32 ஆண்டுகள் கூண்டில் அடைப்பு… உலகின் மிகவும் சோகமான கொரில்லாவின் விடுதலை எப்போது?

கூண்டுகளே திறக்க நினைத்தாலும், கூண்டுகளைத் திறக்க மனிதர்களுக்கு மனம் வருவதில்லை. வானம் காணாத, சுதந்திரத்தை அனுபவிக்காத அந்த ஜீவன் கூண்டுக்குள் எவ்வளவு அல்லல்படும் என்பதைச் சிந்திக்க மறந்துவிடுகின்றனர். அப்படி ஒரு பரிதாபகரமான நிலையில்தான், 32 ஆண்டுகளாக அடைபட்ட கொரில்லா ஒன்று உள்ளது. இதன் விடுதலைக்காக விலங்குரிமை ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். 1990-ம் ஆண்டு, தாய்லாந்தின் தலைநகரான பேங்காக்கில், Pata என்ற உயரமான ஷாப்பிங் மாலில் கட்டப்பட்ட மிருகக்காட்சி சாலையில், ஒரு வயதே ஆன ஆண் கொரில்லா கூண்டில் … Read more

ரஜினிகாந்த் சரவெடி… ஜெயிலர் படத்தை அடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம்…

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் ஜெய்லர். சமீபத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் கடலூரில் நடைபெற்றது. அப்போது ரஜினியைக் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. இதனை அடுத்து போயஸ் கார்டனில் சரவெடி வெடித்து தீபாவளி கொண்டாடினார் ரஜினிகாந்த். இந்த நிலையில் ஜெய்லர் படத்திற்குப் பிறகு லைகா நிறுவன தயாரிப்பில் இரண்டு படங்களில் நடிக்க ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது. ரஜினிகாந்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசிய … Read more

வடபழனி ஆண்டவர் கோயிலில் 108 மாணவ, மாணவியர் பங்கேற்ற கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சி

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலையில் இன்று (28.10.2022) மாலை வடபழனி, ஆண்டவர் திருக்கோயிலில் தமிழ்நாடு இசை மற்றும் கவின்கலை கல்லூரியைச் சேர்ந்த 108 மாணவ, மாணவியர் பங்கேற்ற கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் த. வேலு, ஜெ. கருணாநிதி, தக்கார் ஆதிமூலம், இணை ஆணையர் ந.தனபால்,  துணை ஆணையர்/செயல் அலுவலர் முல்லை, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

`ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லட்சுமி; இது 130 கோடி பேரின் விருப்பம்!'- மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில், “புதிய ரூபாய் நோட்டுகளில் ஒருபுறம் மகாத்மா காந்தியின் படத்தை வைத்துவிட்டு, மறுபுறம் லட்சுமி தேவி, விநாயகரின் படங்களைச் சேர்க்க வேண்டும். புதிய ரூபாய் நோட்டுகளில் இரு தெய்வங்களின் உருவங்கள் இருப்பது நாடு செழிக்க உதவும்” எனக் கூறியிருந்தார். கெஜ்ரிவாலின் இத்தகைய கருத்து இந்தியா முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. மேலும் இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் … Read more

மிகப்பெரிய சதி: தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது! கோவை கல்லூரி விழாவில் ஆளுநர் பேச்சு…

கோயம்புத்தூர்: கோவை கார் வெடிப்பு சம்பவம் மிகப்பெரிய சதி,  தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும், அதிகமான சித்தர்களையும் யோகிகளையும் உருவாக்கியதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது என்று  கோவை கல்லூரி விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார். கோவை  பாலக்காடு சாலையில் உள்ள ஜெ.எஸ்.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள் கட்டட திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து … Read more

கோவையில் இந்து அமைப்புகளுடன் ஆட்சியர் ஆலோசனை

கோவை: கோவையில் இந்து அமைப்புகளுடன் ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆலோசனை மேற்கொண்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

“கோவை கார் வெடிப்பு சம்பவத்தை தமிழ்நாடு காவல்துறை சிறப்பாக கையாண்டது; ஆனால்…" – ஆளுநர் ரவி

கோவை நவக்கரை பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தீவிரவாதத்தை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டக் கூடாது.  எந்தவித சமரசமும் இன்றி தீவிரவாதம் ஒடுக்கப்பட வேண்டும். நமது நாட்டின் முன்னேற்றத்தை தடுக்க நினைக்கும் மற்ற நாடுகள் நம் மீது பல்வேறு வகையில் தாக்குதல்களை நடத்துகின்றன. இதில் முக்கியமானது தீவிரவாதத் தாக்குதல். இதற்கு நாம் சரியான பதிலடிகளை கொடுத்து வருகிறோம். ஆளுநர் ரவி கோவை கார் வெடிப்பு … Read more

உக்ரைன் மீது பாய்ந்த 4500 ஏவுகணைகள்: ரஷ்ய கீதம் ஒலிப்பது இதைவிட ஆபத்தானது

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை ரஷ்யா சுமார் 4500 ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது. நமது நிலத்தில் எதிர்களின் தேசிய கிதம் ஒலிப்பது, நமது வானில் ஏவுகணைகள் பறப்பதை விட ஆபத்தானது. உக்ரைன் மீதான போர் தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை 4500 ஏவுகணைகளை ரஷ்யா உக்ரைன் மீது ஏவி இருப்பதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி 24ம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல், எட்டு மாதங்களை … Read more

முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கவில்லை! உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை பல்டி…

சென்னை: முழு அடைப்புக்கு அழைப்பு பாஜக மாநில தலைமை அழைப்பு விடுக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் 31ந்தேதி பாஜக பந்த் நடத்தினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை நவ.1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. கோவை கார் குண்டுவெடிப்பை கண்டித்து, அக்டோபர் 31ந்தேதி கோவையில் முழு அடைப்பு நடத்தப்படும் என அம்மாவட்ட பாஜக தலைமை 26ந்தேதி அறிவித்தது.  கோவை பாஜக அலுவலகத்தில் … Read more

திருச்செந்தூர் முருகன் கோயிலில் திமுக எம்.பி. கனிமொழி ஆய்வு

திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோயிலில், சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக இடத்தை திமுக எம்.பி. கனிமொழி பார்வையிட்டார். கோயில் நிர்வாகம் சார்பில் அளிக்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.