ராஜஸ்தானில் கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு பைலட்டை முதல்வராக்க கூடாது: சோனியாவுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம்

புதுடெல்லி: ராஜஸ்தானில் அசோக் கெலாட்டுக்கு பதிலாக, சச்சின் பைலட்டை முதல்வராக தேர்ந்தெடுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவரை தவிர வேறு யாருக்காவது முதல்வர் பதவியை வழங்கும்படி, கெலாட் ஆதரவு எம்எல்ஏ.க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அடுத்த மாதம் 17ம் தேதி நடக்கிறது. இதில், சோனியா காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் போட்டியிடவில்லை. இதனால், பல்வேறு மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகின்றனர். சோனியா  காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியின் … Read more

மனைவியை மிரட்டுவதற்காக தூக்கு மாட்டிய கணவர் பலி!!

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்த ராம்ஜி ஷர்மா (36) என்பவர் துணிக்கடையில் வேலை பார்த்து வந்தார். பண்டிகை காலம் வருவதால் துணி எடுப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் மனைவி சாந்தினி தேவியிடம் ரூ.2000 கொடுத்து வைத்துள்ளார். தற்போது அவருக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டதால், தான் கொடுத்து வைத்திருந்த பணத்தில் இருந்து ரூ.500 கேட்டுள்ளார். சாந்தினி தேவியோ அவ்வளவு பணம் உங்களுக்கு எதற்கு என்று கேட்கவே அதற்காக சரியான காரணத்தை … Read more

சூப்பர் அறிவிப்பு! விமான நிலையத்திற்கு பகத் சிங் பெயர்!!

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள விமான நிலையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரர் பகத் சிங்கின் பெயர் சூட்டுப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மனதின் குரல் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு தனது இளம் வயதிலேயே ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டு உயிர் தியாகம் செய்த பகத் சிங்கின் பிறந்தநாள் செப்டம்பர் 28 தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பகத் சிங்கிற்கு பெருமை சேர்க்கும் விதமாக அவர் பிறந்த பஞ்சாப் … Read more

சோனியா காந்தியுடன் நிதிஷ் குமார் சந்திப்பு..! – இருவரும் பேசியது என்ன..?

நிதிஷ் குமார் மற்றும் லாலு பிரசாத் யாதவ் ஆகிய இருவரும் காங்கிரஸ் கட்சியின் இடைகால தலைவர் சோனியா காந்தியை இன்று சந்தித்து பேசினார். இந்த சந்தித்த பிறகு நிதிஷ் குமாரும் – லாலு பிரசாத் யாதவும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தல தலைவர் நிதிஷ் குமார், “நாட்டை முன்னெடுத்து செல்ல அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து, தேர்தல் முடிந்த … Read more

விமானத்தை இயக்கும்போது 66% விமானிகள் உறங்குவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நாட்டில் சுமார் 66 விழுக்காடு விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, 542 உள்நாட்டு விமானிகளிடம் ஆய்வு நடத்தியது. இதில் அதிகபட்சமாக 2 மணி நேரம் விமானத்தை ஆட்டோ பைலட் மோடில் வைத்துவிட்டு, விமானிகள் தூங்குவது தெரியவந்துள்ளது. நாட்டில் சுமார் 66 விழுக்காடு விமானிகள் விமானத்தை இயக்கும் போது உறங்குவதாகவும் நாளொன்றுக்கு பத்து முதல் 12 மணி நேரம் வேலை செய்வதே இதற்கு காரணம் என்றும் … Read more

பாம்பை வைத்து ரீல்ஸ் வீடியோ எடுத்த சாமியார் மரணம்!!

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பனியா கெரா கிராமத்தில் பஜ்ரங்கி (55) என்ற சாமியார் வசித்து வந்தார். இதே கிராமத்தில் சுபேதார் என்பவர் வாகனங்களை பழுதுபார்க்கும் கடையினை நடத்தி வருகிறார். இவரின் கடைக்குள் நாகப்பாம்பு ஒன்று நுழைந்தது. அந்த பாம்பை சுபேதார் கொல்ல முயன்றபோது அங்கு சாமியார் வந்துள்ளார். வந்தவர் அந்த பாம்பை கொல்ல வேண்டாம் என்ற கூறியுள்ளார். இதனால் சுபேதாரும் பாம்பை கொல்லாமல் விட்டுள்ளார். பின்னர் அந்த பாம்பை லாவகமாக பிடித்த சாமியார் அதனை ஒரு … Read more

செம அறிவிப்பு! தீபாவளிக்கு 11 நாட்கள் விடுமுறை!!

வழக்கமான நடைமுறைகளுக்கு மாறாக, ஊழியர்கள் அனைவருக்கும் நீண்ட விடுமுறை அறிவித்து மீஷோ நிறுவனம் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. மீஷோ நிறுவன ஊழியர்களுக்கு அக்டோபர் 22 தொடங்கி நவம்பர் 1 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு மன ரீதியாக புத்துணர்ச்சி கிடைக்க இந்த விடுமுறை உதவும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விடுமுறை அறிவித்துவிட்டு, சில முக்கிய பணிகளை வீட்டில் இருந்தே செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிக்காமல், இந்த 11 நாட்களிலும் ஊழியர்கள் முழுமையாக தங்கள் வேலைகளை ஒத்திவைத்துவிட்டு … Read more

மத்திய – மாநில அரசைக் கண்டித்து நாளையும், நாளை மறுநாளும் பந்த்..!

திமுக எம்பி ஆ.ராசா சமீபத்தில், “இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சவன். இந்துவாக இருக்கும் வரை நீ தீண்டத்தகாதவன். எத்தனை பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்..?. எத்தனை பேர் தீண்டத்தகாதவராக இருக்க விரும்புகிறீர்கள்..?” என பேசியிருந்தார். இந்நிலையில், இந்துக்களை அவமரியாதையாக பேசியதாக திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுநாள் (செப்.27-ம் தேதி) முழுஅடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக … Read more

கேரளாவில் காங்கிரஸ் மாஜி அமைச்சர் மரணம்: ராகுல் காந்தி அஞ்சலி

திருவனந்தபுரம்: கேரளாவில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ஆரியாடன் முகம்மது (87) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். கேரளாவில் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஆரியாடன் முகமது. ஏ.கே.அந்தோணி, உம்மன்சாண்டி ஆகியோரது அமைச்சரவைகளில் தொழில், வருவாய் மற்றும் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். 1980ல் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இடது முன்னணியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வனம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2001 மற்றும் 2005ல் உம்மன்சாண்டி மந்திரி சபையில் மின்சாரத் துறை அமைச்சராக இருந்தார். … Read more

காதலுக்கு மரியாதை!! கணவருக்கு முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்த மனைவி!

ஆந்திராவில் மனைவி ஒருவர் தனது கணவருக்கு முன்னாள் காதலியுடன் 2வது திருமணம் செய்து வைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாண். இவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண் பழக்கமானார். இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த … Read more