150 பேர்கள் மரணமடைந்த ஹாலோவீன் கொண்டாட்டம்… உலகப் புகழ் K-Pop பாடகரும் பலியான சோகம்

தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியிலேயே முதன் முறையாக Lee Jihan அடையாளம் காணப்பட்டு, பின்னர் பிரபலமானார். ஹாலோவீன் கொண்டாட்டங்களில் Lee Jihan கலந்து கொண்டதாகவும், அதில் நெரிசலில் சிக்கி மரணமடைந்துள்ளதாக தென் கொரியாவின் சியோல் நகரில் நடந்த ஹாலோவீன் கொண்டாட்டத்தின் இடையே கூட்ட நெரிசலில் சிக்கி உலகப் புகழ் K-Pop குழுவின் பாடகர் ஒருவரும் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகப் புகழ் K-Pop குழுவின் பாடகரான 24 வயது Lee Jihan என்பவர் மரணடைந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. … Read more

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாக்கை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்கும் கனமழை என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி! – போலீஸார் சுதாரித்ததால் தடுத்து நிறுத்தம்

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல் அருகே உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்தவர் மீனா. இவர் தன் தங்கை, குழந்தைகளுடன் அப்பகுதியில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இவர் குடியிருக்கும் வீட்டிற்கு அருகே உள்ள சர்வே நிலத்தில் வசிக்கும் காளிராஜன், பாண்டியராஜ், சிவக்குமார், காளிராஜ், குருவையா மற்றும் சுப்பையா உள்ளிட்டோர் நடைபாதையை பயன்படுத்தவிடாமல் மீனா குடும்பத்தினருடன் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர், சிவகாசி தாசில்தார் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களில் புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை … Read more

மறுக்கப்படும் கல்வி உரிமை…பெண் மாணவிகளை அடித்து துரத்திய தாலிபான்கள்: பரபரப்பு வீடியோ

நெயில் பாலிஷ் அணிந்ததற்காக மாணவியை அறைந்த தாலிபான்கள். கல்வி எங்கள் உரிமை என கோஷமிட்ட ஆப்கான் பெண் மாணவிகள். ஆப்கானிஸ்தானில் படக்ஷான் (Badakhshan) பல்கலைக்கழக பெண் மாணவர்களை தாலிபான் நிர்வாகி ஒருவர் கைகளை சுற்றி அடிக்கும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் (Faizabad) உள்ள  படக்ஷான் பல்கலைக்கழக பெண் மாணவர்கள் ஆடைக் கட்டுப்பாட்டை மீறியதாக தெரிவித்து, பல்கலைக்கழக நுழைவு வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்ட மாணவர்கள் “கல்வி எங்கள் உரிமை’ என்று கோஷமிட்டனர், ஆனால் வாயிலில் இருந்த தலிபான் … Read more

வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை!

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

"இனி வாழ்வை அனுபவிக்கவேண்டும்" – பாலியல் வழக்கில் 38 ஆண்டுகளுக்குப் பின் நிரபராதியாக விடுதலையான நபர்

அமெரிக்காவில், 1983-ம் ஆண்டு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலைசெய்த வழக்கில் சிறைக்குச் சென்ற நபர் ஒருவர், 38 ஆண்டுக்கால சிறைவாசத்துக்குப் பின்னர் டி.என்.ஏ சோதனை மூலம் நிரபராதி என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த 69 வயதுடையவராக அறியப்படும் மாரிஸ் ஹேஸ்டிங்ஸ் (Maurice Hastings) எனும் இந்த நபர், 20 ஆண்டுகளுக்கு மேலாக டி.என்.ஏ சோதனை மேற்கொள்ளுமாறு தன்னுடைய வழக்கறிஞர்கள் மூலம் போராடிவந்திருக்கிறார். சிறை இந்த சிறைவாச காலத்தின்போது இடையில், மாரிஸ் ஹேஸ்டிங்ஸை குற்றவாளி … Read more

லௌவுல… லௌவுல… லௌவுல… நான் விழுந்துட்டேன்… அறிவித்த கெளதம் கார்த்திக்… நானும் தான் என்ற மஞ்சிமா மோகன்…

கடல் படத்தில் அறிமுகமான நடிகர் கெளதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனுடன் கடலை போட்டு வருவதாகவும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் தங்கள் காதலை இன்று இன்ஸ்டாகிராமில் வெளிப்படுத்தினர். அச்சம் என்பது மடமையடா என்ற படம் மூலம் தமிழில் அறிமுகமான மஞ்சிமா மோகன் அதற்கு முன் மலையாளத்தில் பல படங்களில் நடித்திருந்தார். மஞ்சிமா மோகன் மீதான காதல் குறித்து கெளதம் கார்த்திக் : சரியான … Read more

கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவள்ளூர்: கனமழை எச்சரிக்கை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வானிலை மைய எச்சரிக்கையை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் அறிவித்துள்ளார்.

திண்டிவனம்: குடும்பப் பிரச்னை; சகலையை கட்டையால் அடித்துக் கொன்ற கூலித் தொழிலாளி! – போலீஸ் விசாரணை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தீவனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயலட்சுமி – பொய்யாது தம்பதியினர். இவர்களுக்கு ரேவதி, சிவகாமி (இருவரின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது) என இரண்டு மகள்கள். இதில், மூத்த மகளான ரேவதி, கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் தளவாளப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அன்புராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். கொலை செய்யப்பட்ட இளைஞர் இதேபோல் இளைய மகளான சிவகாமியும், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் தீவனூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகன் … Read more

நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி-20 மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் விளையாடும் இந்திய வீரர்கள் விவரம்

ஆஸ்திரேலியா-வில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடர் முடிந்த உடன், இந்திய அணி வரும் நவம்பர் 18 ஆம் தேதி முதல் நியூசிலாந்து சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக ஜடேஜா, பும்ரா ஆகியோர் களமிறங்கவில்லை. இதே … Read more