தமிழகத்தின் முக்கிய பிரபலம் காலமானார்..!

உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருக்கு வயது 90. திருச்சியில் பிறந்த தவத்திரு ஊரன் அடிகள் தமிழ் சமயங்கள், சன்மார்க்க நெறிகளை ஆராய்ச்சி செய்துள்ளார். அத்துடன், பல ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார். கடலூரில் வசித்து வந்த இவர் உடல்நலக்குறைவு காரணமாக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி தவத்திரு ஊரன் அடிகள் காலமானார். அவருடைய இறுதிச் சடங்கு இன்று வடலூரில் … Read more

‘அக்னிபாதை’ திட்டத்துக்கு எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

புதுடெல்லி: அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்களை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது. ராணுவத்தின் முப்படைகளிலும் 4 ஆண்டு காலத்துக்கு பணி யாற்றும் ‘அக்னிபாதை’ என்ற திட்டத்தை கொண்டுவர மத்திய அமைச்சரவை கடந்த ஜூன் 14-ம்தேதி ஒப்புதல் அளித்தது. அதன்படி 17 வயது முதல் 21 வயதுள்ள இளைஞர்கள் முப்படைகளிலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். முதல் கட்டமாக விமானப் படையில் அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இத்திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன. … Read more

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்: எதிர்க்கட்சிகள் விளாசல்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலும் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு, கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, … Read more

சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்..!!

டெல்லி: சென்னை அடுத்த ஈஞ்சம்பாக்கம் அருகே பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து அருள் மற்றும் பலர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

உலகின் 10வது & இந்தியாவில் இவருக்குதான் இந்த வகை ரத்தம்… அப்படி என்ன வகை?

இந்தியாவில் முதல் முறையாக ஒருவருக்கு தனித்துவமான ரத்த வகை இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. வழக்கமாக A,B,O மற்றும் AB ஆகிய ரத்த வகைகளே இருக்கும். ஆனால் குஜராத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கு அந்த 4 ரத்த வகைகளில் இல்லாத EMM Negative என்ற புதுவகை ரத்தம் இருப்பதை கண்டு மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். வழக்கத்துக்கு மாறான ரத்தவகை உலகிலேயே இதுவரை 9 பேருக்கு மட்டுமே இருந்தது. தற்போது இந்தியாவில் முதல் முறையாக குஜராத்தின் 65 வயது முதியவருக்கு … Read more

தமிழகத்தின் முக்கிய பிரபலமும் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான ஊரான் அடிகள் காலமானார்..!!

சிறந்த சொற்பொழிவாளர், நூலாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர், பத்திரிகையாசிரியர், அற நிறுவனக் காவலர் முதலிய பன்முகச் சிறப்புப் படைத்தவர் ஊரான் அடிகள். திருச்சி மாவட்டம் சமயபுரம் நரசிங்க மங்கலத்தில் பிறந்த இவர், 1955 முதல் பன்னிரண்டு ஆண்டுக் காலம் திருவரங்கம், வேலூர், திருச்சிராப்பள்ளி நகராட்சிகளில் நகர் அமைப்பு ஆய்வாளராகப் பணியற்றினார். இவர் தமது இருபத்திரண்டாம் வயதில் “சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம்” நிறுவி, தமிழ்ச் சமயங்களைப் பற்றியும், சன்மார்க்க நெறி பற்றியும் ஆராய்ச்சி செய்து பல்வேறு சமய நூல்களை … Read more

நீலகிரியில் அவசர உதவிக்கு 24 மணி நேரமும் செயல்படும் இலவச எண் அறிவிப்பு..!!

கடந்த 15 நாட்களாகவே தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து குறிப்பாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மாவட்டங்களில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மழை பாதிப்பு ஏற்பட்டால் 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. மழை காரணமாக ஊட்டி, கூடலூர், … Read more

குரு பூர்ணிமாவை முன்னிட்டு பிரதமர் மோடி, ராகுல் காந்தி வாழ்த்து

புதுடெல்லி: குரு பூர்ணிமாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று விடுத்த செய்தியில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துகள். நம்மை ஊக்கப்படுத்தி, வழி காட்டி, வாழ்க்கை பற்றி பலவற்றை கற்றுத் தந்த அனைத்து முன்மாதிரி யான குருமார்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் இது. கற்றலுக்கும் ஞானத்திற்கும் நமது சமூகம் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. நமது குருமார்களின் ஆசிகள் இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு … Read more

வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..!

திருவனந்தபுரம்: வெளிநாட்டில் இருந்து கேரளா திரும்பிய ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று அறிகுறி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேட்டியளித்தார். பரிசோதனை முடிவு வரும் வரை தொற்று பாதித்தவர், குடும்பத்தினரை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி.. நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள்: பட்டியல் தயார்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியலை மக்களவை செயலர் வெளியிட்டிருக்கிறார். அதன்படி ஜூம்லாஜீவி, பால் புத்தி, கோவிட் ஸ்ப்ரெட்டர், ஸ்நூப் கேட் உள்ளிட்ட பல வார்த்தைகளைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. வரும் 18 ஆம் தேதி (ஜூலை 18) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. இந்ந்நிலையில் தடை செய்யப்பட்ட வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் சகுனி, சர்வாதிகாரி, காலிஸ்தானி, ஜெய்சந்த், வினாஷ் புருஷ் ஆகிய பார்த்தைகள் அவை நாகரிகம் அற்றவை. உறுப்பினர்கள் … Read more