இந்தியர்களின் வெளிநாட்டு பயண செலவு எவ்வளவு ?| How much do Indians spend abroad?

புதுடில்லி :இந்தியர்கள், வெளிநாட்டு பயணங்களுக்காக, ஒவ்வொரு மாதமும் 8,300 கோடி ரூபாயை செலவிடுகின்றனர். இது கொரோனாவிற்கு முந்தைய அளவைக் காட்டிலும் அதிகம், என ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இது குறித்து, அதில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது: கடந்த நிதியாண்டில், வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட இந்தியர்கள், 82 ஆயிரத்து, 500 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டுப் பணங்களை பெற்றுள்ளனர். இதுவே, கடந்த 2021 – 22 நிதியாண்டில் வெளிநாடுகளுக்கான பயணச் செலவு 34 ஆயிரத்து, 500 … Read more

என்னை இங்கே இறக்க விடாதீர்கள்… 7 மணி நேரம் காத்திருப்பு: கனேடிய தாயாரின் கலங்கடிக்கும் கடைசி வார்த்தை

கனடாவின் நோவா ஸ்கோடியாவில் மருத்துவமனை ஒன்றின் அவசரப் பிரிவுக்குள் அனுமதி கேட்டு 7 மணி நேரம் காத்திருக்க நேர்ந்த பெண் ஒருவர் இறந்த நிலையில், அந்த குடும்பம் தற்போது சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளது. மூன்று பிள்ளைகளுக்கு தாயார் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் கம்பர்லேண்ட் பிராந்திய சுகாதார மைய அவசர அறையிலேயே புத்தாண்டுக்கு முந்தைய நாள் 37 வயதான, மூன்று பிள்ளைகளுக்கு தாயாரான Allison Holthoff மரணமடைந்தார். @ctvnews அவரது கணவர் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில், தமது … Read more

படைகளை திரும்ப பெற இந்தியா – சீனா பேச்சு| India-China talks to withdraw troops

புதுடில்லி,கிழக்கு லடாக் எல்லையில், மீதமுள்ள பகுதிகளில் இருந்து படைகளை திரும்ப பெறுவது குறித்து, இந்திய – சீன துாதரக அதிகாரிகள் மட்டத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது. இந்திய – சீன எல்லை விவகாரத்தில் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான அமைப்பு, 2012ல் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு அவ்வப்போது கூடி, எல்லை விவகாரம் குறித்து பேச்சு நடத்தி வருகிறது. இதன் 26வது கூட்டம், சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று நடந்தது.இரு நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். அப்போது, கிழக்கு லடாக் … Read more

போருக்கான உண்மையான காரணம் இது தான்… புது விளக்கமளித்த ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைனில் ரஷ்யாவுக்கு சொந்தமான வரலாற்றுசிறப்புமிக்க நிலத்தை மீட்கவே தமது ராணுவம் போராடி வருவதாக ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆவேசமாக தெரிவித்துள்ளார். தேசபக்தி பேரணி உக்ரைன் தாக்குதலுக்கு ஆதரவாக மாஸ்கோவில் அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசபக்தி பேரணியில் திரண்டிருந்தா ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையிலேயே புடின் இவ்வாறு பேசியுள்ளார். @reuters நமது நிலம், நமது மக்களுக்கு உரிமையான நிலம், அதை மீட்கவே நமது ராணுவம் உக்ரைனில் போராடி வருகிறது என்றார். மாஸ்கோவில் உள்ள Luzhniki அரங்கத்தில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் … Read more

குடியுரிமை திருத்த சட்ட வழக்கு சுயேச்சை எம்.எல்.ஏ., கைதுக்கு தடை| Independent MLA in Citizenship Amendment Act case, stay on arrest

புதுடில்லி குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டம் மற்றும் நக்சலைட் அமைப்பு உடனான தொடர்பு குறித்த இரு வழக்குகளில், அசாமைச் சேர்ந்த சுயேச்சை எம்.எல்.ஏ., அகில் கோகோயை கைது செய்ய, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக 2019ல் போராட்டம் நடந்தது. அப்போது சுயேச்சை எம்.எல்.ஏ., அகில் கோகோய் என்பவர் மத்திய அரசுக்கு எதிராக கடுமையாக … Read more

23.02.23 | Daily Horoscope | Today Rasi Palan | February – 23 | வியாழக்கிழமை | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

லண்டன் O2 அரங்கத்தில் குவிந்த பொலிசாரால் பரபரப்பு: வெளியான அதிர்ச்சி சம்பவம்

லண்டன் O2 அரசங்கத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து பொலிசார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கத்திக்குத்து தாக்குதல் லண்டன் O2 அரங்கத்தில் Cineworld திரையங்கத்தினுள்ளேயே கத்திக்குத்து தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி மதியத்திற்கு மேல் 2.46 மணிக்கு லண்டன் ஆம்புலன்ஸ் சேவையால் பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. Image: MyLondon இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிசார், Cineworld திரையரங்கின் உள்ளே, இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவசர மருத்துவ உதவிக்குழுவினர் … Read more

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரத்தில் விழுப்புரம் ஆட்சியர், எஸ்.பி. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. ஆசிரமத்தில் ஆதரவற்றோர் துன்புறுத்தப்பட்ட விவகாரத்தில் அறிக்கை தர மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கை செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.