பிகினி, ஹிஜாப், முக்காடு.. ஆடை எதுவாக இருந்தாலும் அது பெண்ணின் உரிமை: பிரியங்கா காந்தி

பிகினி, ஹிஜாப், முக்காடு என எந்த வகை ஆடையாக இருந்தாலும் அதில் எதை அணிவது என்பது பெண்ணின் உரிமை என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்குஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இதை கண்டித்து … Read more

பிரதமரின் பேச்சு: சொன்னதும் சொல்ல மறந்ததும்

குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் திங்களன்று ஒன்றரை மணிநேரத்திற்கும் மேலாகப் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். ராகுல் காந்தி உட்படப் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களின் குறிப்பான பிரச்சினைகள் பற்றிய கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கவில்லை. அவரது பதில் எதிர்க்கட்சிகளைக் கடுமையாகச் சாடுவதாக இருந்தது. ராகுல் காந்தி எழுப்பிய வேலையின்மை , கூட்டாட்சி கொள்கைக்கு ஆபத்து, நாட்டின் அடிப்படை அமைப்புகளின் சீர்குலைவு ஆகியவை பற்றி அவர் பதில் ஏதும் பேசவில்லை. தொலைக்காட்சி விவாதத்திற்கு வரும் … Read more

பீகாரில் கள்ளச்சாராயம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு <!– பீகாரில் கள்ளச்சாராயம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக… –>

பீகாரில் கள்ளச்சாராயக் கும்பல்களுக்கு எதிராக டிரோன்கள், மோப்பநாய்கள், விசைப் படகுகள் உதவியுடன் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். பீகாரில் 2016 ஏப்ரல் முதல் முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளச்சாராயம் அருந்துவதால் உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சித்ததற்குப் பதிலளித்த முதலமைச்சர் நிதிஷ்குமார், கள்ளச்சாராயம் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். முழு மதுவிலக்கு நடைமுறைப்படுத்திய பின் ஒருகோடியே 64 இலட்சம் பேர் குடிப்பழக்கத்தை விட்டுள்ளதாக முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும், … Read more

டெல்லியில் பரபரப்பு: சாக்குப் பையில் அடைக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்பு

வடக்கு டெல்லி புராரி பகுதி பார்சிராம் என்கிளேவ் அருகே உள்ள யமுனா புஷ்டா என்ற இடத்தில் ரத்த கறைகளுடன் சாக்கு பை மூட்டை ஒன்று கிடப்பதாக நேற்று போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சாக்கு பையை மீட்டு சோதனை செய்ததில், அடையாளம் தெரியாத ஆண் சடலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வடக்கு துணை போலீஸ் கமிஷனர் சாகர் சிங் கல்சி கூறியதாவது:- சாக்கு பையில் சுமார் 30 வயது … Read more

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு அல்லாஹு அக்பர் என்று சிங்கம் போல் கர்ஜித்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிப்பு..!!

பெங்களூரு: கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவிக்கு பாத்திமா ஷேக் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காவித்துண்டு அணிந்து ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டவர்களுக்கு மத்தியில் அல்லாஹு அஃபர் என இஸ்லாமிய மாணவி துணிச்சலாக பதில் முழக்கமிட்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது. மாண்டியாவில் உள்ள பி.ஈ.எஸ். கல்லூரியில் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக இந்து அமைப்பு மாணவர்கள் காவித்துண்டு போராட்டம் நடத்தி கொண்டிருந்திருந்தனர். அப்போது இஸ்லாமிய மாணவி ஹிஜாப் அணிந்து இருசக்கர வாகனத்தில் … Read more

ட்ரெக்கிங் சென்றபோது விபரீதம்: மலைச்சரிவில் 40 மணி நேரம் சிக்கித் தவித்த கேரள இளைஞரை ராணுவம் மீட்டது

