ஆயிரம் சதுர அடி நிலத்தை ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ரத்து செய்யக்கோரி ராஜேந்திரன் தரப்பில் கடந்த 2010-ம் ஆண்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. … Read more

ரூ.10 கூடுதலாக வசூல்! புகார் சொன்னவரை டாஸ்மாக்கில் கும்மியெடுத்த ஏஎஸ்ஐ இடமாற்றம்! பறந்த நோட்டீஸ்

Tamilnadu oi-Nantha Kumar R செங்கல்பட்டு: செங்கல்பட்டில் டாஸ்மாக்கில் ரூ.10 கூடுதலாக வசூலிப்பதாக புகார் சொன்ன நபரை உதவி காவல் ஆய்வாளர் சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில் உதவி காவல் ஆய்வாளர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் விளக்கம் கேட்டும் நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு ரூ.10 வசூலிப்பதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இதனை தடுக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி நடவடிக்கை … Read more

கள்ளக்குறிச்சி: பட்டா திருத்தம் செய்ய ரூ.10,000 லஞ்சம்; கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய நிலம் பட்டா திருத்தம் செய்வது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறதாம். அந்த வழக்கு தனக்குச் சாதகமாக வேண்டும் என்று நினைத்த மணி, பட்டா திருத்தம் மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியிருக்கிறார். பின்னர், அங்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் பாலு என்பவரிடம் தனது கோரிக்கையை தெரிவித்திருக்கிறார் மணி. கைதுசெய்யப்பட்ட பாலு கள்ளக்குறிச்சி: மருத்துவமனை இடத்தை ஆக்கிரமித்து கட்டடம்; திமுக ஊராட்சித் தலைவர் … Read more