மேகதாது விவகாரம் பற்றி டெல்லியில் கர்நாடகா முதல்வர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட முடியாது என ஒன்றிய அரசு கூறியதை தொடர்ந்து, டெல்லியில் சட்ட நிபுணர்களுடன் கர்நாடகா முதல்வர் நேற்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிய அணை கட்ட முயற்சி செய்து வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடக்கிறது. இந்நிலையில், ‘தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகதாதுவில் அணை கட்ட … Read more

காஷ்மீர் குறித்து ஹூண்டாய் பாகிஸ்தான் சர்ச்சை கருத்து: மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் வருத்தம் தெரிவித்த தென் கொரிய அமைச்சர்

புதுடெல்லி: காஷ்மீர் தொடர்பாக ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம் வெளியிட்ட பதிவுக்கு, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரிடம் தென்கொரிய வெளியுறவு அமைச்சர் வருத்தம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிப்ரவரி 5-ம்தேதி காஷ்மீர் ஒற்றுமை தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, ஹூண்டாய் பாகிஸ்தான் நிறுவனம், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூர்வோம். அவர்கள் மேற்கொண்டு வரும் சுதந்திரப் போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாக இருப்போம்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது. இந்தப் பதிவுக்கு இந்தியாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்புகளைப் புறக்கணிக்க … Read more

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் – வெளியானது சூப்பர் அறிவிப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என, முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்து உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில், மொத்தம் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் வரும் 10 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஏழாவது கட்டத் தேர்தல், மார்ச் மாதம் 7 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஏழு … Read more

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து.! <!– கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து.! –>

கேரளாவில் பெருந்தொற்று குறைந்து வருவதையடுத்து ஞாயிற்றுக் கிழமைகளில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசின் உயர்மட்டக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகள் முழுமையாகச் செயல்படும் என்றும் அதுவரை 50 விழுக்காடு மாணாக்கர்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலுவா சிவராத்திரி, மாரமன் … Read more

ஹிஜாப் விவகாரம் – மாணவர்கள் அமைதி காக்க கர்நாடக உயர்நீதிமன்றம் வேண்டுகோள்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் எனப்படும் தலையை மறைக்கும் வகையில் துணி அணிந்து வந்த  6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.  இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  ஹிஜாப் அணியும் மாணவிகளை வகுப்புக்குள் அனுமதித்தால் காவித் துண்டு அணிந்த எங்களையும் அனுமதிக்க … Read more

காஷ்மீர் பற்றி பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஹூண்டாய் சர்ச்சை கருத்து : ஒன்றிய அரசு அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த ஹூண்டாய் கார் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது. மேலும் தென் கொரிய அரசும் வருத்தம் தெரிவித்துள்ளது. காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தானில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 5ம் தேதி ‘காஷ்மீர் ஒற்றுமை தினம்’ கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பாகிஸ்தானில் உள்ள தென் கொரியாவை சேர்ந்த பிரபல ஹூண்டாய் கார் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டிவிட்டரில், ‘காஷ்மீர் சகோதரர்களின் தியாகத்தை நினைவு கூர்வோம். அவர்களின் சுதந்திர போராட்டத்தில் ஆதரவாக இருப்போம்’ … Read more

'லவ் ஜிகாத்'துக்கு 10 ஆண்டு சிறை, இலவசமாக ஸ்கூட்டர், 2 சிலிண்டர் – உ.பி பாஜக தேர்தல் அறிக்கையின் அம்சங்கள்

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘லவ் ஜிகாத்’ குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், 1 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என பாஜக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளது. உத்தரப் பிரதேச சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை தேர்தல் நடைபெறுகிறது. கரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலுக்காக ஆளும் பாஜக ‘லோக் கல்யாண் சங்கல்ப் பத்ரா … Read more

"போதும் நிறுத்திக்குவோம்".. பி.கே.வுக்கு குட்பை சொல்லத் தயாராகும் திரினமூல்!

பிரஷாந்த் கிஷோருக்கு ஏற்கனவே திமுக டாட்டா காட்டி விட்ட நிலையில் அடுத்து திரினமூல் காங்கிரஸ் கட்சியும் பி.கே.வுடனான தொடர்புகளை முடித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாம். தேசிய அளவில் குறுகிய காலத்தில் விஸ்வரூபம் எடுத்த தேர்தல் உத்தி வகுப்பாளர் என்றால் அது பிரஷாந்த் கிஷோராகத்தான் இருக்க முடியும். முதலில் நரேந்திர மோடி, பிரதமராக வருவதற்கான உத்திகளை வகுத்துக் கொடுத்தார். அதுதான் அவருக்கான விசிட்டிங் கார்டாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தேசிய அளவில் பல்வேறு கட்சிகளுக்கும் உத்திகளை வகுத்துக் கொடுத்துள்ளார். ஆந்திராவில் … Read more

டெல்லியில் நாளை மழை பெய்தால் காற்றின் தரம் மேம்பாடு அடையக்கூடும் – வானிலை மையம் <!– டெல்லியில் நாளை மழை பெய்தால் காற்றின் தரம் மேம்பாடு அடையக… –>

டெல்லியில் காற்றின் தரம் குறைந்து தொடர்ந்து மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. இன்று அங்கு காற்றின் தரக்குறியீடு 280 என்ற அளவில் பதிவாகி உள்ளது. டெல்லியை ஒட்டியுள்ள உத்திரப்பிரதேச மாநிலத்தின் நொய்டாவில் 297 ஆகவும், ஹரியானாவின் குருகிராமில் 200 ஆகவும் காற்றின் தரக்குறியீடு உள்ளது. நாளை எதிர்பார்த்தபடி மழை பெய்யும்பட்சத்தில் மாலை வேளையில் காற்றின் தரம் மோசமான நிலையில் இருந்து மிதமான நிலைக்கு மேம்பாடு அடையக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. Source link

ஹிஜாப் விவகாரம் – கர்நாடகாவில் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக சர்ச்சை

சிவமொக்கா: கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில்,  கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம் ஒன்றின் கீழ் நின்று கொண்டு, ஜெய் ஸ்ரீராம் என கோஷங்களை எழுப்பினர்.  அவர்கள் காவி கொடிகளை அசைத்தபடியும் காணப்பட்டனர். ஆனால் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை என்று சிவமொக்கா எஸ்.பி. … Read more