பாலக்காடு: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மலப்புரத்தில் நண்பர்களுடன் ட்ரெக்கிங் சென்ற இளைஞர் மலைச்சரிவில் இருந்த சிறிய இடுக்கில் சிக்கிக் கொள்ள இரண்டு நாட்களுக்குப் பின்னர் அவரை ராணுவம் மீட்டுள்ளது. ஆர்.பாபு (23) என்ற இளைஞரும் அவரது இரண்டு நண்பர்களும் திங்கள்கிழமையன்று மலப்புரத்தில் உள்ள செராட் மலைக்கு ட்ரெக்கிங் சென்றனர். மலை உச்சிக்கு அவர்கள் மூவரும் பயணித்தனர். மற்ற இருவரும் இடையிலேயே பின்தங்கிவிட பாபு மட்டும் உச்சிக்குச் சென்றார். ஆனால், அங்கிருந்து அவர் கால் இடரி கீழே … Read more

பிகினியோ, முக்காடோ.. அது பெண்களின் உரிமை.. துன்புறுத்தாதீர்கள்.. பிரியங்கா ஆவேசம்

பெண்கள் என்ன உடை அணிய வேண்டும் என்பது அவர்களது உரிமையாகும். அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை அணிய அவர்களுக்கு உரிமை உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் பியூசி கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீரென தடை விதிக்கப்பட்டது. அவர்கள் ஹிஜாப்புடன் கல்லூரிக்குள் வரக் கூடாது என்று தடுக்கப்பட்டனர். இதனால் போராட்டம் வெடித்தது. தற்போது இது கர்நாடகத்தின் பல்வேறு கல்லூரிகளுக்கும் பரவியதால் பெரும் … Read more

மத்திய பட்ஜெட்டில் கேரளத்துக்குக் குறைவாக நிதி.. நாடாளுமன்றத்தின் முன் கேரள எம்பிக்கள் போராட்டம்.! <!– மத்திய பட்ஜெட்டில் கேரளத்துக்குக் குறைவாக நிதி.. நாடாளுமன… –>

கேரள மாநிலத்துக்கு மத்திய பட்ஜெட்டில் குறைவாக நிதி ஒதுக்கியுள்ளதைக் கண்டித்து அந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கோரிக்கை அட்டைகளுடன் நாடாளுமன்ற வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரள மாநிலத்துக்குப் போதுமான நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என இடதுசாரிக் கட்சிகளும், காங்கிரசும் குற்றஞ்சாட்டியுள்ளன. மத்திய அரசு பாரபட்சமாக நடந்து கொள்வதாக கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்றத்தின் வாயில் முன் கோரிக்கை அட்டைகளுடன் கேரள எம்பிக்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.  Source link

10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்க கூடாது- மத்திய மந்திரி பேச்சு

புதுடெல்லி: 10 ரூபாய் நாணயங்களில் போலிகள் நடமாடுவதாகவும், இதனால் கடைகளிலும், சில இடங்களிலும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்ற மேல்-சபையில் அ.தி.மு.க. எம்.பி. விஜயகுமார் ஒரு கேள்வி எழுப்பினார். அதில், “நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் போலியானவை என கருதி ஏற்றுக் கொள்ள மறுக்கப்படுகிறதா?” என்றார். இதற்கு பதில் அளித்து மத்திய நிதித் துறை இணை மந்திரி பங்கஜ் சவுதாரி கூறியதாவது:- ரிசர்வ் வங்கியால் … Read more

அமலாக்கத்துறையை பயன்படுத்தி பாஜக அரசு அதிகார அத்துமீறலில் ஈடுபடுவது குறித்து அவையில் பேச வேண்டும் : மாநிலங்களவை தலைவருக்கு கடிதம்!!

மும்பை : அமலாக்கத்துறையை பயன்படுத்தி அதிகார அத்துமீறலில் ஈடுபடும் போக்கு அதிகரித்து இருப்பதாகவும் மராட்டியத்தில் சிவசேனா ஆட்சியை கலைக்க ஒத்துழைக்குமாறு சிலர் தன்னை அணுகியதாகவும் சிவசேனா எம்.பி. சஞ்ஜய் ராவத் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், சிவசேனா எம்பிக்கள், முன்னணிநிர்வாகிகள் நிர்வாகிகள், அவர்களின் உறவினர்கள், நண்பர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி துன்புறுத்துவது அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். 10, 17 ஆகிய … Read more