விமான நிலையத்தில் பரிசோதனை; குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம்.!

டெல்லி: குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநிலங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை கடிதம் எழுதியுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்கு அம்மை பாதிப்பை பரிசோதனை செய்யும் குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தியுள்ளது. குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளது. அதில், குரங்கு அம்மை பாதிப்புள்ள நாடுகளில் இருந்து வருவோரை விமான நிலையங்களில் … Read more

அமலாக்கத்துறையில் சோனியா காந்தி ஆஜராக சம்மன் -நாடு தழுவிய போராட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

சோனியா காந்தி வருகிற 21-ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகும் போது நாடு தழுவிய அளவில் போராட்டத்தில் ஈடுபட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.   நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் மூத்த தலைவர்கள் அடங்கிய வியூக குழு கூட்டம் சோனியா காந்தியின் இல்லத்தில் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்களான … Read more

நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள்; புதிய பட்டியல் வெளியீடு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற 18ம் தேதி தொடங்குகிறது. இந்தநிலையில் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில் ஆங்கில வார்த்தைகளும், இந்தி வார்த்தைகளும் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு ஊழல், கொரோனா பரப்புபவர், வாய்ஜாலம் காட்டுபவர், நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, அழிவு சக்தி, காலிஸ்தானி ஆகிய வார்த்தைகள் … Read more

இனி பாஜக அரசை எதைச் சொல்லித்தான் நாங்கள் விமர்சிப்பது: மஹூவா மொய்த்ரா 

நாடாளுமன்றத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ள வார்த்தைகள் அடங்கிய பட்டியலுக்கு திரிணமூல் எம்.பி. மஹூவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மக்களவை செயலர் அவை நாகரிகமற்ற வார்த்தைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டுள்ளார். அதிலுள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாகவும், மீறி பயன்படுத்தினால் அவைக் குறிப்பிலிருந்து அந்த வார்த்தைகள் நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தடை செய்யப்பட்ட வார்த்தைகளின் பட்டியல் ஊடகங்களில் வெளியாகியுள்ளது. ஆங்கில அகர வரிசையில் அவை … Read more

இந்தியாவில் நுழைந்த மங்கி பாக்ஸ்? கேரளாவில் தனிமையில் ஒருவர்.. சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

திருவனந்தபுரம் : கேரளாவில் ஒருவருக்கு குரங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதாகவும், அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.மங்கி பாக்ஸ் என்று அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. 1960ம் ஆண்டில் இந்த காய்ச்சல் ஆப்பிரிக்காவில் உள்ள காங்கோ நாட்டில் தான் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே அதிகமாக பரவி வந்த இந்தக் காய்ச்சல் சமீபகாலமாக ஐரோப்பிய நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இங்கிலாந்து, … Read more

புதிய தலைமை பொருளாதார ஜோதிடரை நிர்மலா நியமிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரகங்களை துணைக்கு அழைத்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் புகைப்படங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், பணவீக்கம் 7.01 சதவீதமாகவும், வேலையின்மை 7.8 சதவீதமாகவும் இருந்த அதே நாளில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வியாழன், புளுட்டோ மற்றும் யுரேனஸின் புகைப்படங்களை வெளியிட்டதில் தனக்கு எந்த … Read more

“தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமிப்பீர்” – நிர்மலா சீதாராமனை கிண்டல் செய்த ப.சிதம்பரம்

புதுடெல்லி: பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை விடுத்து மத்திய நிதியமைச்சர் நாசா புகைப்படங்களை சிலாகித்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “தலைமைப் பொருளாதார ஜோதிடரை வேண்டுமானால் நியமிக்கலாம்” என்று கிண்டல் செய்துள்ளார். தன்மீது நம்பிக்கையிழந்த நிதியமைச்சர் ஆரம்பகட்டமாக தலைமைப் பொருளாதார ஜோதிடரை வேண்டுமானால் நியமிக்கலாம் என்றும் அவர் கிண்டல் செய்துள்ளார். இது தொடர்பாக சிதம்பரம் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “பணவீக்கம் 7.01 சதவீதமாக உள்ளது, வேலைவாய்ப்பின்மை 7.8 சதவீதமாகவும் உள்ளது. ஆனால் நிர்மலா சீதாராமனோ ஜூபிடர், ப்ளூட்டோ … Read more

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்,டீசல் விலை 3 ரூபாயும் குறைப்பு

மகாராஷ்டிரத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூவாயும் குறைக்கப்படுவதாக முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்துள்ளார். மகாராஷ்டிரத்தில் பாஜக – சிவசேனா அரசு சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்றபோது, பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என முதலமைச்சர் ஏக்நாத் சிண்டே அறிவித்தார். அதன்படி பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரியில் 5 ரூபாயும், டீசல் மீதான வரியில் 3 ரூபாயும் குறைக்கப்படுவதாக  அறிவித்துள்ளார். Source link

மகாராஷ்டிராவில் 11 மாவட்டங்களுக்கு கனமழை..மும்பையில் பருவமழை தீவிரம்..: வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

மும்பை: மும்பையில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பெய்த இடைவிடாத மழையால் சாலைகளில் வெள்ளம் தேங்கியது. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மும்பையின் உயிர்நாடியாக விளங்கும் மின்சார ரயில் போக்குவரத்தில் மழையின் காரணமாக பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் ரயில்கள் காலதாமதமாக இயங்கியது. அந்தேரி மிலன் சுரங்கப்பாதையில் 2 அடி உயரத்திற்கு வெள்ளம் தேங்கியதால் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. குர்லா கமானி சந்திப்பு, தேவ்னார் நீலம் ஜங்ஷன், … Read more

தெலங்கானாவில் பலத்த மழை: பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை

ஹைதராபாத்: தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் உட்பட அனைத்து மாவட்டங்களிலிலும் ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர் நிலைகள் நிரம்பி உள்ளன. பல அணைகள் நிரம்பியதால், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். இதனால் கடந்த திங்கட்கிழமை 11-ம் தேதி முதல் நேற்று வரை பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. தற்போது மழை … Read more