‘‘சமத்துவத்தின் சிலை சீனாவில் தயாரிக்கப்பட்டது – இதுதான் ஆத்ம நிர்பார்’’ – ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: சமத்துவச் சிலை சீனாவில் உருவாக்கப்பட்டது என்று சுட்டிக்காட்டிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசின் ஆத்ம நிர்பார் கொள்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டுகள் நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பத்ம பீடத்தின் மீது 216 அடி உயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை … Read more

சீன தயாரிப்பான ஆத்மநிர்பார்: பிரதமர் மோடியை கலாய்த்த ராகுல் காந்தி!

ஹைதராபாத் சம்ஷாபாத் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் வைணவ ஆச்சாரியாரான ராமானுஜருக்கு 216 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு சமத்துவ சிலை என பெயரிடப்பட்டுள்ளது. ராமானுஜரின் 1000 ஆண்டுகள் பூர்த்தியானதன் நினைவாக ரூ.1,200 கோடி செலவில், 45 ஏக்கர் பரப்பளவில் திரிதண்டி சின்ன ஜீயர் சுவாமிகளின் ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்டமான சமத்துவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை பிரதமர் மோடி கடந்த 5-ம் தேதி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதனை தொடர்ந்து இச்சிலையையும், இங்கு கட்டப்பட்டுள்ள … Read more

நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது கொரோனாவால் பாதித்தவர்கள் விரைவாக குணமடைவதாக ஆய்வில் தகவல் <!– நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது கொரோனாவா… –>

கொரோனா தொற்று பாதித்து ஆக்சிஜன் குறைபாடால் அவதிப்படும் நோயாளிகளை குறைந்த செலவில் விரைவாக குணமடையச் செய்யும் வகையில் நைட்ரிக் ஆக்ஸைடு வாயுவை முகரச் செய்யும் சிகிச்சை குறித்து கேரளாவின் அம்ரிதா மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அம்ரிதா விஷ்வ வித்யபீடத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் சேர்ந்து ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், அம்ரிதா மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை எடுத்துக் கொண்டவர்கள் மீது சோதனை செய்து பார்க்கப்பட்டதில், சாதாரண சிகிச்சையோடு நைட்ரிக் ஆக்ஸைடு வாயு சிகிச்சை அளிக்கப்படும்போது, கொரோனா வைரஸ் கிருமிகளை … Read more

சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்க எதிர்ப்பு தெரிவித்து பிப். 14 முதல் அன்னா ஹசாரே உண்ணாவிரதம்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அனுமதி அளித்து புதிய சட்டத்தை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் ஒயின் விற்பனை செய்யலாம்.  இதற்கு வருடத்திற்கு ரூ.5,000 கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. மாநில அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்க்கட்சியான பா.ஜ.க. கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், சூப்பர் மார்க்கெட்டில் ஒயின் விற்கும் … Read more

11 வயது சிறுமி பலாத்கார வழக்கு; தாய், கள்ளக்காதலனுக்கு 20 வருடம் கடுங்காவல்: கேரள நீதிமன்றம் அதிரடி

திருவனந்தபுரம்: கேரள மாநில் பத்தனம்திட்டா அருகே 11 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன், உடந்தையாக இருந்த தாய் ஆகியோருக்கு 20 வருடம் கடுங்காவல் தண்டனை  விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் கோன்னி பகுதியை ேசர்ந்தவர் ரிஜா (31, பெயர் மாற்றம்). இவருக்கு 11 வயதில் மகளும், 9 வயதில் மகனும் உள்ளனர். கணவனை விவாகரத்து செய்தவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த விவாகரத்தான அஜி அச்சுதனுக்கும் (46) இடையே … Read more

பெங்களூரு நகரில் இரண்டு வாரங்களுக்கு தடை..!!

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொகா, பாகல்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால் போலீஸ் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதைதொடர்ந்து 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.நிலைமை கட்டுக்கடங்காமல் செல்கிறது. இதனால் 3 நாட்களுக்கு அனைத்து உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மூட கர்நாடக முதல்வர் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது  இந்நிலையில், கர்நாடக அரசின் ஒரே சீருடை … Read more

பர்தா விவகாரம்.. கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் அல்ல.. உள்துறை அமைச்சர் தகவல்..!

கர்நாடகாவில் பர்தா விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில் நேற்று சிவமொகா, பாகல் கோட்டையில் கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனால், போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் கூட்டத்தை கலைத்தனர். இதை தொடர்ந்து, 3 தாலுகாக்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பர்தா விவகாரம் குறித்து கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், “பர்தா விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மாணவர்கள் அல்ல. கர்நாடகாவில் … Read more

பள்ளி வளாகத்தில் ’ஜெய் ஸ்ரீராம்’, ’அல்லாஹ் அக்பர்’ கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது: கர்நாடக அமைச்சர் காட்டம்

பெங்களூரு: ‘ஜெய் ஸ்ரீராம்‘ என்றோ, ‘அல்லாஹ் அக்பர்‘ என்றோ பள்ளி வளாகத்தில் கூறுவதை ஊக்கப்படுத்த முடியாது என்று கர்நாடக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “சட்டம்-ஒழுங்கை யாரும் கையில் எடுத்துவிட முடியாது. எந்தத் தவறான செயலையும் அரசு விட்டுவைக்காது. மாண்டியாவில் அந்த மாணவி வரும்போது எந்த மாணவர்களும் அவரை சுற்றி வளைக்கவில்லை. எந்த மாணவர்களும் அவர் அருகில் செல்லவில்லை. ’ஜெய் ஸ்ரீராம்’ என்றோ, ’அல்லாஹ் அக்பர்’ என்றோ பள்ளி வளாகத்தில் … Read more

3 நாட்கள் சிறப்பு விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!

பஞ்சாயத்து தேர்தலில் வாக்களிக்க வசதியாக அரசு ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் சிறப்பு விடுமுறை அளித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஒடிசா மாநிலத்தில், முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், ஐந்து கட்டங்களாக பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வரும் 16 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், கடைசி மற்றும் ஐந்தாவது கட்ட தேர்தல், 24 ஆம் தேதி நடைபெற … Read more

உ.பி. தேர்தல் – காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா காந்தி

லக்னோ: உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக  சட்டசபை தேர்தல் நடக்கிறது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அங்கு ஆளும் பா.ஜ.க.வுக்கும், சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே ‘நீயா, நானா? என்கிற அளவுக்கு பலத்த போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, முதல் கட்ட தேர்தல், மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. தேர்தல் கமிஷன் விதிமுறைப்படி வாக்குப்பதிவுக்கு 48 மணி … Read more