இடதுசாரி தீவிரவாதம் பாதித்த பகுதிகளில் 4ஜி அலைபேசி சேவை

இடதுசாரி அதிதீவிரவாதம் பாதிப்பு உள்ள பகுதிகளில் 2ஜி அலைபேசி சேவைகளை 4ஜி ஆக உயர்த்த அனைத்து சேவை பொறுப்பு நிதியத்திற்கு மத்திய அரசு பரிந்துரை அளித்துள்ளது. முதல்கட்டத்தில் 2,343 இடங்களை மேம்படுத்த (வரிகள் மற்றும் தீர்வைகள் நீங்கலாக) ரூ.1,884.59 கோடி செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் புதன்கிழமை பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அளிக்கப்பட்டது. இந்த இடங்களை பிஎஸ்என்எல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதன் சொந்த செலவில் பராமரிக்கும். இந்த … Read more

புதுச்சேரியில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவிப்பு

புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பல மாதங்களாக நேரடி வகுப்புகள் நடைபெறாததால், கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் வருகை நாட்கள் குறைவாக இருந்தாலும், பள்ளிக்கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. Source … Read more

மந்திரிகள் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்- உ.பி. முதல் மந்திரி உத்தரவு

லக்னோ: மந்திரிகளின் சிறப்புக் கூட்டத்தை உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நடத்தினார். அப்போது அவர் பேசுகையில், ‘ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு மக்கள் பிரதிநிதிகளின் நேர்மையும், தூய்மையும் மிகவும் முக்கியம். அதன் அடிப்படையில், அனைத்து மந்திரிகளும் பதவியேற்ற 3 மாதங்களுக்குள் தங்கள் மற்றும் தங்களது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அதேபோல ஐ.ஏ.எஸ்., பி.சி.எஸ். (பிராந்திய சிவில் சர்வீஸ்) அதிகாரிகள் உள்பட அனைத்து அரசு ஊழியர்களும் தமது மற்றும் தங்களது குடும்பத்தினரின் சொத்து … Read more

லாரி மீது கார் மோதல் தந்தை, மகன் உள்பட 4 பேர் பரிதாப சாவு: ஆலப்புழா அருகே பரிதாபம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக இறந்தனர். இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு அருகே ஆநாடு பகுதியை சேர்ந்தவர் சுதீஷ் லால் (42). இவரது மனைவி ஷைனி, துபாயில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் விடுமுறை … Read more

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மாநிலங்களை குற்றஞ்சாட்டிய பிரதமருக்கு உத்தவ் தாக்கரே பதில்

மாநில அரசின் வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயருகிறது என்ற பிரதமரின் பேச்சுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறது மகாராஷ்டிரா அரசு. அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை ஏற்றத்தை குறைக்க மாநில அரசுகள் தங்கள் வரியை குறைக்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார். மிக முக்கியமாக எதிர்க்கட்சிகள் ஆளக்கூடிய மாநிலங்களில் இப்போது வரை பெட்ரோல், டீசல் மீதான மாநில வரி … Read more

எம்.ஏர்.பி விலைக்கு அதிகமாக மதுபானம் விற்றால் விற்பனை உரிமம் ரத்து – புதுச்சேரி கலால் துறை எச்சரிக்கை

புதுச்சேரியில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்தால் கடை உரிமம் ரத்து செய்யப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகளில்  எம்.ஏர்.பி  விலையை விட பாட்டிலுக்கு கூடுதல் விலை வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்ததை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலைக்கு கடை ஊழியிர்கள் விற்றாலும் அதன் முழு பொறுப்பும் கடை உரிமையாளரையே சேரும் என தெரிவித்துள்ள புதுச்சேரி கலால் துறை, விதிமீறலில் ஈடுபடும் மதுக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் … Read more

கொரோனா 4-வது அலையை எதிர்கொள்ள தயார்: பசவராஜ் பொம்மை

பெங்களூரு: இந்தியாவில் 1-வது, 2-வது மற்றும் 3-வது கொரோனா அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு நாடுமுழுவதும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசதங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணியும், கொரோனா பரிசோதனை பணிகளும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்கும் … Read more

உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடியை விடுவிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..!!

டெல்லி: உரங்களுக்கான மானியத்தை உயர்த்தி ரூ.60,939.23 கோடியை விடுவிக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு – காஷ்மீரில் ரூ.4,526 கோடியில் 540 மெகாவாட் நீர்மின் நிலையம் அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நக்சல் பாதிப்புள்ள இடங்களில் 2ஜி சேவையில் இருந்து 4ஜி சேவை வழங்க ரூ.1,884 கோடியில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

'கார்ல போனா ஹெல்மெட் போடமாட்டீங்களா' அபராதம் விதித்த போக்குவரத்து காவலரால் சர்ச்சை

கேரளாவில் கார் ஓட்டுநர் ஒருவருக்கு சரியாக ஹெல்மெட் அணியாத குற்றத்திற்காக ரூ.500 அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த அஜித் என்பவர் மாருதி ஆல்டோ கார் உரிமையாளராக உள்ளார். ஆனால் அவர் ஹெல்மெட் அணியாத காரணம்காட்டி போக்குவரத்து காவக்துறையினர் ரூ.500 அபராதம் விதித்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. “தலையில் பாதுகாப்பாகக் கட்டப்படாத தலைக்கவசத்தை அணிந்துகொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதித்ததற்காக” அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அவரிடம் ரசீது வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவரிடம் இரு சக்கர வாகனமே இல்லை … Read more

பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசுகளை குறை கூற முடியாது: பிரதமருக்கு மகாராஷ்டிர முதல்வர் பதில்

மும்பை: பாஜக ஆளாத மாநிலங்களில் பெட்ரோல் விலையை குறைக்க அம்மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதற்கு, பதிலடியாக எரிபொருள் விலை உயர்வுக்கு மாநில அரசு பொறுப்பேற்க முடியாது என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து உத்தவ் தாக்கரே கூறியது: “இன்று மும்பையில் ஒரு லிட்டர் டீசல் விலையில் மத்திய அரசுக்கு ரூ.24.38-ம், மாநில அரசுக்கு ரூ.22.37-ம் கிடைக்கிறது. அதே போல, பெட்ரோல் விலையில், ரூ.31.58 மத்திய வரியாகவும், ரூ. 32.55 … Read more