டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் பதவிக்கு ஐசிஎம்ஆர் தலைவர் உட்பட 32 பேர் போட்டி

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் இயக்குனர் பதவிக்கு ஐசிஎம்ஆர் தலைவர் பல்ராம் பார்கவா உட்பட 32 பேர் போட்டியில் உள்ளனர். டெல்லியில் உள்ள எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் இயக்குனராக உள்ள  ரன்தீப் குலாரியா அடுத்த மாதம் 23ம் தேதி ஓய்வு பெறுகிறார். காலியாக உள்ள அப்பதவிக்கு  இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குனர் ஜெனரலாக உள்ள பல்ராம் பார்கவா, எய்ம்ஸ் மருத்துவமனை  எலும்பு மூட்டுவியல் துறை பேராசிரியர் ராஜேஷ் மல்கோத்ரா,விபத்து சிகிச்சை பிரிவு … Read more

கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டு கண்டெடுப்பு – டெல்லியில் பரபரப்பு

டெல்லி பழைய சீமாபுரியில், கேட்பாரற்று கிடந்த பையில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியின் பழைய சீமாபுரி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான பையில் வெடிகுண்டு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தினர். இதையடுத்து அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதம் காஜிபூர் பகுதியில் பூ மார்க்கெட்டில் கிட்டத்தட்ட 3 கிலோ வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. A suspicious bag was found on the road … Read more

"இன்னும் எத்தனைக் காலம்தான் நேரு மீதே பழி போடுவீர்கள்?” – மோடிக்கு கேள்வி எழுப்பிய மன்மோகன் சிங்கின் தெறிப்புகள்

சண்டிகர்: ”இன்னும் எத்தனைக் காலம் தான் நேரு மீதே பழி சொல்வீர்கள்?” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங். பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனை ஒட்டி மன்மோகன் சிங் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்துள்ளார். அதில் அவர் பேசியது: “ஒருபுறம் மக்கள் பணவீக்கத்தாலும், வேலைவாய்ப்பின்மையாலும் அவதிப்படுகின்றனர். மற்றொருபுறம் 7 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள ஓர் அரசு தனது தவறுகளை ஒப்புக்கொண்டு … Read more

கோட்டயம் பிரதீப் மறைவுக்கு கேரள முதலமைச்சர், நடிகர், நடிகைகள் அஞ்சலி <!– கோட்டயம் பிரதீப் மறைவுக்கு கேரள முதலமைச்சர், நடிகர், நடிக… –>

பிரபல மலையாள நடிகரான கோட்டயம் பிரதீப் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 61. தட்டதின் மறயத்து என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமடைந்த அவர் தமிழிலிலும் விண்ணைத் தாண்டி வருவாயா ,ராஜா ராணி, மற்றும் நண்பேண்டா உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். உடல்நலம் சரியில்லாத நிலையில் கோட்டயம்  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மாரடைப்பால் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது இல்லத்தில் நடைபெற்ற இறுதி சடங்கில் மலையாள திரைப்பட பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி … Read more

அமரீந்தர் சிங்கை நீக்கியது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால் வெற்றி பெறும் முனைப்புடன் அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், பஞ்சாப் சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் சார்பில் பதேகார்க் நகரில் பிரசார கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: போதைப் பொருள் … Read more

தனியார் வேலையில் 75% இடஒதுக்கீடு அரியானா சட்டத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்ற தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: அரியானா மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கு தனியார் துறை வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்துக்கு பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.அரியானா மாநிலத்தில் தனியார் துறை வேலைகளில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை இம்மாநில அரசு கொண்டு வந்தது. இதற்கு தடை விதிக்கும்படி, மாநிலத்தில் உள்ள பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தொழில் நிறுவனங்கள், பஞ்சாப் – அரியானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. … Read more

விமர்சன கணைகளை வீசி வந்த சந்திர சேகர ராவ்; பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி!

தெலங்கானா மாநில முதல்வர் சந்திர சேகர ராவின் 68வது பிறந்தநாளையொட்டி, அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி.  தெலங்கானா முதல்வரும், ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவருமான சந்திர சேகர ராவுக்கும், பாஜகவுக்கும் இடையே  அண்மை காலமாக வார்த்தைப் போர் நிலவி வருகிறது. கடந்த பிப்.5ஆம் தேதி ராமானுஜர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக, தெலங்கானா வந்திருந்தார் பிரதமர் மோடி. ஆனால் அவரை வரவேற்பதற்கு சந்திர சேகர ராவ் செல்லவில்லை. உடல்நிலையை காரணம் காட்டி புறக்கணித்தார். … Read more

'ஹிஜாப் தடை, குர்ஆனை தடை செய்வதற்கு சமம்' – கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள்

பெங்களூரு: “ஹிஜாப் பிரச்சினை ஏழை இஸ்லாமிய பெண்களின் மன ஆரோக்கியத்தை சீர்குலைக்கிறது. ஹிஜாப்பை தடை செய்வது குர்ஆனை தடை செய்வதற்கு சமம்” என்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஹிஜாப் தடைக்கு எதிராக உடுப்பி இஸ்லாமிய மாணவிகள், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணை மூன்றாவது நாளாக இன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடந்தது. தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஷ்தி, நீதிபதிகள் ஜே.எம்.காஷி, கிருஷ்ணா தீட்ஷித் ஆகியோர் அடங்கிய … Read more

ஐதராபாத்தில் மணி ஹெய்ஸ்ட் பாணியில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட கும்பல் கைது <!– ஐதராபாத்தில் மணி ஹெய்ஸ்ட் பாணியில் ஆட்கடத்தலில் ஈடுபட்ட க… –>

நெட்பிளிக்சில் வெளியான மணி ஹெய்ஸ்ட் வெப்தொடரால் ஈர்க்கப்பட்டு ஆட்கடத்தலில் ஈடுட்ட கும்பலை ஐதராபாத் காவல்துறையினர் கைது செய்தனர். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி வெளியான அந்த தொடரால் கவரப்பட்ட ஐதராபாத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஒரு பெண் உட்பட 4 பேருடன் இணைந்து ஆட்கடத்தலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், ஐதராபாத்தில் பூ வியாபாரம் செய்து வரும் பிரசாந்த் என்பவரை காணவில்லை என அவரது தாய் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இந்த சமயத்தில் பிரசாந்தின் சகோதரரை தொடர்பு கொண்டு கடத்தல் … Read more

மன்மோகன் சிங்கிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை- நிர்மலா சீதாராமன்

புதுடெல்லி: பாஜக தலைமையிலான மத்திய அரசையும், மத்திய அரசின் கொள்கைகளையும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக விமர்சனம் செய்தார்.  ‘இந்தியாவில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிறார்கள், ஏழைகள் மேலும் ஏழையாகிறார்கள். பாஜகவின் பிரித்தாளும் கொள்கையால் அரசியலமைப்பு பலவீனமடைந்துள்ளது. பொருளாதாரக் கொள்கைகளில் பாஜகவுக்கு துளியும் புரிதலில்லை. வெளியுறவுக் கொள்கையிலும் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. சீனா நமது எல்லையில் ஊடுருவி ஆக்கிரமித்துள்ளது’ என்றும் மன்மோகன் சிங் சரமாரியாக குற்றம்சாட்டினார். மன்மோகன் சிங்கின் இந்த குற்றச்சாட்டிற்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் … Read more