பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக சன்னியை 'டிக்' செய்ததால் காங்கிரஸ் கரைசேருவது கடினமா? – ஒரு பார்வை

புதுடெல்லி: ”பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக்கியது காங்கிரஸுக்கு இழப்பைத் தரும்” என்ற கருத்தை, பஞ்சாப் பல்கலைகழகத்தின் ஓய்வுபெற்ற சமூக அறிவியல் பேராசிரியரான மன்ஜித் சிங் முன்வைத்துள்ளார். இது குறித்து பேராசிரியர் மன்ஜித்சிங் கூறும்போது, “பஞ்சாபில் 32 சதவிகிதம் உள்ள பட்டியலினத்தவர்களில் 39 வகையானப் பிரிவுகள் உள்ளன. இவர்களது வாக்குகளை முழுமையாகப் பெற காங்கிரஸ் திட்டமிடுகிறது. இதற்கு, இந்த சட்டப்பேரவை தேர்தலில் சிரோமணி அகாலி தளம் கட்சியுடன் கூட்டாகப் போட்டியிடும் பகுஜன் சமாஜ் … Read more

UP BJP Manifesto 2022: இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிய பாஜக!

உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு வரும் 10 ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், அங்கு ஆளுங்கட்சியாக உள்ள பாஜக தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: * 60 வயதிற்கு மேற்பட்ட மூதாட்டிகளுக்கு மட்டும் அரசு பேருந்தில் இலவச பயணம், * கல்லூரி மாணவர்களுக்கு இலவச இருசக்கர வாகனம் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்.. மோடி போட்ட … Read more

கொட்டும் பனிக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு மூலம் எல்லை கண்காணிப்பு <!– கொட்டும் பனிக்கு மத்தியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு … –>

உத்தரகாண்டில் கொட்டும் பனிக்கு மத்தியில் பனிச் சறுக்கு மூலம் வீரர்கள் எல்லைக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தியா, சீன எல்லைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக கடும் பனிப் பொழிவு ஏற்பட்டுள்ளது. கால் மூட்டு அளவுக்கு கொட்டிக் கிடக்கும் பனியில் இந்திய வீரர்கள் பனிச் சறுக்கு செய்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பனிச்சறுக்கு மூலம் அதிக இடங்களை கண்காணிக்க முடிவதாகவும், விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பனிச்சறுக்கில் ஈடுபட வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாக … Read more

ஆதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே காட்டு யானை தாக்கி சிறுமி பலி

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே புத்தன்சிறாவை சேர்ந்தவர் நிகில் (வயது 35). நிகிலின் தாயார் இறந்து அவரது ஈமச்சடங்குகள் ஆதிரப்பள்ளி நீர் வீழ்ச்சி அருகே உள்ள ஒரு கோவிலில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள நிகில், அவரது 5 வயது மகள் அக்னிமியாவுடன் சென்றார். இவர்களுடன் நிகிலின் தந்தை ஜெயனும் இருந்தார். மூவரும் நீர்வீழ்ச்சியை அடுத்துள்ள காட்டுபகுதியில் இருக்கும் கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலுக்கு அருகே உள்ள காட்டுப் பகுதியில் இருந்து திடீரென யானை … Read more

சில தலைவர்கள் தங்களுடைய தொகுதியை கூட கவனிப்பதில்லை: ராகுல் காந்தி மீது பிரதமர் மோடி சாடல்..!

டெல்லி: குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது மாநிலங்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நூறாண்டுகளில் மனிதகுலம் கொரோனாபோன்ற ஒரு தொற்று நோயை பார்த்ததில்லை. கொரோனா பரவ துவங்கிய போது, இந்தியாவில் என்ன ஆகும், இதனால் உலக நாடுகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என விவாதிக்கப்பட்டது. ஆனால், தன்னம்பிக்கை மற்றும் 130 கோடி இந்தியர்களின் முயற்சியால், இந்தியாவின் முயற்சிகளுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைத்தது. பெருந்தொற்று காலத்தில், இந்தியா தலைமைப்பண்புடன் செயல்பட்டது. … Read more

என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய வாவா சுரேஷ் பேட்டி

கோட்டயம்: கேரளாவின் பிரபலமான பாம்பு மீட்பர் வாவா சுரேஷ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அப்போது அவர், என் உயிர் உள்ளவரை பாம்புகளை மீட்பேன் என்று கூறினார். ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து வனத்தில் விட்டு பல்லுயிர் சமன்பாட்டைப் பேண உதவிய கேரளாவைச் சேர்ந்த இளைஞர் வாவா சுரேஷை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜ நாகம் தீண்டியது. இதனால் அவர் கோட்டயம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சுயநினைவு இழந்த நிலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை … Read more

ஒரே இலக்கணப் பிழை.. இவரெல்லாம் வைஸ் சான்சலரா.. வெளுத்தெடுத்த வருண் காந்தி!

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள சாந்திஸ்ரீ துல்லிப்புடி பண்டிட் வெளியிட்டுள்ள பிரஸ் ரிலீஸை பாஜக எம்.பி. வருண் காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் உள்ள புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக சாந்திஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனம் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. தீவிர இந்துத்வா ஆதரவாளராக தன்னை அவ்வப்போது காட்டிக் கொண்டவர் சாந்திஸ்ரீ. அவர் போட்ட பழைய டிவீட்டுகளை பலரும் எடுத்து தற்போது வைரலாக்கி வருகின்றனர். டெல்லி விவசாயிகள் போராட்டத்தைக் கண்டித்தவர் இவர். … Read more

கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள் பிறந்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் <!– கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள… –>

அசாம் மாநிலம் கவுகாத்தி உயிரியல் பூங்காவில் புதுவரவாக 2 புலிக் குட்டிகள் பிறந்துள்ளன. கஸி பெண் புலி கடந்த வாரம் இரண்டு ஆண் குட்டிகளை ஈன்றதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிதாக பிறந்த 2 புலிக் குட்டிகளையும் சேர்ந்த பூங்காவில் உள்ள மொத்த புலிகளின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது. கடந்த ஆண்டு சுல்தான் மற்றும் சுரேஷ் என்ற 2 புலிக் குட்டிகளுக்கு தாயான கஸி தற்போது மேலும் 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தாயும், சேய்களும் நலமுடன் … Read more

ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்காலை விழா நாளை தொடக்கம்

கேரளாவில் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் பொங்காலை விழா நடைபெறும். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்காலை விழாவன்று திருவனந்தபுரம் நகர் முழுக்க பல லட்சம் பெண்கள் ஒரே இடத்தில் கூடி பொங்கலிடுவார்கள். இக்கோவிலில் கடந்த 1997-ம் ஆண்டு நடந்த பொங்கல் விழாவில் 15 லட்சம் பெண்கள் கலந்து … Read more

உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுவதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள்  இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .