லைசென்ஸ் ராஜ் திட்டத்தை எதிர்த்த ராகுல் பஜாஜ்.. யாருக்கும் அஞ்சாத தொழிலதிபர்..!

இந்திய சுதந்திரம் அடைந்த பின்பு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் பல தனியார் நிறுவனங்கள் களமிறங்கிய நிலையில் மிகவும் சில நிறுவனங்களால் மட்டுமே இதுநாள் வரையில் பயணிக்க முடிந்தது. இந்த 75 வருட சுதந்திர இந்திய வரலாற்றில் லைசென்ஸ் ராஜ், தாராளமயமாக்கல் எனப் பல மாற்றங்கள் வந்த போதும் அசராமல் தொடர்ந்தும் ஆதிக்கம் செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று பஜாஜ் ஆட்டோ. பஜாஜ் ஆட்டோ என்னும் பிரம்மாண்ட வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய ராகுல் பஜாஜ் இன்று தனது 83 … Read more

`சேர்லாம் இருக்கு; ஆனா, உக்கார்ந்தா எங்க வேலை இருக்காது!' – நாற்காலி சட்டமும் நடைமுறையும்

அனைத்துப் பணியிடங்களிலும் ஊழியர்கள் உட்காருவதற்கு கட்டாயம் நாற்காலி போட வேண்டும் என்ற சட்டத் திருத்த மசோதா 2021 செப்டம்பர் 6-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, செப்டம்பர் 13-ம் தேதி சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்தியாவிலேயே இரண்டாவது மாநிலமாக தமிழ்நாட்டில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் அமலில் உள்ளதா, உண்மையிலேயே ஊழியர்களுக்குப் பணியிடங்களில் நாற்காலி போடப்பட்டுள்ளதா என்பதை அறிய களத்தில் இறங்கினோம். Representational Image பாடியில் உள்ள பிரபல துணிக்கடையில் விற்பனையாளராக வேலை செய்யும் ஆண் … Read more

அதிகரிக்கும் பதற்றம்… உக்ரைனிலிருந்து துருப்புகளை வெளியேற்றும் அமெரிக்கா

  ரஷ்ய படையெடுப்பின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால், உக்ரைனில் இருக்கும் 150 அமெரிக்க துருப்புகள் நாட்டை விட்டு வெளியேறுவதாக  அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உக்ரேனியப் படைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக புளோரிடா தேசிய காவல்படையில் இருந்து உக்ரைனுக்கு அனுப்பப்பட்ட சுமார் 150 அமெரிக்க துருப்புக்களே உக்ரைனை விட்டு வெளியேறுவதாக அதிகாரிகள் கூறினர். உக்ரைனில் உள்ள சில அமெரிக்க தூதரக ஊழியர்களை வெளியேறுமாறு வெளியுறவுத்துறை உத்தரவிட்டதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். … Read more

வேட்பாளர் மரணம்: மயிலாடுதுறையின் 19-வது வார்டில் தேர்தல் ஒத்திவைப்பு..!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையின் 19-வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்த நிலையில், அந்த வார்டுக்கான தேர்தலை, தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் 19.02.2022 அன்று ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  மயிலாடுதுறை நகராட்சி வார்டு 19-ல் போட்டியிட்ட அன்னதாச்சி என்ற வேட்பாளர் மாரடைப்பால் … Read more

தமிழகத்தில் 3 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை:     தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நேற்று 3,086 ஆக பதிவாகி இருந்தது.   இந்நிலையில், தமிழகத்தில் இன்றைய தொற்று பாதிப்பு 2,812 ஆக குறைந்துள்ளது. இதுதொடர்பான புள்ளிவிவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:  தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,812 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 33 ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது. … Read more

ஹோண்டா, யமஹா, சுஸுகி-ஐ ஓடஓட விரட்டிய ராகுல் பஜாஜ்..!

இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன நிறுவனத்தை உருவாக்கிய ராகுல் பஜாஜ் 83 வயதான நிலையில், அவருக்கு நிமோனியா மற்றும் இதயப் கோளாறு வாயிலாக ஏற்பட்ட உடல்நல குறைவால் சனிக்கிழமை (இன்று) பிற்பகல் 2.30 மணியளவில் மறைந்தார். கல்லூரி படிப்பை முடித்த கையோடு நிர்வாகப் பொறுப்பில் உட்கார்ந்த பல சவால்களைச் சமாளித்த பஜாஜ் என்னும் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியுள்ளார். ராகுல் பஜாஜ் ராகுல் பஜாஜ் அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்ற கையோடு, … Read more

சென்னை: மாமியாரிடம் தங்கச் செயினை திருடிய மருமகள்! – ஆண் நண்பருடன் சிக்கியது எப்படி?!

சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் தேவி நகர் சிவகாமி தெருவைச் சேர்ந்தவர் லலிதா. வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே இருந்துவரும் லலிதா, கடந்த 10-ம் தேதி வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது இளைஞர் ஒருவர் வீட்டுக்கு வந்துள்ளார். அவர், லலிதா அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். சிசிடிவி கேமரா அதனால் அதிர்ச்சியடைந்த லலிதா வீட்டில் உள்ளவர்களிடம் விவரத்தை தெரிவித்தார். இதையடுத்து செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக ஆவடி போலீஸ் நிலையத்தில் … Read more

நாளை பிறக்கவுள்ள புது மாதம்! யாருக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகுது? நாளைய ராசிப்பலன்

 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அதிகாலை 3.12 மணிக்கு சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்கிறார். இந்நாளில் தான் தமிழ் மாதமான மாசி பிறக்கிறது. இப்படி சூரியன் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு செல்வதால், ஒவ்வொரு ராசிக்காரரும் எம்மாதியான பலன்களைப் பெறப் போகிறார்கள். நாளை நடக்கவுள்ள இந்த பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு கோடிஸ்வரயோகத்தை பெறப்போகின்றது என்று பார்ப்போம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp … Read more

12/02/2022: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு, 17 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 2,812 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  சிகிச்சை பலனின்றி  17 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக பட்சமாக சென்னையில் 546பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று இரவு 7.45 மணி அளவில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று 1,05,822 மாதிரிகள் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதுவரை 6,31,92,873 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக மேலும், 2,812 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு  34,33,966 … Read more

முன்னாள் எம்.எல்.ஏ. கு.க.செல்வம் மீண்டும் தி.மு.க.வில் இணைந்தார்

சென்னை: சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கு.க.செல்வம். தி.மு.க.வை சேர்ந்த இவர் 2020, ஆகஸ்டு 4-ம் தேதி டெல்லியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்துப் பேசினார். தகவலறிந்த தி.மு.க. அவரை கட்சியில் இருந்து நீக்கியது. இருந்தாலும் சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டு வந்தார். இதற்கிடையே, கடந்த ஆண்டு மார்ச் மாதம் கு.க.செல்வம் தியாகராயநகரில் உள்ள மாநில பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயம் வந்து பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டு செயல்பட்டு … Read more