தெலங்கானாவில் மீண்டும் பரபரப்பு மயக்க ஊசி செலுத்தி 2வது மனைவி கொலை: நாடகமாடிய கணவன் அதிரடி கைது

திருமலை: தெலங்கானாவில் மயக்க ஊசி செலுத்தி 2வது மனைவிக்கு கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தில் உள்ள ஊரக மண்டலத்தை சேர்ந்தவர் பிட்சம். மயக்க மருத்துவ நிபுணரின் உதவியாளர். பிட்சம் முதலில் தனது உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருக்கு குழந்தை இல்லை. தனக்கு குழந்தை வேண்டும் என்பதற்காக தன்னை விட 20 வயது இளையவரான நவீனா என்ற பெண்ணை 2வது திருமணம் செய்து கொண்டார். … Read more

ஊ சொல்றியா மாமா போல கவர்ச்சி பாடல்: புஷ்பா 2வில் மலாய்க்கா அரோரா

ஐதராபாத்: புஷ்பா 2வில் கவர்ச்சி பாடலுக்கு டான்ஸ் ஆட மலாய்க்கா அரோரா தேர்வாகியுள்ளார். அல்லு அர்ஜுன், ராஷ்மிகா நடிப்பில் வெளியான படம் புஷ்பா. சுகுமார் இயக்கி இருந்தார். இந்த படம் பல மொழிகளில் வெளியாகி, பெரிய வெற்றி பெற்றது. புஷ்பா படத்தை உருவாக்குவதற்கு முன்பே இது 2 பாகமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசிலுடன் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் … Read more

பத்தே நாளில் விசாரணை முடிந்தது ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: ஹிஜாப் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கர்நாடகா கல்வி நிலையங்களில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடகா அரசு தடை விதித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கர்நாடகா உயர் நீதிமன்றம், அரசின் உத்தரவு செல்லும் என்று கடந்த மார்ச்சில் அறிவித்தது. இந்த உத்தரவை எதிர்த்து, அகில இந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம், இஸ்லாமிய மாணவிகள் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, துலியா … Read more

ஐதராபாத்தில் இந்தியா- ஆஸி. டி20 போட்டி டிக்கெட் வாங்க வந்த ரசிகர்கள் மீது தடியடி: பெண் உட்பட 3 பேர் கவலைக்கிடம்

திருமலை: ஐதராபாத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்காக டிக்கெட் பெற வந்த ரசிகர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியால் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், பெண் உட்பட 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். தெலங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் உப்பலில் உள்ள ராஜூவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 25ம் தேதி (நாளை மறுதினம்) இந்தியா-ஆஸ்திரேலியா இடையே டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான  டிக்கெட் செகந்திராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் … Read more

வங்கிக்கடன் மோசடி – பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத் தலைவர் ரிஷி கமலேஷ் கைது

வங்கிகளில் சுமார் 23ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குஜராத்தைச் சேர்ந்த பிரபல கப்பல் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கப்பல் கட்டும் நிறுவனம் ஏ. பி.ஜி. ஷிப் யார்டு. இதன் தலைவராக இருக்கும் ரிஷி கமலேஷ் அகர்வால், எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ. உள்ளிட்ட 28 வங்கிகளில் 22ஆயிரத்து 842 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்தது. 2012 … Read more

உ.பி.யில் கனமழை 10 பேர் உயிரிழப்பு

இட்டாவா: உத்தரப் பிரதேசத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சந்திரபுரா கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டு இருந்த 4 சிறுவர்கள் உயிரிழந்தனர். மேலும், சிறுவர்களின் பாட்டி சாந்தினி தேவி (70) மற்றும் 5 வயது குழந்தையும் காயமடைந்தனர். இதேபோல், கிரிபால்புர் கிராமத்தில் பெட்ரோல் பங்க் அருகில் இருந்த குடிசை மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் ராம் சனேகி (65) அவரது மனைவி ரேஷ்மா … Read more

பஞ்சாப்பில் சட்டப்பேரவையை கூட்ட ஆளுநர் அனுமதி மறுப்பு – காரணம் என்ன?

பஞ்சாப் மாநிலத்தில் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி மறுத்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்க தொடர்ந்து முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார். இதற்கு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவசியம் இல்லை எனக்கூறி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அனுமதி மறுத்துள்ளார். இதனால் முதலமைச்சர் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற … Read more

ஹிஜாப் மேல்முறையீடு வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!

கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும், சீருடை விவகாரத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும், கர்நாடகா உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வழங்கியிருந்தது. இதற்கு எதிராக … Read more

பாஜகவினர் மீது போலீசார் தடியடி..! – பஞ்சாப் மாநிலத்தில் பரபரப்பு ..!

பஞ்சாப் அரசை எதிர்த்து போராட்டம் நடத்திய பாஜகவினர் மீது அம்மாநில காவல் துறையினர் தடியடி நடத்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி அரசு நம்பிக்கை தீர்மானத்தை கொண்டு வருவதற்காக சட்டப் பேரவையின் சிறப்பு கூட்ட தொடர் நடத்த முடிவு செய்யப்பட்ட சூழல் நிலவியது . ஆனால் பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்றைய தினம் சட்டமன்ற கூட்ட தொடர் நடத்துவதற்கான முடிவை திடீரென திரும்ப பெற்று விட்டார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் இந்த … Read more

பெங்களூரு- ஒசூர் சிறப்பு ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கம்

பெங்களூரு: பெங்களூரு யஷ்வந்த்பூர்- ஒசூர் சிறப்பு ரயில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட்டுள்ளது. காலை 6.10 மணிக்கு யஷ்வந்த்பூரில் இருந்து புறப்பட்ட சிறப்பு ரயில் 7.50 மணிக்கு ஒசூர் வந்தடைந்தது.