திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் யாகசாலையுடன் தொடங்கியது கந்தசஷ்டி விழா…

தூத்துக்குடி: அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது. இதன் காரணமாக தினசரி சிறப்பு அபிசேகம், வெள்ளிப்பல்லக்கில் சுவாமி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும்  முருகன் கோவில்களில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த காலக்கட்டத்தில்  முருகப்பெருமானை நினைத்து கந்த சஷ்டி விரதம் இருந்து வழிபாட்டால் எண்ணற்ற நன்மைகள் உண்டாகும். திருமணமான பெண்களுக்கு குழந்தை பாக்கியம் … Read more

திருவாரூர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 2 பழங்கால சிலைகளை மீட்க அமெரிக்காவுக்கு ஆவணங்கள் அனுப்பி வைப்பு..!!

திருவாரூர்: 50 ஆண்டுகளுக்கு முன் திருவாரூர் கோவிலில் இருந்து திருடப்பட்ட 2 பழங்கால சிலைகளை மீட்க ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பழங்கால சிலைகளை மீட்பதற்கான சட்ட ஆவணங்களை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர். ஆலத்தூர் விஸ்வநாத சுவாமி கோவிலுக்கு சொந்தமான சோமஸ்கந்தர், நடனசம்மந்தர் சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சரக்கு ரயில் தடம் புரண்டு பயணியர் ரயில்கள் ரத்து| Dinamalar

நாக்பூர் : மஹாராஷ்டிராவில் நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டதால், பல பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்று பாதையில் அனுப்பி வைக்கப்பட்டன. மஹாராஷ்டிராவின் அமராவதி மாவட்டத்தில், மல்கேட் – திமட்லா ரயில் நிலையங்களுக்கு இடையே நேற்று முன் தினம் இரவு 11:20 மணிக்கு, நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலின் 20 பெட்டிகள் தடம் புரண்டன. இதையடுத்து, அந்த வழியில் செல்ல வேண்டிய பல பயணியர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. … Read more

`உஷார் மக்களே’… செல்போன் பழுது நீக்க கொடுத்ததில் ரூ.2.2 லட்சத்தை இழந்த நபர்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் செல்போனை பழுது நீக்க கொடுத்தவர் வங்கி கணக்கிலிருந்து, ரூ.2.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கதம் (40) என்ற நபர் தெரிவித்ததாவது, “சமீபத்தில் செல்போன் ஸ்பீக்கர் வேலை செய்யவில்லை என செல்போன் சரி செய்ய செல்போன் கடையில் கொடுத்தேன். அப்போது, கடைகாரர் செல்போனை சிம் கார்டுடன் கொடுத்துச் செல்லும்படி கேட்டார். நானும் சிம் கார்டுடன் செல்போனை கொடுத்துச் சென்றிறேன். மறுநாள் செல்போனை திரும்பப் பெற சென்ற போது கடை … Read more

25ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே தினசரி பயணிகள் ரயில் இன்றுமுதல் மீண்டும் இயக்கம்…

சென்னை: 25ஆண்டுகளுக்கு பிறகு செங்கோட்டை – மயிலாடுதுறை இடையே முன்பதிவில்லாத தினசரி பயணிகள் ரயில் இன்றுமுதல் மீண்டும் இயக்கப்படுகிறது. அதுபோல தீபாவளி முடிந்து பொதுமக்கள் மீண்டும் தங்களது நகர வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கி வருகிறது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறைக்கு இன்றுமுதல் தினசரி முன்பதிவில்லா பயணிகள் ரயில் மீண்டும் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மதுரை, திருச்சி வழியாக மயிலாடுதுறை சென்றடைகிறது. இந்த ரயில் ஏற்கனவே இயக்கப்பட்டு வந்த … Read more

தீபாவளி கொண்டாட்டம் எதிரொலி: வடசென்னை பகுதிகளின் சாலைகளில் தேங்கிய பட்டாசுக் கழிவுகள் அகற்றும் தூய்மை பணியாளர்கள்..!!

சென்னை: வடசென்னை பகுதிகளின் சாலைகளில் தேங்கிய பட்டாசுக் கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பட்டாசு கழிவுகளை மட்டும் தனியாக கும்மிடிப்பூண்டி குப்பை கிடங்குக்கு அனுப்புகின்றனர். நாடு முழுவதும் நேற்று பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடப்பட்டது.

பெண் அதிகாரிக்கு தொல்லை சி.ஆர்.பி.எப்., அதிகாரி கைது| Dinamalar

ஜம்மு : ஜம்மு – காஷ்மீரில் சக பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சி.ஆர்.பி.எப்., அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். ஜம்மு – காஷ்மீர் உதம்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப்., முகாமில் கமாண்டன்ட் ஆக பணியாற்றி வருபவர் சுரீந்தர் சிங் ராணா. இவர், இங்கு பணியாற்றி வரும் சக பெண் அதிகாரிக்கு பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்து வந்ததாக, அந்த பெண் அதிகாரி, போலீசில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சுரீந்தர் சிங் ராணா மீது, பாலியல் … Read more

“21 வருடங்களுக்கு முன் உங்களுடன் எடுத்தப் படம் இது…" – பிரதமர் மோடியை நெகிழ வைத்த ராணுவ வீரர்

இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையை, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 9-வது ஆண்டாக ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார். கடந்த 2014-ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஒவ்வொரு ராணுவ தளங்களுக்கும் சென்று ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி வருகிறார். அதன் அடிப்படையில், இந்த தீபாவளிக்கு கார்கில் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது மேஜர் அமித் என்ற ராணுவ வீரர் பிரதமருக்கு வழங்கிய நினைவு பரிசு பிரதமர் மோடியை நெகிழவைத்தது. இது தொடர்பாக வெளியான தகவலில், “2001-ம் ஆண்டு மோடி … Read more

சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. நேற்று மாலை சென்னையில் காற்றில் நுண்துகள்களின் அளவு 109 என இருந்த நிலையில், இன்று மாலை 192 என்ற அளவாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் தீபாவளி பண்டிகையையொட்டி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் பட்டாசுகள் வெடித்ததால் புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால், சென்னையில் காற்றின் தரம் பாதுகாப்பான நிலையில் இருந்து,மோசமான நிலைக்கு மாறியுள்ளதாகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது. மேலும், மணலி, ராயபுரம், … Read more

நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி இரட்டை குழந்தை விவகாரம் ஓரிரு நாளில் அறிக்கை வெளியிடப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாடகைதாய் விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இன்று சுகாதாரத்துறை விசாரணை நடத்தவுள்ளது.