அயோத்தியில் கோயில் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவு

அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் க்ஷேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அந்த அறக்கட்டளை உருவாக்கிய விதிமுறைகளை அங்கீகரிப்பதற்கான கூட்டம் பைஸாபாத்தில் நடைபெற்றது. இதுகுறித்து அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய் கூறும்போது, ‘‘அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதற்கான ஒட்டுமொத்த செலவினம் ரூ.1,800 கோடியாக இருக்கும் என கட்டுமான நிபுணர்களால் மதிப்பீடு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. கோயில் கட்டுமானப் பணிகள் வரும் 2023-ம் ஆண்டுக்குள் … Read more

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே எலக்ட்ரிக் பைக் ஷோரூமில் தீ விபத்து: ஏழு பேர் உயிரிழப்பு

திருமலை: தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் திங்கள்கிழமை இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.பைக் ஷோரூமில் தீ விபத்து ஏற்பட்டதால்  அதில் இருந்த ஊழியர்கள் அனைவரும் வெளியே ஓடி வந்தனர். ஆனால், ஷோரூம் செயல்பட்டு வந்த  கட்டிடத்தின் மேல் தளத்தில் உள்ள ரூபி லாட்ஜில் பலர் தங்கி இருந்தனர். இதனால் அதில் இருந்தவர்கள் தீயில் சிக்கி கொண்டனர். அதில்  சிலர் தங்கள் உயிரைக் … Read more

அகமதாபாத் – மும்பை இடையே 491 கி.மீ. தூரத்தை 5 மணி நேரத்தில் கடந்தது வந்தே பாரத் ரயில்

மும்பை: அகமதாபாத்-மும்பை இடை யிலான ‘வந்தே பாரத்’ ரயில் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றுள்ளது. இந்த ரயில் 491 கி.மீ. தூரத்தை சுமார் 5 மணி நேரத்தில் கடந்தது. குஜராத் மாநிலம் அகமதாபாத், மகாராஷ்டிர மாநிலம் மும்பை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த 9-ம் தேதி சோதனை ஓட்டம் நடைபெற்றது. இது வெற்றி பெற்றதாக மேற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது இந்த … Read more

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஆசியாவில் அரிசி வர்த்தகம் முடக்கம்!

இந்தியாவில் அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் ஆசியாவில் அரிசி வர்த்தகம் முடங்கியுள்ளது. உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளரான இந்தியா, உலக அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை கொண்டுள்ளது. சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உலகின் முன்னணி அரிசி இறக்குமதியாளர்களாக உள்ளன. நடப்பு பருவத்தில் நெல் சாகுபடி குறைந்ததால், கடந்த வாரம் பாசுமதி அல்லாத அரிசிக்கு 20 சதவீதம் ஏற்றுமதி வரியும், உடைந்த அரிசியை ஏற்றுமதி செய்ய தடையும் விதிக்கப்பட்டது. 20 சதவீத ஏற்றுமதி வரியை செலுத்த … Read more

ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள் என்று ஒன்றிய அரசு கணக்கு எடுக்க வேண்டும்: சுகாதாரத்துறை ஆய்வறிக்கை தாக்கல்

டெல்லி: ஆக்சிஜன் பற்றாக்குறையால் எத்தனை கொரோனா நோயாளிகள் இறந்தார்கள் என்று ஒன்றிய அரசு கணக்கு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்யவேண்டும் என்று சுகாதாரத்துறை தொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது.

பாடகர் சித்து மூஸ்வாலா கொலையில் தீவிரவாதிகள், தாதாக்களுக்கு தொடர்பு – பஞ்சாப் உட்பட 50 இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூஸா கிராமத்தை சேர்ந்த ராப்பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலைக்கு கனடாவை சேர்ந்தரவுடி கோல்டி பிரார் பொறுப்பேற்றார். கோல்டி பிராரின் நெருங்கிய நண்பர் லாரன்ஸுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. பல்வேறு தீவிரவாத அமைப்புகளுடன் கோல்டி பிரார், லாரன்ஸுக்கு தொடர்பிருப்பதால் அவர்கள் சார்ந்த குழுக்கள் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கின் முக்கியத்துவம் கருதி பாடகர் சித்து மூஸ்வாலா … Read more

போதையில் தள்ளாடும் பஞ்சாப் இளம்பெண்: வைரல் வீடியோ

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் சட்டவிரோத போதைப் பொருள் பயன்படுத்தி சாலையில் நடக்க முடியாமல் தள்ளாடியபடி நிற்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் போதைப் பொருட்கள் அதிகளவில் புழங்குவதாக அடிக்கடி புகார்கள் வருவது வழக்கம். இதை நிரூபிக்கும் வகையில், நடுரோட்டில் இளம்பெண் ஒருவர் போதையில் தள்ளாடும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வைரலானது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியின் மக்பூல்புரா பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த … Read more

கால்நடைகளை பாதிக்கும் ‘லம்பி ஸ்கின்’ நோயை தடுக்க உள்நாட்டிலேயே சொந்தமாக தடுப்பூசி கண்டுபிடிப்பு

புதுடெல்லி: சர்வதேச பால் பண்ணை கூட்டமைப்பின் உலக பால்வள உச்சி மாநாட்டை உத்தர பிரதேசம் கிரேட்டர் நொய்டாவில் பிரதமர் மோடி தலைமையேற்று தொடங்கி வைத்தார். முதல்வர் ஆதித்ய நாத், பால் பண்ணை தொழில் முனைவோர், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது: கால்நடைகளை பாதிக்கும் தோல் கழலை (லம்பி ஸ்கின்) நோய்க்கு ஒரு மாதத்தில் மட்டும் 5,000 மேற்பட்ட விலங்குகள் பலியாகியுள்ளன. கால்நடைகளின் உயிரிழப்புகளைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு மாநில … Read more

லடாக் எல்லையில் இருந்து இந்தியா, சீனா படைகள் திட்டமிட்டபடி விலகல்: ராணுவ தளபதி தகவல்

புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் கடந்த 2020ம் ஆண்டு இந்திய-சீன வீரர்கள் இடையே கடும் மோதல் நடந்தது.    இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்து வந்தன. கடந்த ஜூலை மாதம் இரு நாட்டின் ராணுவ உயர் அதிகாரிகளின் 16வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் , கிழக்கு லடாக்கின் கோக்ரா-ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெறுவது என இரு தரப்பு ராணுவ அதிகாரிகள்  இடையே ஒருமித்த முடிவு எட்டப்பட்டது. அதன் படி ஒருங்கிணைந்த மற்றும் திட்டமிட்ட வழிமுறைகளின் … Read more

ரயில்வே சங்க தேர்தலில் 61-வது முறை வெற்றி பெற்று 106 வயது கண்ணையா சாதனை

லக்னோ: உத்தர பிரதேசத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் கண்ணையா லால் குப்தா, ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றிய அவர், பின்னர் வடக்கு ரயில்வே பணியில் சேர்ந்தார். கடந்த 1946-ம் ஆண்டில் வடக்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் சங்க பொதுச் செயலாளராக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டார். கடந்த 1974-ம் ஆண்டில் ஜெயபிரகாஷ் நாராயண் இயக்கத்தில் பங்கேற்றார். அதேநேரம் மஸ்தூர் யூனியன் பணிகளிலும் தீவிர கவனம் செலுத்தினார். கடந்த 1981-ம் ஆண்டில் ரயில்வே பணியில் இருந்து கண்ணையா ஓய்வு பெற்றார். … Read more