பரிசை திரும்பக்கேட்ட முன்னாள் காதலன்; கூலிப்படை மூலம் தாக்கிய மாணவி – புதிய காதலன் மீதும் வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பியை அடுத்த செங்கோடி மாத்தார் பகுதியை சேர்ந்தவர் பிரவின்(22). டிப்ளமோ முடித்து வெல்டராக பணியாற்றும் இவருக்கும் அணைக்கரை பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜெஸ்லின்(19) என்ற கல்லூரி மாணவிக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. ஜெஸ்லின் வீட்டில் வெல்டிங் வேலைக்குச் சென்ற அறிமுகத்தால் இவர்களுக்குள் காதல் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் நெருங்கி பழகிய நிலையில் ஜெஸ்லின் தனது வீட்டிற்கு வந்து பெண் கேட்கும்படி பிரவினிடம் கூறியுள்ளார். இதையடுத்து பிரவின் தனது பெற்றோர்களுடன் சென்று ஜெஸ்லின் வீட்டில் பெண் கேட்டுள்ளார். இரு … Read more

உலக கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு தயாரானது கத்தார்… வீடியோ…

22வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இந்த மாதம் 20 ம் தேதி துவங்குகிறது. கத்தார் தலைநகர் தோகா-வைச் சுற்றி எட்டு கால்பந்து மைதானங்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளது. புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்டேடியங்கள் நட்சத்திர விடுதிகளை மிஞ்சும் அளவுக்கு உள்ளது. 32 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டித் தொடர் மொத்தம் 29 நாட்கள் நடைபெறுகிறது. 8 குரூப்பில் தலா நான்கு அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில் மொத்தம் 48 லீக் போட்டிகள் நடைபெற … Read more

ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை

மதுரை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

“முக்கிய தலைவர்கள் கட்சியில் சேர இருக்கிறார்கள்" – மோடி, அமித் ஷா விசிட்-க்குப் பின் அண்ணாமலை

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75-வது ஆண்டு விழாவில் கலந்துகொள்ளச் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிகழ்ச்சி முடிந்ததும், பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்துக்குச் சென்றார். அங்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் கட்சி நிர்வாகிகளைச் சந்தித்த அமித் ஷா, அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அமித் ஷா பின்னர் அங்கிருந்து விமான நிலையத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். அதையடுத்து அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், `அமித் ஷா தலைமையில் முக்கியமான ஒருவர் … Read more

மாஞ்சா நூலில் சிக்கி மரத்தில் இருந்து உயிருக்குப் போராடிய காகம்

சென்னை: விருகம்பாக்கம் பகுதியில் மாஞ்சா நூலில் சிக்கி மரத்தில் இருந்து காகம் உயிருக்குப் போராடியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள், காகத்தை மீட்டு, முதலுதவி சிகிச்சை அளித்து பறக்கவிட்டனர்.

அதிமுக புள்ளிகள் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக 68 பேரிடம் மோசடி – ஒருவர் கைது

கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆத்மா சிவக்குமார் (53). தொழிலதிபர், சமூக ஆர்வலர் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வலம் வந்தார்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிசாமி. ஆத்மா சிவக்குமார் சிவக்குமாரின் உறவினராக ஊட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மூலமாக மாரிசாமிக்கு சிவக்குமார் பழக்கமாகியுள்ளார்.  வி.ஏ.ஓ பணி வாங்கித் தருவதாகவும், அதற்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் எனவும் சிவக்குமார் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பி மாரிசாமி ரூ.8.2 லட்சத்தை சிவக்குமாரின் சகோதரி சத்ய … Read more

என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி: நளினி பேட்டி

வேலூர்: என்னை மறக்காமல் இருந்த தமிழ் உள்ளங்களுக்கு நன்றி என நளினி தெரிவித்துள்ளார். மேலும் மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவித்தார்.

92 Once Again: அதே ஆஸ்திரேலியா; அதே மெல்பேர்ன்; காயம்பட்ட சிங்கமாகக் கர்ஜித்த இம்ரான் கான்!

நடப்பு உலகக்கோப்பைத் தொடர் ஆரம்பிக்கும் முன்பு க்ரீம் பிஸ்கட் தியரி ஒன்றை முன் வைத்தார் தோனி. 2011ல் ஒரு நிறுவனத்தின் க்ரீம் பிஸ்கட் இந்தியாவில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஆண்டு இந்தியா உலகக்கோப்பையை வென்றது. தற்போது மீண்டும் 2022-ல் அதே க்ரீம் பிஸ்கட் மற்றுமொரு வெர்ஷனை வெளியிட்டிருக்க, இந்த ஆண்டும் உலகக்கோப்பை நடைபெற இருந்ததால் இந்த இரண்டையும் சம்பந்தப்படுத்தி தோனி பேசிய வீடியோ அப்போது பெரிய வைரல் ஆனது. அதற்கு ஏற்றார் போல அயர்லாந்து இங்கிலாந்தை வீழ்த்தியது, … Read more

வாக்குச்சாவடி முகவர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல்

சென்னை: 234 சட்டமன்ற தொகுதி, திமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தி வருகிறார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.