டெல்லியில் உள்ள ரயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து.!

டெல்லியில் உள்ள ரயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சப்ஜி மண்டியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வடக்கு ரயில்வேயின் சிக்னல் மற்றும் டெலிகாம் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாகப் பரவியதால் பல கிலோமீட்டர் தூரம் கரும்புகை பரவியது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் நீண்டநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். Source link

சீன மக்கள் சுற்றுலா விசாவில் வர தடை: ஒன்றிய அரசு அதிரடி

புதுடெல்லி: சீன நாட்டினர் சுற்றுலா விசாவில் இந்தியா வருவதற்கு  தடை விதிக்கப்பட்டுள்ளது என்று சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (ஐஏடிஏ) தெரிவித்துள்ளது. இந்திய மாணவர்களுக்கு சீனா விசா கொடுக்காததற்கு பதிலடியாக இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவலைத் தொடர்ந்து சீனாவில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களில் பயின்று வந்த  மாணவர்கள் இந்தியா திரும்பினர். சீனாவில் இருந்து இந்தியாவுக்கு திரும்பிய 22 ஆயிரம் இந்திய மாணவர்கள் மீண்டும் திரும்பி சென்று படிக்க முடியாத நிலையில் … Read more

சீனர்களுக்கு வழங்கிய சுற்றுலா விசாவை ரத்து செய்தது இந்தியா

புதுடெல்லி: சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலக நாடுகளை பாதிப்புக்கு உள்ளாக்கியது. இதையடுத்து, சீன பல்கலைக் கழகங்களில் படித்து வந்த ஏறக்குறைய 22,000 இந்திய மாணவர்கள் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். அதன்பின், அவர்களை சீனாவுக்கு திருப்பி அழைத்துக் கொள்ளும்படி இந்தியா பலமுறை வேண்டுகோள் வைத்தும் அது ஏற்கப்படவில்லை.  அவர்களை சீனாவுக்குள் நுழைய அந்நாட்டு அரசு அனுமதி மறுத்து விட்டது. இதனால் இந்திய மாணவர்கள் சீனாவில் தங்களது படிப்பை தொடர முடியாமல் கைவிட கூடிய சூழல் … Read more

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் திருப்பதியில் மே தரிசனம் டிக்கெட் நாளை வெளியீடு: ஆன்லைனில் முன்பதிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட், நாளை வெளியிடப்படுவதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டா நாளை காலை வெளியிடப்பட உள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த மாதம் முதல் தொடங்கப்பட்ட சிறப்பு தரிசனத்திற்கான டிக்கெட் … Read more

மகாராஷ்டிராவில் கைதான நவ்நீத் ராணா அவரது கணவர் ரவி ராணாவுக்கு 14 நாள் காவல்

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் வீடு முன் ஹனுமன் சாலீசா என்ற மந்திரத்தை கூறப்போவதாக அறிவித்த பெண் எம்.பி. நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் ரவி ராணா ஆகியோர் 14 நாள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கபட்டனர். மகாராஷ்டிராவில் அமராவதி தொகுதி சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா. இவரது கணவரும் பட்னேரா தொகுதி சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணாவும் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆதரவோடு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள். சமீபகாலமாக பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர். … Read more

வைகறையில் எழுந்து வானத்தை பாருங்கள்: தென்கிழக்கில் காத்திருக்கு அதிசயம்

புதுடெல்லி: `சூரிய குடும்பத்தை சேர்ந்த 4 கோள்கள் வரும் 29ம் தேதி அதிகாலை ஒரே நேர்கோட்டில் சந்திக்க உள்ளன. இதனைப் பார்ப்பதற்கு டெலஸ்கோப் தேவையில்லை,’’ என்று நாசா தெரிவித்துள்ளது. சூரிய குடும்பத்தை சேர்ந்த மிகப் பெரிய 4 கோள்களான செவ்வாய், வெள்ளி, சனி, வியாழன் ஆகிய நான்கும் வரும் 29ம் தேதி ஒரே நேர்கோட்டில் அடுத்தடுத்து வரிசையாக சந்திக்க உள்ளன. இவை அனைத்தும் ஒரே கோட்டில் சந்திப்பதை இரவு நேரத்தில் பார்க்க முடிந்தாலும், ஏப்ரல் 23ம் தேதியில் … Read more

ஜம்மு காஷ்மீரில் சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

பாலி (சம்பா): சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக ஜம்மு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு சூரிய சக்தி மின் நிலையம் உட்பட ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஜம்மு காஷ்மீர் சென்றார். கடந்த 2019-ம் ஆண்டு சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு … Read more

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஓட்டலில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்: 5 ஆண்கள், ஒரு பெண் அதிரடி கைது

பரிதாபாத்: பரிதாபாத்தில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து ஓட்டலில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 5 ஆண்கள் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அரியானா மாநிலத்தில் 2020ம் ஆண்டு பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் ஊழியரை, அதே நிறுவனத்தை சேர்ந்த ஐந்து ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுதொடர்பாக 5 ஆண்கள் மற்றும் ஒரு பெண் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் … Read more

வெல்லம், அப்பளம், சாக்லெட்டுகள் உள்பட 143 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த முடிவு: 10 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு; பெட்ரோல், டீசல் விலை எகிறிய நிலையில் ஒன்றிய அரசின் அடுத்த அடி

புதுடெல்லி: பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பளம், வெல்லம், சாக்லெட் உள்ளிட்ட 143 அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பை கொண்டு வரும் வகையில் கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டது. இதில் 5%, 12%, 18%, 28% என 4 பிரிவுகளில் வரி வசூலிக்கப்படுகிறது. … Read more

கோழி தீவனத்துக்காக 20 லட்சம் டன் கோதுமை: அரசுக்கு என்இசிசி கோரிக்கை

புதுடெல்லி: கோழி தீவனத்துக்காக, 20 லட்சம் டன் கோதுமை, அரிசி வழங்கும்படி ஒன்றிய அரசுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விடுத்துள்ள கோரிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் சோளம் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள பீகாரில், சோளத்தில் இருந்து இயற்கை எரிபொருள் தயாரிக்கும் திட்டத்துக்காக அதிகளவு சோளம் பயன்படுத்தப்படுவதாலும், ஏற்றுமதி அதிகரிப்பினாலும் கோழி தீவனத்துக்கான சோளத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.  இதனால், ரூ.18,000க்கு விற்பனையான ஒரு டன் சோளத்தின் விலை தற்போது ரூ.25,000 … Read more