கணவனை கொடுமைப்படுத்திய ‘குடிமகள்’; விரக்தி அடைந்த கணவன் விவாகரத்து கோரி மனு தாக்கல்!

சத்திஸ்கர் கோர்பா மாவட்டத்தின் பாங்கிமோங்ராவில் வசிக்கும் ஒரு இளைஞன் ஒரு விநோதமான பிரச்சனயை சந்திக்க நேரிட்டது. ஆயிரம் கனவுகளுடன் திருமணம் செய்த அவனுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. கட்கோராவைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்த நிலையில், திருமணமாகி 7 நாட்களுக்குப் பிறகு, 26 மே 2015 அன்று காலை, அவரது மனைவி படுக்கையில் மயங்கிக் கிடந்ததை பார்த்து முதலில் அதிர்ச்சி அடைந்தான். பின்னர் சிகிச்சைக்காக மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோது, அவர் மது அருந்தியதோடு அசைவம், குட்காவுக்கும் அடிமையாகி … Read more

டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு..!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்தித்து பேசினார். கேரளாவில் முதல்வர் பினராய் விஜயனுக்கும், ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது. பினராயும், ஆளுநரும் நேரடி கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கேரள அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களுக்கு இன்னும் ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை. இதையடுத்து கேரள அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க கேட்டு பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்த முதல்வர் பினராயி விஜயன் … Read more

நல்லவேளை கண்ணாடி திறக்கல.. பாய்ந்து வந்து தாக்கிய சிறுத்தை.. பதற வைக்கும் CCTV காட்சி!

குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருந்து வந்த நிலையில், அண்மைக் காலமாக சிறுத்தை, புலி போன்ற வன விலங்குகளும் மக்களும் செல்லும் பாதைகளில், வீடுகள் இருக்கும் பகுதிகளில் உலா வருவது தென்பட்டு வருகிறது. அந்த வகையில் அசாம் மாநிலத்தில் வாகனங்களில் சென்றவர்களை சிறுத்தை தாக்கியதில் 13 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கும் சம்பவம் அரங்கேறியிருக்கிறது. அதன்படி, ஜோர்காட் பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குள் சிறுத்தை ஒன்று புகுந்து சுற்றித் திரிந்து வந்திருக்கிறது. அது தனது கண்ணில்பட்டவர்களை தாக்கி வந்திருக்கிறது. … Read more

பிரதமர் மோடியுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், கேரளத்தில் வனப் பகுதியை ஒட்டிய பகுதியை சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவித்திருப்பதற்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் குறித்து எடுத்துக் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடெல்லி வந்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அப்போது, கேரள வனத்தை ஒட்டிய ஒரு கிலோ மீட்டர் தொலைவுப் பகுதிகள் சுற்றுச்சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்ப்பு … Read more

‘நிர்வாண படங்களை வெளியிடுவேன்’ இளம்பெண் மிரட்டல்: வாலிபர் தற்கொலை

திருமலை: ‘‘நான் கேட்ட பணத்தை தராவிட்டால் நிர்வாண படங்களை யூடியூபில் வெளியிடுவேன்’’ என்று இளம்பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் வி.கோட்டாவை சேர்ந்தவர் முரளி(19). கூலித்தொழிலாளி. வேலை முடிந்து வீடு திரும்பும் இவர் செல்போனில் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவாராம். அவ்வாறு பேஸ்புக்கை பார்த்துக் கொண்டு இருந்தபோது சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் புகைப்படத்துடன் ப்ரியாஷர்மா என்ற பெயரில் ‘ப்ரெண்ட் ரிக்வெஸ்ட்’ வந்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த முரளி உடனடியாக … Read more

மனுஷனா டா நீ..? காதலி பேச மறுத்ததால் … ‘ஸ்குரு டிரைவரால்’ 51 முறை குத்தி கொடூரமாக கொலை செய்த காதலன்!!

சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டம் ஜாஷ்பூர் பகுதியில் வசித்து வருபவர் துத்ராம் பன்னா. இவரது மனைவி புலொல்ஜினா. இந்த தம்பதிக்கு நீலீஸ் என்ற மகனும், நீல்குஷம் (20) என்ற மகளும் உள்ளனர். இதனிடையே, நீல்குஷம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் மதன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்ல ஜாஷ்பூர் – கோர்பா இடையே செல்லும் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது, அந்த பேருந்து நடத்துநரான ஷபாஷ் கான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more

“எவ்வளவு காலம் கரோனா, உக்ரைனுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பீர்கள்” – பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி

புதுடெல்லி: கரோனா, உக்ரைன் போன்ற பிரச்சினைகளுக்குப் பின்னால் எவ்வளவு காலம்தான் ஒளிந்துகொண்டிருப்பீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது. புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கவுரவ் வல்லப், பிரதமர் நரேந்திர மோடியின் மனதின் குரல் வானொலி உரையைச் சுட்டிக்காட்டி பேசினார். 2022 மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக இருந்ததாகவும் நரேந்திர மோடி கூறியதை சுட்டிக்காட்டிய கவுரவ் வல்லப், “பட்டினி குறியீட்டில் இந்தியா … Read more

OBC இட ஒதுக்கீடு இல்லாமல் தேர்தல் நடத்த தடை – முதல்வர் ஆதித்யநாத்துக்கு பின்னடைவு!

உத்தர பிரதேச மாநிலத்தில், ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இல்லாமல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாது எனக் கூறி அம்மாநில அரசின் அறிவிப்பை, அலகாபாத் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, நான்கு மாநகராட்சி … Read more

திருப்பதியில் முகக்கவசம் கட்டாயம்: தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் அறிவிப்பு

திருப்பதி: “ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்’ என்று தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சுப்பா ரெட்டி அறிவித்துள்ளார்.

போனில் பேச மறுத்ததாக கூறி இளம்பெண்ணை 51 முறை குத்தி கொன்ற கொடூர இளைஞர்!

சத்தீஸ்கரில் தன்னிடம் பேச மறுத்த 20 வயது பெண்ணை 51 முறை ஸ்க்ரூட்ரைவரால் குத்தி கொலைசெய்த நபரை போலீசார் தேடிவருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம், கோப்ரா மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஜாஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த குற்றவாளி, கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பேருந்து ஒன்றில் நடத்துனராக பணிபுரிந்துள்ளார். அப்போது தினமும் அந்த பேருந்தில் பயணித்த ஒரு பெண்ணிடம் நட்புகொண்டார். பின்னர் அங்கிருந்து வேலை நிமித்தமாக அகமதாபாத் சென்ற அந்த நபர், தொடர்ந்து அந்த பெண்ணிடம் செல்போனில் … Read more