நடுக்காட்டில் தொலைந்த உரிமையாளர்: தக்க சமயத்தில் வழிகாட்டி உயிரை காப்பாற்றிய வளர்ப்பு நாய்

செல்லப்பிராணிகளான நாய்களின் விசுவாசத்துக்கு அளவே இருக்காது. தன்னை வளர்த்த உரிமையாளரின் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களை காப்பாற்றும் நாய்களின் நன்றியுணர்வுக்கு மற்றொரு சாட்சியாக அமைந்திருக்கிறது கர்நாடகாவில் நடந்த சம்பவம். அடர்ந்த காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்ற தனது உரிமையாளர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில், டாமி என்ற அவரது நாய் அவரை கண்டுபிடித்திருக்கிறது. கர்நாடகாவின் ஷிவமோகா மாவட்டத்தின் ஹொசநகர் தாலுகாவில் உள்ள சுதுரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேகரப்பா என்ற 55 வயது முதியவர். இவர் அதேப் பகுதியில் … Read more

பழங்குடியினருக்கு அதிகாரமளிப்பது பெருமை: அர்ஜுன் முண்டா

ஒவ்வொரு ஆண்டும் பகவான் பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15-ம் தேதி பழங்குடியினர் கவுரவ தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அறிவித்துள்ளது. இது, இந்தியாவின் புகழ்பெற்ற பழங்குடியின மரபு, பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அடையாளப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த முடிவு ஒட்டுமொத்த தேசத்துக்கும் ஒரு வரலாற்றுத் தருணமாகும். “தேச விடுதலையின் அமிர்தப் பெருவிழா காலகட்டத்தில், இந்தியாவின் பழங்குடியின மரபுகள் மற்றும் அவர்களின் வீர தீர செயல்களுக்கு … Read more

கொடூரம்… 7 அடி குழியில் கணவனை புதைத்த மனைவி – 4 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிப்பு

டெல்லியில் 26 வயது ஷ்ரத்தா என்ற பெண்ணை, அவரின் காதலன் அப்தாப் அமீன் என்பவர் கொடூரமாக கொன்ற சம்பவம் நேற்று நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த பெண்ணை கொலை செய்து, 35 துண்டுகளாக வெட்டி, அதை 18 நாள்கள் தினமும் ஒவ்வொரு துண்டையும் கொண்டு நகரின் வெவ்வேறு பகுதிகளில் புதைத்துவைத்துள்ளார். வீசி வந்துள்ளார், அமீன். இதை வெளிநாட்டு தொடர்களை பார்த்து, தெரிந்துகொண்டு அதேபோன்று செய்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில், இந்த சம்பவம் ஓய்வதற்குள், அடுத்து உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் நகரில் … Read more

அடுத்த 15 ஆண்டில் இந்தியாவின் தேவை நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.68.23 லட்சம் கோடி: உலக வங்கி மதிப்பீடு

புதுடெல்லி: அடுத்த 15 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.68.23 லட்சம் கோடி தேவைப்படும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களில் முன்னணி நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் போன்ற பல காரணங்களால் பரப்பளவு விரிவடைந்து வருகிறது. இதனால், மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.68.23 லட்சம் கோடி … Read more

ஒரே ஆண்டில் அண்ணன், தாய், தந்தையை இழந்த நடிகர் மகேஷ் பாபு: சோகத்தில் தெலுங்கு திரையுலகம்!

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 80. தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா, உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மகேஷ் பாபுவின் தந்தையும் தெலுங்கு திரைப்பட சூப்பர் ஸ்டாருமான கிருஷ்ணாவுக்கு, ஐசியூவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் நேற்று மாலை தெரிவித்திருந்தது. இந்நிலையில் அவர் தற்போது உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வயது 80. … Read more

திருப்பதியில் கேமராக்களை பறித்து உண்டியலில் போட்ட அதிகாரிகள்!!

