காளி ஆவணப்பட விவகாரம்: லீலா மணிமேகலைக்கு டெல்லி ஐகோர்ட் சம்மன்

புதுடெல்லி: காளி ஆவண திரைப்படத்தின் இயக்குனர் லீனா மணிமேகலை நேரில் ஆஜராகுமாறு டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. செங்கடல், மாடத்தி போன்ற ஆவண திரைப்படங்கள் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்தவர் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை. அந்த வகையில் இவர் ஜூலை 2ம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் இந்து கடவுளான காளி ஒரு கையில் எல்.ஜி.பி.டி கொடியும் மற்றொரு கையில் சிகரெட்டுடன் நிற்பது போல ‘‘காளி” எனும் ஆவண திரைப்பட … Read more

ராஜீவ் காந்தி கொலை வழக்கு.: பேரறிவாளனை விடுவித்தது போல தன்னையும் விடுவிக்கக் கோரி ரவிச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் மனு

டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ரவிச்சந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். பேரறிவாளனை விடுவித்தது போல தன்னையும் விடுவிக்கக் கோரி ரவிச்சந்திரன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. ஒரே நாளில் 16,678 பேர் பாதிப்பு..!

இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 678 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியான நிலையில், 26 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பரவும் விகிதம் ஐந்து புள்ளி ஒன்பது ஒன்பதாக உள்ள நிலையில், ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 713 பேர் சிகிச்சையில் உள்ளனர். நோய் தொற்றிலிருந்து 14 ஆயிரத்து 629 பேர் குணமடைந்துள்ளனர். Source link

கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு

பெங்களூரு: கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இரு அணைகளில் இருந்தும் காலை 80 ஆயிரமாக இருந்த நீர் திறப்பு தற்போது 1.10 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

காலணிக்குள் பதுங்கியிருந்த பாம்பு- படமெடுத்த வீடியோ வைரல்!

மழைக்காலம் துவங்கியுள்ள நிலையில் காலணிகளை ஒருமுறை சோதித்து விட்டு, பின்னர் அணிவது பல ஆபத்தில் இருந்து நம்மை காக்க உதவும். பயிற்சியை முடித்த பின் இரு காவலர்கள் தங்கள் காலணிகளை (Shoes) அணியத் துவங்கும்போது காலணிக்குள் வித்தியாசமாக ஒரு உயிரினம் இருப்பதை கண்டு குழப்பம் அடைந்துள்ளனர். காலணிக்குள் இருந்தது பாம்பு என தெரிய வர இருவரும் அதிர்ச்சி அடைந்தனர். காலணிக்குள் இரும்புக் கம்பியை விட்டு பாம்பை வெளியே இழுக்க முயன்றபோது, அந்த பாம்பு படமெடுத்தது. இருப்பினும் பாம்பை … Read more

ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு சீருடை வாங்கி தந்த பள்ளி முதல்வர்… சீருடை அணியும் நடைமுறையை கடைப்பிடித்த ஆசிரியர்கள்..!

பீகாரின் கயா மாவட்டத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுடன் ஆசிரியர்களும் சீருடை அணிந்து வருகின்றனர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த இந்த பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணிபுரியும் முதல்வர் நாகேஷ்வர் தாஸ், தன்னுடைய தனிப்பட்ட நிதியிலிருந்து ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் சீருடை வாங்கி தந்துள்ளார். மாணவ, மாணவியர்களிடம் வேற்றுமை ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக சீருடை அணியும் நடைமுறையை அரசுப் பள்ளி ஆசிரியர்களும் பின்பற்ற தொடங்கியுள்ளனர். Source link

பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் வேகமாக நிரம்பும் அணைகள்: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவேரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு  1 லட்சம் கன அடியாக  அதிகரிக்கப்பட்டுள்ளது. காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் வேகமாக நிரம்புவதால் அணைக்கு வரும் நீர் அப்படியே காவேரியில் திறந்துவிடப்படுகிறது. கே.ஆர்.எஸ் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து வினாடிக்கு 74 ஆயிரம் கன அடி நீர் … Read more

தெலுங்கானாவில் பெய்துவரும் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு – 34 ரயில் சேவைகள் ரத்து..!

தெலுங்கானாவில் பெய்துவரும் கனமழையால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோதாவரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பத்ராசலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறும், பழைய மற்றும் பாழடைந்த கட்டிடங்களில் இருந்து வெளியேறுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், கனமழை காரணமாக ஜூலை 11 முதல் 13-ம் தேதி வரை 34 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.  Source link

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 21ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 21ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சோனியா காந்தி ஆஜராகாத விலையில் அமலாக்கத்துறை மீண்டும் நோட்டீஸ் அளித்துள்ளது.

மும்பை மெட்ரோ ரயில் எதிர்ப்பு போராட்டத்தில் குழந்தைகள் பங்கேற்ற விவகாரம்.. ஆதித்யா தாக்கரே மீது வழக்குப்பதிவு.!

மெட்ரோ ரயில் எதிர்ப்பு போராட்டத்தில் குழந்தைகளை பங்கேற்க செய்த முன்னாள் அமைச்சர் ஆதித்யா தாக்கரே மீது வழக்குப்பதிவு செய்யுமாறு மும்பை காவல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும்,  நடவடிக்கை தொடர்பான அறிக்கையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மும்பை ஆரே பால்பண்ணைக் காட்டில் மெட்ரோ ரயில் பணிமனை அமைப்பதை எதிர்த்து ஆதித்யா தாக்கரே தலைமையில் பல்வேறு அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். Source link