திருப்பதி கோயிலுக்குள் அனுமதியின்றி, புகைப்படம் எடுத்த புகைப்பட கலைஞர்களின் கேமராக்கள் உண்டியலில் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பக்தர்கள் சிலர் கோயில், வடிவமைப்புகள் உள்ளிட்டவற்றை புகைப்படங்கள் எடுப்பது வழக்கம். அதற்காக அவர்கள் தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். உள்ளே வரும் பக்தர்களை புகைப்படங்கள் எடுக்கவும், திருப்பதி கோயிலுக்கும் புகைப்படங்கள் எடுப்பதற்கும் தனியே புகைப்பட கலைஞர்கள் உள்ளனர். அதற்கு அவர்களுக்கு தனியே லைசன்ஸும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் லைசன்ஸ் இல்லாமல் சில புகைப்பட கலைஞர்கள் கோயிலுக்குள் இருப்பதாகவும், அவர்கள் பக்தர்களை … Read more

புற்றுநோய் பாதிப்பிலிருந்து மீண்ட கோவா போலீஸ் அதிகாரி டிரையத்லானில் அசத்தல்

பனாஜி: கோவா மாநிலத்தைச் சேர்ந்த நிதின் வால்சன். எஸ்.பி.யாக (கிரைம் பிரிவு) பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு நிணநீர்க்குழிய புற்றுநோயால் (லிம்போமா) பாதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்ற இவர் கடந்த பிப்ரவரியில் நோயிலிருந்து மீண்டார். கடந்த ஞாயிற்றுக்கிழமை பனாஜியில் நடைபெற்ற அயன் மேன் டிரையத்லான் 70.3 ரக பந்தயத்தில் பங்கேற்று குறிப்பிட்ட நேரத்துக்குள் பந்தய தூரத்தைக் கடந்தார். அயன்மேன் டிரையத்லான் என்பது 1.9 கி.மீ. நீச்சல், 90 கி.மீ. சைக்கிளில் செல்லுதல், 21.1 கி.மீ. ஓட்டப்பந்தயம் என … Read more

நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும், மூத்த நடிகருமான கிருஷ்ணா மாரடைப்பு காரணமாக காலமானார்

சென்னை: மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர்ழந்தார். தெலுங்கு சினிமாவின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா, மாரடைப்பு காரணமாக காலமானர். நடிகர் கிருஷ்ணா திடீரென வீட்டில் மயங்கி விழுந்து சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து, பதறிப்போன அவரது குடும்பத்தினர் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மருத்துவமனையில் அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு … Read more

கை நிறைய சம்பளம்… வேலைக்கு ஆள் எடுக்கும் நித்தியானந்தா!!

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கிவிட்டதாக அறிவித்த நித்தியானந்தா, வேலைக்கு ஆட்கள் தேவை என்று அறிவிப்பு வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இந்தியாவை விட்டு சென்றுவிட்டதாக சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் அறிவித்தார். கைலாசா என்ற நாட்டின் அதிபராக இருப்பதாக கூறிய நித்தியானந்தா, நிர்வாக ரீதியாக நாட்டிற்கான அமைச்சர்கள் பெயர்களையும் அறிவித்தார். மேலும், கைலைசா நாட்டிற்காக தனி வங்கி, தனி பணம் என்று கூறினார். ஆனால் அந்த நாடு எங்கு உள்ளது , எப்படி உள்ளது என்ற எந்த … Read more

இந்தியா வரும் தலைவர்களுக்கு ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்த ஏற்பாடு: ராணுவ துணைத் தளபதி தகவல்

பெங்களூரு: உள்நாட்டில் தயாரிக்கப்படும் ராணுவத் தளவாடங்களை வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்படும் என்று ராணுவ துணைத் தளபதி பி.எஸ்.ராஜு தெரிவித்தார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான ஏஎஸ்சி சென்டர் அன்ட் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு பெங்களூரு பிராந்திய தொழில்நுட்ப மையத்தை (ஆர்டிஎன்-பி) பி.எஸ். ராஜு நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் அவர் பேசியதாவது: முன்பு ராணுவக் கருவிகளை நாம் இறக்குமதி செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.தற்போது ராணுவத் தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. … Read more